“இயற்கை இவ்வளவு அழகா?” - வியப்பில் ஆழ்த்தும் அட்டகாச புகைப்படங்கள்

உயிரியல் புகைப்பட கலைஞர்களுக்கான ராயல் சொஸைட்டி இந்த ஆண்டுக்கான சிறந்த உயிரியல் புகைப்படங்களுக்கு விருதளித்துள்ளது.

இந்த ஆண்டுக்கான கருவாக இயற்கையின் பல்வேறு வடிவங்கள் என தலைப்பு கொடுக்கப்பட்டிருந்தது.

சிறந்த இளம் புகைப்படக் கலைஞருக்கான விருது 17 வயதான ஜாக் ஆலிவுக்கு கொடுக்கப்பட்டது.

அவர் எடுத்த சிறுத்தை பல்லியின் புகைப்படத்திற்காக இந்த விருது வழங்கப்பட்டது. (அந்த புகைப்படத்தைதான் மேலே பகிர்ந்திருக்கிறோம்.)

சிறுத்தை பல்லி

"என் புகைப்படத்தின் லென்ஸையே சிறுத்தை பல்லி பார்த்துக் கொண்டிருந்தது" என்கிறார் ஜேக்.

"மஞ்சளும், கறுப்பும் கலந்த அதன் உடல் அமைப்பு மற்றும் அதன் விழிகள் என அற்புதமான வடிவத்தில் அந்த சிறுத்தை பல்லி இருந்தது" என்று விவரிக்கிறார் ஜேக்.

இந்த ஆண்டின் ராயல் சொஸைட்டியின் சிறந்த புகைப்படத்திற்கான விருதை ராபர்டோ பியூனோ பெறுகிறார். கனடாவில் உள்ள யாகூன் பள்ளத்தாக்கில் இலையுதிர் காலத்தில் விழுந்த இலைகளில் உள்ள லார்வாவை தத்ரூபமாக புகைப்படம் எடுத்திருந்தார். அதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது.

தரை முழுவதும் படர்ந்திருந்த மஞ்சள் இலைகள் இயற்கையை கொண்டாடுவதற்கான ஒரு புது உலகமாக காட்சி அளித்தது என்கிறார் பியூனோ.

இது எனக்கு இலையுதிர்கால ஆச்சர்யம் என்றும் குறிப்பிடுகிறார் அவர்.

'2500 புகைப்படங்கள்'

இரண்டு போட்டிக்கும், அதாவது சிறந்த இளம் புகைப்பட கலைஞர் (18 வயதிற்கும் கீழ்) மற்றும் சிறந்த உயிரியல் புகைப்பட கலைஞர் என இரண்டுக்கும் சேர்த்து 900 போட்டியாளர்களிடமிருந்து மொத்தமாக 2500 புகைப்படங்கள் வந்துள்ளன.

சிறந்த இளம் புகைப்பட கலைஞருக்கான போட்டியில் நான்கு புகைப்படங்களும், சிறந்த புகைப்பட கலைஞருக்கான போட்டியில் எட்டு புகைப்படங்களும் தேர்வாகின. அவற்றை இங்கே பகிர்கிறோம்.

சிறந்த இளம் புகைப்பட கலைஞர் (18 வயதிற்கும் கீழ்) தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படங்கள்

சிறந்த புகைப்படக்கலைஞருக்கான தேர்வில் தேர்வான புகைப்படங்கள்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :