அஜித் 'வலிமை' அப்டேட்: முதல் பார்வை வெளியீடு எப்போது?

valimai update
    • எழுதியவர், ச. ஆனந்தப்பிரியா
    • பதவி, பிபிசி தமிழுக்காக

நடிகர் அஜித்தின் 60வது படமான 'வலிமை' படத்தின் முதல் பார்வை குறித்தான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சமூக வலைதளங்களில் மீண்டும் ட்ரெண்ட் கிளம்பியுள்ளது. இது குறித்து அஜித் தரப்பிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். 'வலிமை' அப்டேட் குறித்து என்ன சொல்கிறார்கள்?

மீண்டும் இணைந்த வெற்றி கூட்டணி

கடந்த 2019-ம் ஆண்டு இயக்குநர் ஹெச். வினோத் மற்றும் அஜித் கூட்டணியில் வெளியான படம் 'நேர்கொண்ட பார்வை'. இது இந்தி படமான 'பிங்க்' படத்தின் ரீமேக். 'நேர்கொண்ட பார்வை' வெற்றிக்கு பிறகு மீண்டும் ஹெச். வினோத், அஜித் கூட்டணி இணைகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார். மேலும், 'காலா' ஹூமா குரேஷி, வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர்.

போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கும் அஜித்திற்கு இந்த படத்தில் சண்டை காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறார்கள். அதேபோல, இதில் குடும்ப செண்டிமெண்ட்டும் அதிகம் இருக்கும் என்கிறார்கள்.

ஹைதராபாத், சென்னை என மாறி மாறி நடந்த படப்பிடிப்பு முடிய இன்னும் சில நாட்களே இருக்கிறது. கடந்த வருடமே கொரோனா ஊரடங்கு காரணமாக அஜித் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாக இருந்த படத்தின் முதல் பார்வை தள்ளி போனது. இதற்கு பின்பு தளர்வுகள் அறிவிக்கப்பட ஹைதராபாத்தில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடந்தது.

முதல் பார்வை வெளியீடு

இதனையடுத்து, கடந்த வருடம் தள்ளிப் போன படத்தின் முதல் பார்வை இந்த வருடம் அஜித் பிறந்தநாளின் போது வெளியிடப்படும் என தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

ஆனால், கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் காரணமாக, 'பிறந்தநாள் கொண்டாட்டம், முதல் பார்வை வெளியீடு எதுவும் வேண்டாம். அனைவரின் பாதுகாப்புதான் முக்கியம்' என ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

ட்ரெண்டான 'வலிமை' அப்டேட்

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக 'வலிமை' படத்தின் அப்டேட் இருக்கிறதா என்று அரசியல்வாதிகள் முதல் விளையாட்டு வீரர்கள் என பலரிடமும் அஜித் ரசிகர்கள் கேட்டது சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனது. இந்த நிலையில், தனது சமூக வலைதள பக்கத்தில் 'வலிமை' பட இசை குறித்து யுவன் ஷங்கர் ராஜா பேசியிருந்தார்.

இந்த படத்தின் அறிமுகப் பாடலுக்காக ஒதிஷா இசைக்கலைஞர்களை பயன்படுத்தி இருப்பதாகவும், பாடல் கொண்டாட்டமாக வந்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதுபோக 'அம்மா' செண்டிமெண்ட் பாடல் ஒன்று இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

முதல் பார்வை எப்போது?

இதனையடுத்து, படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் இந்த மாத இறுதியில் சென்னை வர இருப்பதாகவும், அடுத்த மாதம் படத்தில் மீதம் இருக்கும் படப்பிடிப்பும் நடத்தி முடிக்கப்படும் எனவும் தகவல் வெளியானது. இதுமட்டுமில்லாமல், சமீபத்தில் சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு கட்டுப்பாடுகளோடு அரசு அனுமதியளித்துள்ளது. இதனால், விரைவில் தியேட்டர்களும் திறக்கப்படலாம் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாகியுள்ளது.

valimai first look

இந்த நிலையில், 'வலிமை' படத்தின் முதல் பார்வை பாலிவுட் படங்களை போல ரிலீஸ் தேதியுடன் ஜூலை முதல் வாரம் வெளியாக அதிக வாய்ப்புகள் இருக்கிறது எனவும், இதற்கான மோஷன் போஸ்டரும் யுவன் பிண்ணனி இசையுடன் விரைவில் வெளியாகும் எனவும் தகவல் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

இந்த வருடம் தீபாவளிக்கு படம் வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், இது குறித்து பேச நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திராவை பிபிசி தமிழுக்காக தொடர்பு கொண்டோம்

"அஜித் அவர்கள் படங்கள் பொருத்தவரையிலும், முன் கூட்டியே செய்திகள் அறிவிப்பது வழக்கம் இல்லை. வெளியாகும் நாளன்று வருவதுதான். மற்றபடி எதுவும் இல்லை" என்பதோடு அவர் முடித்து கொண்டார்.

ரசிகர்கள் மனநிலை என்ன?

valimai update valimai first look

நடிகர் அஜித்தின் 'வலிமை' முதல் பார்வை குறித்து எந்த அளவில் எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர் என்பது குறித்து தெரிந்து கொள்ள அஜித் ரசிகர் தியாகராஜனை தொடர்பு கொண்டோம்.

"கொரோனா காலத்தில் தியேட்டர்கள், சினிமா படப்பிடிப்பு, ரிலீஸ் என முறையாக ஒரு வருடம் எதுவும் நடக்கவில்லை. அப்படி இருக்கும் போது நடிகர் அஜித் நடிக்கும் 'வலிமை' கொரோனா காலத்திற்கு முன்பே தொடங்கப்பட்டது என்பதால் இரண்டு வருடமாக படம் குறித்தான தகவல்கள் தெரிந்து கொள்ளும் ஆர்வம் எல்லாருக்கும் இருக்கிறது. அவர் வருடத்திற்கு ஒரு படத்தில் நடித்து கொண்டிருப்பதால் ரசிகர்கள் திரையில் அவரை பார்க்க எப்போதுமே காத்திருப்போம். அப்படி இருக்கும் போது கொரோனா காலத்தால் 'வலிமை' வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டது. அவர் பிறந்தநாளன்று படத்தின் அப்டேட் எதாவது வரும் என்று எதிர்ப்பார்த்திருந்தோம். ஆனால், இந்த கொரோனா சூழலால் வெளியாகாமல் தள்ளி போனது வருத்தமாகத்தான் இருந்தது.

இப்போது அடுத்த மாதத்தில் கடைசி கட்ட படப்பிடிப்பு தொடங்கும், விரைவில் படத்தின் முதல் பார்வை, ரிலீஸ் தேதி என தகவல்கள் வந்து கொண்டிருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சியாக உள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வமான தகவல்களை எதிர்ப்பார்க்கிறோம்" என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :