இன்ஸ்டாகிராமில் பிரபலமான உலகம் சுற்றும் பொம்மைகள் - இதயங்களைத் திருடிய பெண்ணின் முயற்சி

சீனப்பெருஞ்சுவரில் பொம்மை

பட மூலாதாரம், Eileen lam

படக்குறிப்பு, சீனப்பெருஞ்சுவரில் ஐலீன் லாமின் பொம்மை

ஒரு பொம்மை குழு உலகம் முழுவதும் பயணிப்பதாக சமூகவலைதளத்தில் பதிவிட்டுவருகிறார் இங்கிலாந்து நாட்டின் இப்ஸ்விச் நகரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர். உலகம் முழுவதும் இதற்கு ரசிகர்கள் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்படுகிறார் அவர்.

ஐலீன் லாம் என்பவர் பல்கலைகழகத்துக்கு செல்லும்போது தன்னுடைய மகளுடன் தொடர்பு கொள்ள இன்ஸ்டாகிராமில் டாலி ட்ரஷர்ஸ் (dollytreasures) என்னும் கணக்கைத் தொடங்கினார்.

Doll

பட மூலாதாரம், EILEEN LAM

இவரது 'ப்ளைத்' பொம்மைகளை (Blythe dolls) சுமார் 80,000 பேர் சமூக ஊடகத்தில் பின் தொடர்கின்றனர். இந்த பொம்மைகளுக்கு ஐலீனின் சொந்த ஊரான இப்ஸ்விச்சிலிருந்து நியூயார்க் வரை ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. இது இந்த அளவு வளரும் என்று எனக்கு தெரியாது எனக் கூறுகிறார் ஐலீன்.

சுற்றுலா சென்ற பொம்மை

பட மூலாதாரம், Eileen Lam

லாம் இந்த புகைப்படங்களை ஐந்து வருடத்திற்கு முன்பு பதிவிடத் தொடங்கினார். இதற்கு அவருடைய மகளின் பெயர் பெர்னடெட் என பெயரிட்டார். அதற்கு டாலி என்று புனைப்பெயரும் வைத்தார்.

Instagram

பட மூலாதாரம், EILEEN LAM

இது சிறிது பிரபலமாகிறது என நினைத்ததால் இந்த பெண்களை(அதாவது பொம்மைகளை) வெளியே எடுத்து செல்லத் தொடங்கினார். அவை சிறு கதாபாத்திரங்களாக மாறின.

Instagram பதிவை கடந்து செல்ல, 1
Instagram பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Instagram வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Instagram குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

Instagram பதிவின் முடிவு, 1

இப்போது இந்த பொம்மை குடும்பத்தில் நூற்றுக்கும் அதிகமானோர் இருக்கிறார்கள். அவர்கள் உலகம் முழுவதும் அதாவது ஹாங்காங், ஷாங்காய், மார்பெல்லா மற்றும் பாரீஸ் எனவும் வீட்டிற்கு அருகில் இருக்கும் இடங்களையும் சுற்றி வருகிறார்கள்.

பொம்மையை படம் எடுக்கும் ஐலீன்

லண்டனில் உள்ள பிரபல டிபார்ட்மெண்டல் ஸ்டோருக்கு நகைகள் செய்துகொடுக்கும் லாம் இப்போது த லிட்டில் மிஸ்சீஃப்ஸ் (The Little Mischiefs) எனும் தன்னுடைய புத்தகதுக்காக உலகத்தை சுற்றி வந்து பொம்மைகளை புகைப்படம் எடுக்கிறார்.

Instagram பதிவை கடந்து செல்ல, 2
Instagram பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Instagram வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Instagram குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

Instagram பதிவின் முடிவு, 2

அவர் தன் கணவருடன் இப்ஸ்விச்சில் வசிக்கிறார். மக்கள் இதை விரும்பும் வரை நான் இதைத் தொடர்வேன் என லாம் கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :