ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா: இவ்வளவு அதிகாரம் கொண்டதா? திரையுலகினர் கூறுவதென்ன?

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவின் ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா அரசுக்கு அளப்பரிய சென்சார் அதிகாரத்தை வழங்கும் என்று இந்தியாவின் முன்னணி சினிமா இயக்குநர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால், அது சென்சார் சான்று வழங்கப்பட்டு வெளியான படத்தை கூட மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்த வழி ஏற்படும்.
இந்தியாவில் தயாரிக்கப்படும் சினிமாக்களுக்கு மும்பையில் இருக்கும் சென்சார் குழு சான்றளிக்காமல், அதை பொதுவெளியில் திரையிட முடியாது. சென்சார் குழுவுக்கு வட்டார அலுவலகங்களும் இருக்கின்றன.
சினிமா தரப்பினர், கடந்த பல பத்தாண்டுகளாக சென்சார் குழுவை எதிர்த்து போராடி வருகிறார்கள். சில படங்கள் தடை செய்யப்பட்டிருக்கின்றன, பல படங்களில் கட்டாயப்படுத்தி பல காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
ஆண்- பெண் நெருக்கமான காட்சிகளில் வரும் பாடல் வரிகள் தொடங்கி, வரலாறு மற்றும் கதைகளில் குறிப்பிடும் நபர்களை தவறாக சித்தரிப்பது அல்லது சர்ச்சைக்குரிய விதத்தில் காட்சிப்படுத்துவது என பல காரணங்களுக்காக எதிர்ப்புகள் எழுந்திருக்கின்றன.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
நரேந்திர மோதி தலைமையிலான இந்திய அரசு கொண்டுவர முயற்சிக்கும் இந்த புதிய விதிமுறை, இந்த ஒட்டுமொத்த செயல்பாட்டையும் இன்னும் சிக்கலாக்கிவிடும் என்கிறார்கள் திரைத் துறையினர்.
ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா 2021 இந்திய ஒன்றிய அரசுக்கு சில திருத்த அதிகாரங்களை வழங்குகிறது. ஒரு படத்துக்கு வழங்கிய சான்றை, பார்வையாளர்களின் புகாரின் பேரில் திரும்பப் பெற முடியும்.
இதில் சென்சார் குழுவுக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாத போது கூட சான்றை திரும்பப் பெறலாம் என பொருள் தருகிறது இந்த சட்ட வரைவு.
இந்த வாரத் தொடக்கத்தில் இந்த புதிய திருத்தச் சட்ட மசோதாவை எதிர்த்து அனுராக் காஷ்யப், நந்திதா தாஸ், ஷபானா அஸ்மி, ஃபரான் அக்தர் உட்பட 140 திரைத் துறையினர், இந்திய ஒன்றிய அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதினர்.
இச்சட்டம், ஏற்கனவே இருக்கும் சென்சார் நடைமுறைக்கு மேல் கூடுதலாக ஒரு அடுக்கை உருவாக்குகிறது என்று அவர்கள் கூறுகின்றனர்.
"நிறைய மிரட்டல்கள், காழ்ப்புணர்ச்சி, சுரண்டல், கூட்டாக சேர்ந்து காட்சிகளை நீக்கக் கோருவது போன்ற பிரச்சனைகள் எழும் என்பதால் இச்சட்டம், திரைத் துறையினரை அரசின் முன் பலவீனமான துறையாக நிறுத்தும்." என அக்கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளவர்களில் ஒருவர் கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
இப்படி ஒருபக்கம் எதிர்ப்பு வலுத்தாலும், மறுபக்கம் இந்திய சினிமாவின் பழம்பெரும் இயக்குநர்களில் ஒருவரான ஷியாம் பெனெகல், இந்த சட்டங்களில் பெரிய பிரச்சனை ஒன்றும் இல்லை என கூறியுள்ளார்.
"ஒரு படத்துக்கு ஒரு முறை சான்றளிக்கப்பட்டால், அது எப்போதைக்கும் சான்றளிக்கப்பட்டதாக பொருளல்ல. ஒரு காலகட்டத்தில் சரியாக இருந்தது, இப்போதைக்கு சரியாக இல்லாமல் போகலாம். எனவே சினிமாவை மீண்டும் பரிசீலனைக்கு எடுப்பது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை" என இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையிடம் கூறியுள்ளார் பெனெகல்.
கருத்து சுதந்திரம் மற்றும் அரசின் மீதான விமர்சனத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக, செயற்பாட்டாளர்கள் மற்றும் எதிர்கட்சித் தலைவர்களால் தொடர்ந்து நரேந்திர மோதி தலைமையிலான அரசு விமர்சிக்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் போன்ற ஓடிடி தளங்கள் கூட இந்திய அரசின் கோபத்துக்கு ஆளானது நினைவுகூரத்தக்கது. சிலர் ஓடிடி தளங்கள் மீது காவல் துறையில் புகாரளித்ததும் குறிப்பிடத்தக்கது.
தொழில்நுட்ப மற்றும் சமூக வலைத்தள நிறுவனங்களிடம் சட்ட அமலாக்க அமைப்புகள் அல்லது நீதித் துறை அமைப்புகள் நீக்கக் கோரும் பதிவுகளை நீக்க வழி செய்யும் வகையில், சமீபத்தில் இந்திய அரசு புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
- பிலிப்பைன்ஸ் ராணுவ விமானம் நொறுங்கி 17 பேர் பலி - பலர் தப்பினர்
- இளம் வயதினர் தலைமுடியை பிடுங்குவது, நகம் கடிப்பது மனநல பிரச்னையா? தீர்வு என்ன?
- இல்லுமினாட்டி ரகசிய சமூகம் எங்கு தோன்றியது? அதன் வரலாறு என்ன?
- இந்தியாவின் கோவேக்சின் தடுப்பூசி தொடர்பாக பிரேசிலில் போராட்டம் ஏன்?
- இருப்பது 2 வெள்ளை காண்டாமிருகம், இரண்டுமே பெண்: இந்த இனத்தைக் காப்பாற்ற வினோத முயற்சி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












