அண்ணாத்த - ரஜினியின் அடுத்த படத்தின் பெயர் அறிவிப்பு

ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்திற்கு அண்ணாத்த எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தப் படத்தை இயக்குனர் சிவா இயக்குகிறார்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய தர்பார் திரைப்படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் தற்போது சிவா இயக்கத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தின் பெயரை, அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தற்போது அறிவித்துள்ளது.

இது ரஜினிகாந்த் நடிக்கும் 168வது படமாகும். இந்தப் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 18ஆம் தேதியன்று ராமோஜிராவ் ஃபிலிம் சிடியில் துவங்கியது. கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பிரகாஷ் ராஜ், சூரி ஆகியோரும் நடித்துள்ள இந்தப் படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார்.

இந்த படத்தின் பெயர் குறித்த அறிவிப்பு சென்னை ட்விட்டர் டிரெண்டிங்கில் தற்போது முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: