You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மேற்கு ஆப்ரிக்கா பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு படிக்க செக்ஸை கட்டணமாக கேட்கும் பேராசிரியர்கள்
பாலியல் தொந்தரவு செய்யும் பேராசிரியர்கள்
மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள பல பல்கலைக்கழகங்களில் உள்ள பேராசிரியர்கள் மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்வது பிபிசி புலனாய்வில் உறுதியாகி உள்ளது. பல ஆண்டுகாலமாக இந்தக் குற்றச்சாட்டுகள் இருந்தாலும், இதுவரை அவை நிரூபிக்கப்படாமலே இருந்தன. ஆனால், பிபிசி நிருபர்கள் மாணவிகள் போல வேடமணிந்து பல்கலைக்கழக பேராசிரியர்களுடன் உரையாடினர். ரகசியமாகப் படமும் பிடித்தனர்.
ஆனால், அந்த பெண் நிருபர்களையே பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்துள்ளனர் பேராசிரியர்கள். இது தொடர்பாக பிபிசி ஆப்ரிக்க சேவை 14 நிமிடங்களுக்கு ஓர் ஆவணப்படத்தை எடுத்துள்ளது.
ஹாங்காங்கில் முகமூடி அணியத் தடை: மக்கள் போராட்டம்
ஹாங்காங்கில் போராட்டங்களில் முகமூடி அணியத் தடை விதித்ததை எதிர்த்து அரசுக்கு எதிராக மக்கள் மேற்கொண்ட பேரணி வன்முறையில் முடிந்துள்ளது. அரசு அலுவலகங்கள், மெட்ரோ ரயில் நிலையம், சீனாவுடனான வணிகத் தொடர்புகள் வைத்திருக்கும் அலுவலகங்கள் ஆகியவற்றின் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் தொடுத்தனர். போராட்டக்காரர்கள் மீது போலீஸார் கண்ணீர் புகைகுண்டுகளைப் பயன்படுத்தினர். தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். இதில் பலர் காயமடைந்தனர்.
பிக் பாஸ் முகேன் ராவ் : மனங்களை வென்ற வெற்றியாளரின் கதை
மலேசியாவில் காவல்துறைப் பணியில் இருந்திருக்க வேண்டிய ஒருவர், பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் வெற்றியாளராகி இருக்கிறார். பிக் பாஸ் சீசன் 3 வெற்றியாளராக மலேசியாவை சேர்ந்த முகேன் ராவ் அறிவிக்கப்பட்டுள்ளார். இன்று அவர் மலேசியாவில் மட்டுமல்ல, அகில உலகமும் நன்கறிந்த நட்சத்திரமாகி விட்டார். அவரது பாடல்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகியிருக்கிறது.
விரிவாகப் படிக்க:"அன்பு அனாதை இல்லை முகேன்" - மலேசியா டூ தமிழ்நாடு - மனங்களை வென்ற வெற்றியாளரின் கதை
BiggBoss 3 winner Mugen's unheard story | அன்பு அனாதை இல்லை முகேன் - மனங்களை வென்ற வெற்றியாளரின் கதை
விஜய் 64: இதுதான் திரைக்குழு - 10 தகவல்கள் #OntheBoard
விஜய் 64 திரைப்படம் குறித்து நித்தமும் ஒரு தகவல் வந்து கொண்டிருக்கிறது. On the Board என்று பதிவிட்டு தினமும் ஒருவர் தாமும் அந்தப் படத்தில் இருப்பதாக தகவல் பகிர்கின்றனர். எக்ஸ் பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் யார் யார் பணியாற்றுகிறார்கள் என்று இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியான தகவல்களை பார்ப்போம்.
விரிவாகப் படிக்க:விஜய் 64 இதுவரை வண்டியில் ஏறியவர்கள் #OntheBoard
"தினகரன் ராஜிநாமா செய்ய வேண்டும்": அமமுக புகழேந்தி
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமமுகவை சேர்ந்த புகழேந்தி தெரிவித்துள்ளார். கோவையில் அமமுக தொண்டர்களுடன் நடந்த சந்திப்பிற்குப் பிறகு நிர்வாகிகளுடன் செய்தியாளர்களைச் சந்தித்த புகழேந்தி, தினகரனை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாகவும், அவர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்யவேண்டும் என்றும் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்