You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிரியங்கா சோப்ராவை நடிகர் யோகி பாபுவுடன் ஒப்பிடும் இணையவாசிகள் - ஏன்?
அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் நடைபெற்ற 'மெட் காலா' என்ற நிகழ்வில் கலந்துகொண்ட இந்திய திரைப்பட நடிகை பிரியங்கா சோப்ராவின் சிகை அலங்காரம் இணையத்தில் பெரும் நகைச்சுவைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.
உலகம் முழுவதிலும் உள்ள பிரபல திரைப்பட நடிகர்களையும், ஆடை வடிவமைப்பாளர்களையும் ஒருசேர இணைக்கும் நிகழ்வுதான் மெட் காலா. நியூயார்க் நகரின் சிறப்பம்சமாக கருதப்படும் இந்நிகழ்வு, அங்குள்ள கலை ஆடை குறித்த பெருநகர அருங்காட்சியத்தின் நன்மைக்காக நடத்தப்படும் பிரம்மாண்ட விழாவாகும்.
ஒவ்வொரு ஆண்டும் விழாவில் பங்கேற்பவர்கள், குறிப்பிட்ட தலைப்புகளின்கீழ் வித்தியாசமான, மிகவும் விலைமதிப்புள்ள ஆடைகளை அணிந்து வருவார்கள்.
இந்த ஆண்டுக்கான தீம் "Camp: Notes On Fashion".
ஹாலிவுட்டை சேர்ந்த பல நடிகர் - நடிகைகள் மிகவும் விலையுயர்ந்த ஆடைகளை அணிந்து நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். இந்தியாவை சேர்ந்த பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவும், அவரது கணவர் நிக் ஜோனாஸும் இதில் கலந்து கொண்டனர்.
பிரியங்கா சோப்ராவின் சிகை அலங்காரம் குறித்து என்ன சொல்கிறார்கள்?
200 டன் தங்கத்தை ரகசியமாக மோதி அரசு வெளிநாட்டுக்கு அனுப்பியதா? | BBC FACT CHECK
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்