உலகெங்கும் ராணுவம் எப்படி இருக்கிறது? - போர் வீரர்களின் புகைப்படங்கள்

இந்த ஆண்டுக்கான ராணுவ புகைப்படப் போட்டியில் ஒரு ராணுவ வீரரின் தலைக்கு மேல் ஹெலிகாப்டர் பறக்கும் புகைப்படத்திற்கு விருது கிடைத்துள்ளது.

ராணுவ புகைப்பட கலைஞரான சிபிஎல் டாம் ஈவன்ஸ் இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார்.

ராணுவ வீரர்களின் வாழ்க்கையை புகைப்படமாக தொகுத்ததற்காக அவருக்கு 'ஆண்டுக்கான சிறந்த புகைப்பட கலைஞர்' விருதும் கிடைத்துள்ளது.

ராணுவத்திலேயே சிறந்த பணி புகைப்படக் கலைஞனாக இருப்பதுதான் என்கிறார் டாம்.

ராணுவத்தினருக்கான இந்த புகைப்பட போட்டியில் உலகெங்கிலுமிருந்து ஏறத்தாழ 1500 ராணவத்தினர் தங்களது வாழ்க்கையை புகைப்படமாக எடுத்து அனுப்பி இருந்தனர்.

போட்ரைட் பிரிவில் சிபிஎல் ப்ரவுனுக்கு, ஒரு ராணுவ வீரரின் புன்னகையை புகைப்படமாக எடுத்ததற்காக விருது கிடைத்துள்ளது.

"ராணுவ வீரனாக நான் காபூலில் பணியமர்த்தப்பட்டேன். எமது பணி ராணுவ நடவடிக்கையை புகைப்படமாக மற்றும் காணொளியாக எடுத்து மக்களுக்கு விளக்குவதுதான்" என்கிறார் ப்ரவுன்.

"ஒரு நாள் ராணுவ வீரர்களின் செயல்பாட்டை புகைப்படம் எடுத்து கொண்டிருந்த போது, ஒரு ராணுவ வீரரின் புன்னைகையை படமாக எடுத்தேன். நான் புகைப்படம் எடுத்தது அவருக்கு தெரியாது" என்கிறார்.

ராணுவ மருத்துவர்களின் வாழ்வை புகைப்படமாக எடுத்ததற்காக, அவருக்கு மற்றொரு பிரிவிலும் விருது கிடைத்துள்ளது.

பிபிசியின் புகைப்பட ஆசிரியரான பிலிப்பும், ப்ரஸ் அசோஷியன் பிக்சர் ஆசிரியரான மார்ட்டினும்தான் இந்த ஆண்டுக்கான தேர்வு குழுவில் இருந்த நடுவர்கள்.

இந்த புகைப்பட போட்டியில் வென்ற பிற புகைப்படங்களையும் இங்கே பகிர்கிறோம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :