இன்ஸ்டாகிராமை கலக்கும் தெற்காசிய 'பிரவுன் பெண்கள்' - யார் இவர்கள்?

பட மூலாதாரம், Sanjana Nagesh
- எழுதியவர், ட்ருட்டி ஷா
- பதவி, பிபிசி நியூஸ், வாஷிங்டன்
தங்களை 'பிரவுன் பெண்கள்' என்று கூறிக் கொள்ளும், உலகெங்கிலும் உள்ள இளம் பெண்களைக் கொண்ட சகோதரித்துவம் இன்ஸ்டாகிராமில் உருவாகி வருகிறது. அவர்கள் யார், அவர்கள் எதை விரும்புகிறார்கள்?
``நாங்கள் மிகவும் மா நிறத்தில் இருப்பதாகவோ அல்லது போதிய அளவு மா நிறத்தில் இல்லை என்றோ எங்களிடம் சொன்னார்கள். ஆனால் நமது கலாசாரத்தை மீண்டும் கைப்பற்றி, அதைக் கொண்டு விளையாட இப்போது நமக்கு இன்ஸ்டாகிராம் ஒரு வாய்ப்பு அளித்துள்ளது. மிகச் சரியாக அதைத்தான் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்,'' என்று 'பிரவுன்கேர்ள்கேங்' இயக்கத்தை உருவாக்கிய சஞ்சனா நாகேஷ் கூறுகிறார்.
அவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் 50,000 பேர் பின்தொடர்கின்றனர். 'பிரவுன் பெண்களால்', அவர்களுக்காக உருவாக்கப்படும் விஷயங்களைக் காண்பதில் அவர்கள் ஆர்வமாக உள்ளனர். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அவர், வளரும் சந்தை வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளத் தொடங்கியிருப்பது தெளிவாகத் தெரிகிறது.

பட மூலாதாரம், Getty Images
``நான் இன்ஸ்டாகிராம் பார்த்துக் கொண்டிருந்த போது, என்னைப் போன்ற பெண்கள் செய்யும் விஷயங்களைக் கவனித்தேன். நமது தெற்காசிய பாரம்பரியம் பொதுவான பாப் கலாசாரத்துடன் எங்கே ஒன்று சேர்ந்து, சில அற்புதமான கற்பனைகளை உருவாக்குகிறது என்பதை கவனித்தேன். அதை வெளிக்காட்ட முயற்சித்தேன்.''
அவருடைய தகவல் தொகுப்பை மேலோட்டமாகப் பார்த்தால், அமெரிக்கா, இந்தியா, கனடா மற்றும் பிரிட்டனில் இருந்து ஏராளமானோர் அவரைப் பின்தொடர்கிறார்கள்.
நடிகை மின்டி காலிங், செயல்பாட்டாளர் ஜமீலா ஜமீல் மற்றும் எண்ணற்ற பாலிவுட் நட்சத்திரங்களைப் பற்றிய மீம்ஸ்களும் அதில் இடம்பெற்றுள்ளன. வளரும் கலைஞர்கள், தொழில்முனைவோர் மற்றும் கலைஞர்களின் புகைப்படங்களும் அதில் உள்ளன. எல்லோருக்கும் பொதுவான அம்சம் `பிரவுன் பெண்' என்பதாக மட்டும் உள்ளது.
கலைஞர்கள்சிம்மி படேல், நேஹா கவோன்கர் போன்றவர்கள் சஞ்சனாவின் பக்கத்தில் சிறப்பாகக் காட்டப்பட்டுள்ளனர்.
விளம்பரத் துறையில் காப்பிரைட்டராக இருக்கும் சிம்மி, பிரிட்டனில் பிறந்து, குழந்தைப் பருவத்திலேயே அமெரிக்காவுக்குச் சென்றுவிட்டார். குஜராத்தி கென்ய-இந்திய பாரம்பர்யங்களில் இருந்து உத்வேகம் பெற்று இந்திய மற்றும் பாப் கலாசாரத்தைக் குறிப்பிடும் மீம்ஸ்களை உருவாக்குகிறார். அவற்றை Paper.Samosa-வில் பதிவிடுகிறார்.

பட மூலாதாரம், Simmi Patel
''எளிதான விஷயத்தை உருவாக்க நான் விரும்பினேன். ஆனால் அது வித்தியாசமானதாக உள்ளது. என்னைப் போல மக்களிடம் கருத்துகளைத் தெரிவிப்பதாக உள்ளது. உள்நாட்டைச் சேர்ந்த இளைய தலைமுறையினர் அணுகும் நிலையில் உள்ள கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய கலாசாரங்களின் கலவையை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இருந்தது. நாங்கள் பாப் கலாசாரத்தில் ஆர்வம் கொண்டிருக்கிறோம். அனைத்தையும் நமது மரபுகளுடன் சேர்ந்த கலவையாக உருவாக்க விரும்புகிறோம்.''
''தேசி'' என்று சிம்மி பயன்படுத்தும் வார்த்தை சம்ஸ்கிருத வார்த்தை ''தேஷா'' என்பதில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. நாடு அல்லது நிலப்பரப்பு என்ற அர்த்தத்தில் அது பயன்படுத்தப்படுகிறது. வெளிநாடுகளில் வசிக்கும் தெற்காசிய பாரம்பரியம் கொண்டவர்களைக் குறிப்பிடுவதாக உள்ளது.
#BrownGirl ஹேஷ்டேக்கை லட்சக்கணக்கானோர் பயன்படுத்தி வரும் நிலையில், 5.8 மில்லியனுக்கும் மேற்பட்டோர் இந்த ஹேஷ்டேக்-ஐ இன்ஸ்டாகிராமில் பயன்படுத்துகின்றனர். இந்தக் குழு நீடித்திருக்கும் என்று தெரிகிறது.

பட மூலாதாரம், Simmi Patel
``முன்பு எங்களைப் போன்ற பெண்கள் ஒற்றைப் பரிமாண குணாதிசயங்கள் மூலம் அறியப்படுவதற்கும், எண்ணங்களை வெளிப்படுத்தவும் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளை சார்ந்திருக்க வேண்டியிருந்தது. அந்தக் கட்டாயம் இனி இல்லை. எங்களுடைய சொந்த விவரிப்புகளை நாங்கள் வெளிப்படுத்துகிறோம்,'' என்கிறார் சஞ்சனா.
தெற்காசியர்கள் டிஜிட்டல் ஊடகத்தை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்து ஓஹையோவில் உள்ள பவுலிங் கிரீன் அரசு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராதிகா கஜ்ஜாலா ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளார். `பிரவுன் பெண்கள்' இயக்கம் தனக்கு ஆச்சர்யத்தைத் தரவில்லை என்கிறார் அவர்.
பாலிவுட் நட்சத்திரங்கள், குறிப்பிட்ட தோற்றத்தை மட்டும் வெளிப்படுத்த நீண்டகாலமாக ஊடகங்களைப் பயன்படுத்தி வந்தனர். தங்களுடைய பிராண்ட்கள் மீது கவனம் செலுத்துவதாக அது இருந்தது என்கிறார் அவர்.
``ஆயிரக்கணக்கான இளம்பெண்கள், டிஜிட்டல் பயன்பாடு பற்றிய அறிவுள்ளவர்கள், தங்கள் உணர்வுகளை ஒரே மாதிரியாக, அதிக நம்பகமான வழியில் வெளிப்படுத்துகின்றனர். உண்மையில், இப்போது இந்தப் பெண்களிடம் இருந்து பாலிவுட் நட்சத்திரங்கள் உத்வேகம் பெற்று, அவர்கள் வெற்றிக் காண்பதைப் பார்க்கிறீர்கள். தனிப்பட்ட தெளிவான புகைப்படங்களை, பார்முலாவுக்கு சிறிது பொருந்துபவற்றைப் பதிவிடுகிறார்கள்.''
தங்களுடைய கலாசாரத்தின் வேர்களுடன் இணைந்திருக்க விரும்பும் குடிபெயர்ந்த பிள்ளைகள் மற்றும் பேரக் குழந்தைகள் இவர்கள். ஆனால் பிரபலமான மில்லியனியம் கலாசாரத்தின் அங்கமாக இருப்பதை காட்டிக் கொள்கின்றனர் என்கிறார் அவர்.
''இந்தப் பெண்கள் நான் `வெளிநாட்டில் உள்ள டிஜிட்டல் மக்கள்' என குறிப்பிடும் குழுவில் அங்கமாக இருக்கின்றனர்.''

பட மூலாதாரம், Neha Gaonkar
The Cute Pista என்ற கணக்கின் மூளையாக உள்ளவரும், பயிற்சி கட்டடக் கலைஞருமாகவும் உள்ளவரின் பங்களிப்பு இது என்று நேஹா கவோன்கர் ஒப்புக்கொள்கிறார்.
``நான் இந்தியா மற்றும் பிரிட்டனில் வளர்ந்து 10 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் சிகாகோ நகருக்கு வந்துவிட்டேன். கலாசாரம் மற்றும் குடியேற்றக் கலாசாரத்தின் கலவையை கண்டறிந்து, பாரம்பரியத்தில் பயணிப்பதற்கான முயற்சியாக இது இருக்கிறது. நாம் எங்கே பொருந்துகிறோம் என்பதைக் கண்டறிவது பற்றியது இது.''
தனது இந்தியக் கலாசாரம் என்ற வேர்களில் மூழ்க சமீபத்தில் விரும்பியதாகவும், இன்ஸ்டாகிராமில் முயற்சித்தபோது, அது தொடர்பான விஷயங்களுக்கு மற்றவர்களும் முக்கியத்துவம் தருவதைக் கண்டதாகவும் அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், Neha Gaonkar
``இந்தியராக, பாகிஸ்தானியராக இருப்பது எப்படி சிறப்பானது என்பதைக் காட்டும் வகையில் அற்புதமான திறமைகள் உள்ள பலரை நான் கண்டிருக்கிறேன். இந்த வரலாறுகள் எனக்குத் தெரிய வந்துள்ளன, அதன் அங்கமாக இருக்க நான் விரும்புகிறேன்,'' என்கிறார் கிராபிக் டிசைனராக உள்ள கனடியத் தமிழர் பிரணவி சுதாகர்.
Not__Sari என்ற இன்ஸ்டாகிராம் கணக்கையும் வைத்துள்ளார். அவர் உருவாக்கிய பேட்ச்கள் மற்றும் பிரிண்ட்களை அதில் அவர் பதிவிடுகிறார். ``ஒரு காட்சிப்படுத்தல் அல்லது கொலாஜ் மூலம் பிரவுன் அனுபவத்தை வெளிப்படுத்தும் முயற்சியாக தனது பணிகள் உள்ளன'' என அவர் கூறுகிறார்.
``நான் வளரும் பருவத்தில் மற்ற பிரவுன் மக்களுடன் நட்பு ஏற்படுத்திக் கொள்வேன். நாங்கள் வெவ்வேறு பின்னணிகளைக் கொண்டவர்கள். வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள். ஆனால் நாங்கள் வளர்க்கப்பட்ட விதம் மற்றும் அனுபவங்களைப் பகிர்வதில் நிறைய ஒற்றுமைகள் உண்டு. இந்தக் கலாசார நடைமுறைகளின் அடிப்படையில் நமக்குள் ஒரு பிணைப்பை ஏற்படுத்திக் கொள்வதை விரும்புகிறேன்.''

பட மூலாதாரம், Pranavi Suthagar
வெவ்வேறு பின்னணிகளைக் கொண்ட மக்களின் வரலாறுகளுக்கு இடையில் ``பாலம்'' அமைப்பதில் பிரவுன் என்ற வார்த்தை நிறைய உதவியாக இருந்துள்ளது என்று பேராசிரியர் கஜ்ஜாலா கூறுகிறார். அவர்களுக்கு பொதுவான விஷயம் என்ன இருக்கிறது என்பதைக் காட்டுவதாகவும் அது உள்ளது என்கிறார்.
2001 செப்டம்பர் 11 ஆம் தேதி அமெரிக்காவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு `பிரவுன்' என்ற வார்த்தை அதிகமாக வெளியில் தெரியவந்தது.
``இது அரசியல் ரீதியாக ஒன்று சேர்ப்பதாக இருந்தது. வெவ்வேறு பின்னணிகளைக் கொண்ட மக்களை ஒன்று சேர்த்தது. அவர்கள் `மற்றவர்கள்' என்று பார்க்கப் பட்டிருந்தனர். குடிபெயர்ந்தவர்கள் என்ற வகையில் எப்போதும் பார்க்கப்பட்ட மக்களுக்கு இடையில் மாறுபாடுகள் என்ற வரலாற்றை இது அழித்துவிட்டது.''
``பிரவுன் என்பது இனம் சார்ந்த வகைப்பாடு அல்ல. அவ்வாறு கூறுவதற்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு எதுவும் இல்லை. ஆனால் பிரவுன் என்பது எப்போதும் குடிபெயர்ந்தவர்கள் என்ற வகையில் பார்க்கப்பட்டது. குறிப்பாக இங்கே அமெரிக்காவில் அப்படி பார்க்கப்பட்டது. இப்போது பெண்கள், - குறிப்பாக பிரவுன் என்ற வார்த்தையைப் பயன்படுத்துபவர்கள் தங்களுடைய விவரிப்புகளுக்கு ஆதரவு திரட்டுபவர்களாக, அதற்கு உரிமை கொண்டாடுபவர்களாக உள்ளனர்,'' என்று அவர் தெரிவித்துள்ளார்.
இப்போது சமூக ஊடகங்களில், இந்தப் பெண்கள் ஒருவரை ஒருவர் கண்டுகொள்கின்றனர். அவர்கள் வெவ்வேறு பின்னணிகளில் இருந்து வந்தவர்களாக, வெவ்வேறு எல்லைகளில் வாழ்பவர்களாக இருக்கலாம். ஆனால் பொதுவான அம்சங்கள் நிறைய இருப்பதைக் கண்டுகொள்கின்றனர்.
இந்தக் கட்டுரையில் Instagram வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Instagram குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
Instagram பதிவின் முடிவு, 1
``பிரவுன் என்பது பேச்சு வழக்கிலான வார்த்தை. `தேசி' என்ற வார்த்தையை பயன்படுத்த விரும்பாதவர்களுக்கு இது உதவியாக இருக்கிறது. இது பரந்த அளவில் உள்ளடக்கியதாக இருக்கிறது. இந்திய - கரீபியன் பின்னணிகள் முதல் இலங்கை அல்லது கலப்பு அல்லது இன்னும் அதிகமான மக்களை உள்ளடக்கியதாக இது இருக்கலாம். இது அற்புதமான வார்த்தை.
``வெள்ளையர் இதைப் பயன்படுத்துவார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் அவர்கள் பயன்படுத்தினால் தனிப்பட்ட முறையில் எனக்கு ஆட்சேபணை எதுவும் இல்லை. என் அனுபவத்தில் இது இழிவான வார்த்தை அல்ல. எனக்கு எதிராக யாரும் அந்த வகையில் இந்த வார்த்தையை யாரும் பயன்படுத்தியது இல்லை, அது ஒரு நல்ல வார்த்தை.''
தெற்காசியப் பெண்களின் மரபுப்படியான வழக்கம் பாதுகாக்கப்பட்ட, அடக்குமுறைக்கு ஆளாகியுள்ள, மரபுகளை பின்பற்றுபவர்களாக இருப்பார்கள். ஆனால் இன்ஸ்டாகிராமில் `பிரவுன் பெண்களில்' பலர் அதில் இருந்து விலகி நகைச்சுவையை அதிகம் பயன்படுத்துபவர்களாக சேருகிறார்கள். தாங்கள் விளையாட்டுத்தனம் மிக்கவர்கள், எதிர்த்துப் போராடுபவர்கள் என்பதை - வெவ்வேறு வழிகளில் வெளிப்படுத்தக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.
``இந்த பிரவுன் பெண்களுக்கு காப்பாற்றுபவர்கள் யாரும் தேவையில்லை'' என்று பிரணவி சுதாகர் குறிப்பிடுகிறார்.
ஆனால், தங்கள் நாட்டு கலாசாரத்தை முக்கியமாகக் காட்டுவதற்கு சிறிது காலம் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துபவர்கள் பற்றி என்ன சொல்வது? இந்தக் குறிப்பிட்ட தருணம் பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள்?
HateCopy கணக்கை பயன்படுத்தி வரும் மரியா குவாமர்,, வளர்ந்து வரும் சொந்த நாட்டுக் கலைஞர்களுக்கு உத்வேகம் அளிப்பவராகக் கருதப்படுகிறார். சமூக வலைதளங்களில் செயல்படத் தொடங்கிய கலைஞரான அவருடைய படைப்புகள் இப்போது உலகெங்கும் காணப்படுகின்றன.மின்டி காலிங் மூலமாக அவை முன்னெடுக்கப்படுகின்றன. இப்போது அவை நியூயார்க் நகரில் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன.
இந்தக் கட்டுரையில் Instagram வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Instagram குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
Instagram பதிவின் முடிவு, 2
டொரான்டோவில் வாழும் மரியா, ``என்னுடைய பல பணிகள் தனிமையில் உருவாக்கப்பட்டவை. அதனால் மக்கள் அதனுடன் தொடர்புபடுத்திக் கொள்வது அற்புதமானது. எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள், எனக்கு தனிப்பட்ட முறையில் ஏற்பட்டவை என நினைத்துக் கொள்வது வழக்கமாக இருந்தது. ஆனால், அப்படி இல்லை என்பது இப்போது தெளிவாகத் தெரிகிறது'' என்று கூறுகிறார்.
``பழங்கால மரபுகளில் இருந்து எங்களை ஒன்று சேர்ப்பதற்கான சிந்தனைகளை பெண்கள் பெறுகிறார்கள். எங்களை தாழ்த்தி வைத்திருக்கும் விஷயங்களை முறியடிப்பது பற்றி சிந்திக்கிறார்கள். `எனக்குப் பிடித்ததை நான் செய்வேன்' என்று சொந்தநாட்டைச் சேர்ந்த பெண்கள் கூறுகின்றனர்'' என்று அவர் தெரிவித்தார்.
பிரவுன் பெண் என்ற லேபிள் வரையறைப்படுத்துவதாக இருக்கும் என்ற கருத்தை மரியா மறுக்கிறார். ``நான் பிரவுன் பெண். அதுதான் நான். நாம் எந்த லென்ஸ் வழியாகப் பார்க்கிறோம் என்பது தான் விஷயம்'' என்று அவர் கூறுகிறார்.
``பிரவுன் பெண்கள் என்பவர்கள் அமெரிக்க ஆதரவாளர்கள்; உங்களுக்கு எதிரானவர்கள் அல்ல. கொண்டாடுவதற்கு நாம் அனுமதிக்க வேண்டும் - குறிப்பாக நிறத்தின்படியான பெண்கள் ஊடகங்களில் குறைந்த பிரதிநிதித்துவமே பெறுகின்றனர். கருப்பு மற்றும் பிரவுன் பெண்கள் பெரும்பாலும் ஓரங்கட்டப் படுகிறார்கள்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












