அஜித் 60 திரைப்பட தகவல்கள்: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படங்கள்

நடிகர் அஜித்குமாரின் 60வது திரைப்படம் குறித்த தகவல்கள் ட்விட்டரில் டிரெண்டாகி வருகின்றன.

அண்மையில் சென்னையிலிருந்து டெல்லி வந்த அஜித் இன்று (திங்கள்கிழமை) மீண்டும் சென்னை திரும்பினார். இந்தப் பயணத்தில் அவரை ரசிகர்கள் புகைப்படம் எடுத்தனர்.

இந்தப் புகைப்படங்கள் வைரலாக பரவின.

வழக்கமாக சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருக்கும் அஜித், இதில் க்ளீன் சேவ் செய்து, கருமையான முடியுடன் காட்சி அளித்தார்.

இந்த புது லுக்கானது அஜித்தின் 60வது படத்துக்கானது என்று கூறப்படுகிறது.

இயக்குநர், தயாரிப்பாளர் யார்?

அஜித்தின் இந்தப் படத்தை இயக்குவது நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை இயக்கிய எச். வினோத்.

நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் வழக்கறிஞராக நடித்த அஜித், இந்த படத்தில் காவல் துறை அதிகாரியாக நடிக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் படத்தையும் போனி கபூர் தயாரிக்கிறார்.

ஆகஸ்ட் மாதம் சிங்கப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த போனி கபூர், "இந்த திரைப்படம் ஆக்‌ஷன் திரில்லராக இருக்கும்" என்றார்.

மேலும் அவர், அஜித்தை நேரடியான இந்தி திரைப்படத்தில் நடிக்க வைக்க விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார்.

2001ஆம் ஆண்டு வெளியான சாம்ராட் அசோகா இந்தி திரைப்படத்தில் ஷாரூக்கானுடன் இணைந்து நடித்திருந்தார். கெளரி இயக்கிய இங்கிலிஷ் விங்கிலிஷ் திரைப்படத்தின் தமிழ் பதிப்பில் கேமியோ ரோல் செய்திருந்தார் அஜித்.

"அன்பு அனாதை இல்லை முகேன்" - மனங்களை வென்ற வெற்றியாளரின் கதை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :