ரஜினியின் தர்பார் திரைப்படம் இணையத்தில் வெளியானது

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தர்பார் திரைப்படம் இன்று (வியாழக்கிழமை) திரையரங்குகளில் வெளியான நிலையில் அப்படத்தின் தியேட்டர் பிரிண்ட் இணையத்தில் வெளியாகிவிட்டது.

தமிழ் கன் மற்றும் தமிழ் ராக்கர்ஸ் போன்ற தளங்களின் பிராக்ஸி தளங்களில் அத்திரைப்படத்தின் தியேட்டர் பிரிண்ட் வெளியாகியுள்ளது.

இன்று அதிகாலை சுமார் ஐந்து மணியளவில்தான் தர்பார் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. திரைப்படம் வெளியாகி 24 மணிநேரம் கூட முடியாத நிலையில், முழுத் திரைப்படமும் இணைத்தில் வெளியாகி இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இணையத்தில் பலர் தர்பார் படத்தை டவுன்லோட் செய்யும் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

பொதுவாக, சினிமா வெளியாகி அன்றைய இரவு இணைய தளங்களில் வெளியாகும். ஆனால், தர்பார் விஷயத்தில் 14 மணிநேரத்திலேயே திரைப்படம் வெளியானது தயாரிப்பு தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

Tamil Rockers இணையதளத்தை தடை செய்வது சாத்தியமா?

முன்பு, விஜய்யின் சர்கார் திரைப்படத்தை படம் வெளியாகும் நாளன்றே எங்களது இணையதளத்தில் வெளியிடுவோம் என்று தாங்கள் கூறியதை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் செய்து காட்டியுள்ளது. சர்கார் திரைப்படம் வெளியான சில மணிநேரங்களிலேயே அந்த திரைப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி பதிப்புகள் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

தமிழ் திரைப்படத்துறைக்கு தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி வருவதாக திரைத்துறையினர் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

கோடிக்கணக்கான பணம், பல மாத உழைப்பில் உருவாகும் கிட்டத்தட்ட அனைத்து திரைப்படங்களும் தமிழ் ராக்கர்ஸ் போன்ற பைரஸி அல்லது சட்டவிரோதமான இணையதளங்களில் வெளியாவது தொடர்கதையாகி வருகிறது.

தர்பார் சொதப்பலா? Rajini Darbar எப்படி? | Public review |

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: