You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரஜினிகாந்த்: ரசிகருக்காக குரல் பதிவிட்டாரா? - நடந்தது என்ன?
ரஜினியின் குரல் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக ஷேர் ஆகி வருகிறது.
முரளி… நான் ரஜினிகாந்த் பேசுகிறேன் கண்ணா என தொடங்கும் அந்த குரல் பதிவில் ' தைரியமா இருங்க நான் இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்… சீக்கிரம் குணம் அடைஞ்சு வீட்டுக்கு வந்துருவீங்க," என கூறப்பட்டுள்ளது.
இது உண்மையில் ரஜினியின் குரலா? என ரஜினியின் ஊடகப் பிரிவை தொடர்புகொண்டு பிபிசி கேட்டது.
இது ரஜினியின் குரல்தான் என்பதை உறுதி செய்த அவர்கள். இது ரசிகருக்கு ரஜினி நேரடியாக அனுப்பிய குரல் பதிவு என்று தெரிவித்தார்.
யார் அந்த முரளி? அவருக்கு உடலில் என்ன பிர்சசனை? என்பது குறித்து சமூக ஊடகங்களில் ரஜினி ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.
ட்விட்டரில் தர்ஷன் எனும் பெயரில் உள்ள ரசிகருக்காக ரஜினி அனுப்பிய குரல் பதிவு இது என கூறப்படுகிறது.
"தலைவா என் இறுதி ஆசை. 2021 தேர்தலில் வெற்றிபெற்று தமிழக மக்களுக்கு மிகச்சிறந்த தலைவனாகவும் தந்தை மற்றும் ஆன்மீக குருவாகவும் வீரநடைபோட்டு அடித்தட்டு கிராம மக்களின் தனிநபர் வருமானம் 25K என்ற நிலை உருவாக்கி கொடு.உன்னை அரியணையில் ஏற்ற பாடுபடாமல் போகிறேனே என்ற ஒரே வருத்தம்" என தர்ஷனின் ட்விட்டரில் நேற்று ஒரு பதிவு பகிரப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் இந்த ஆடியோ வெளியான பிறகு, "ஆசிர்வாதம் கிடைத்தது, அதிசயம் நடந்தது; கொரோனா நெகடிவ் வந்தது. தலைவர் காவலர்களின் பிரார்த்தனையால் எனது கிட்னியும் சரியாக மீண்டும் பழைய நிலைக்கு வருவேன்," என அந்த ரசிகர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்