பிக்பாஸ் முடிந்த பின்னும் ட்ரெண்டிங்கில் கவின், லொஸ்லியா; கைதி திரைப்படம் சில ஆச்சர்ய தகவல்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகும் ட்ரெண்டிங்கில் இருக்கிறார்கள் கவினும், லொஸ்லியாவும். சென்னை ட்ரெண்டிங்கில் WeCherishKaviliya எனும் ஹாஷ்டாக் முதலிடத்தில் உள்ளது.

திரைப்பட ரசிகர்களைவிட சின்னதிரை பார்வையாளர்கள்தான் ட்விட்டரில் சுறுசுறுப்பாக இயங்குகிறார்கள் போல. நேற்று (திங்கள்கிழமை) கார்த்தி நடித்த கைதி திரைப்படத்தின் டிரைலர் வெளியானது. ஆனால், இதனை இரண்டாம் இடத்திற்குத் தள்ளி உள்ளது கவின்-லொஸ்லியா படை.

யாருப்பா நீ? இத்தனை நாளா எங்க இருந்த? என கவினை பார்த்தால் ட்விட்டர் நிறுவனத்தின் நிறுவனர் ஜேக் டோர்ஸி கேட்டு விடுவார் போல.

விஜயின் பிகில் திரைப்பட பாடல்கள் வெளியீட்டு விழா ஹாஷ்டேகை பின்னுக்குத் தள்ளிய கவின் படை, இப்போது கைதியை முறியடித்துள்ளது.

நம்பமுடியவில்லை

பிக்பாஸ் முடிந்துவிட்டதை நம்ப முடியவில்லை. கவினும், லொஸ்லியாவும் உடன் இருப்பது போலவே உள்ளதென ட்விட்டர்வாசிகள் உருகுகிறார்கள்.

WeCherishKaviliya எனும் ஹாஷ்டேகில் 85 ஆயிரம் ட்வீட்டுகள் பகிரப்பட்டுள்ளன.

இதற்கு அடுத்த இடத்தில் உள்ள கைதி திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா ஹாஷ்டேகில் #KaithiTrailerLaunch பதியப்பட்டுள்ள ட்வீட்டுகள் 3,778.

சிலர் லொஸ்லியாவுக்காக கவிதையும் எழுதி உள்ளனர்.

கைதி திரைப்படம் சில தகவல்கள்

  • ஓர் இரவில் நடக்கும் கதைதான் கைதி திரைப்படம் எனக் கூறப்படுகிறது.
  • சாம் இசை அமைக்கும் இத்திரைப்படத்தில் பாடல்கள் இல்லை.
  • ஓர் இரவில் கைதி டிரைலரை 14 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

ரகசிய புலனாய்வு: Iraq-ல் Pimp வேலையில் shia Muslim குருமார்கள் | BBC Secret Investigation

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :