‘இயற்கையில் திளைத்தல்’ வியப்பான தருணங்கள்

பிப்ரவரி மாதம் ஸ்காட்லாந்தின் குளிர் எப்படி இருக்கும்? அதீத குளிரில் ஏற்படும் பனிக்கட்டி என்ன மாதிரியான உணர்வை ஏற்படுத்தும்? பனியும், குளிரும் எப்போதும் அழகுதானே? அத்தகைய அழகுடன் இருக்கும் பனி சில்லு ஒன்றின் புகைப்படத்திற்கு இந்த ஆண்டின் சிறந்த லேண்ட்ஸ்கேப் புகைப்படத்திற்கான விருது கிடைத்திருக்கிறது.

இந்த புகைப்படத்தை எடுத்தவர் பீட் ரோபாட்டம்.

பிரிட்டனின் நகர மற்றும் கிராமப் பகுதிகளின் சிறந்த ' இயற்கை நிலக்காட்சி' புகைப்படத்திற்காக கடந்த 12 ஆண்டுகளாக விருது அளிக்கப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானவர்கள் இந்த புகைப்பட போட்டிக்காக படங்களை அனுப்பி வருகிறார்கள். இந்தாண்டு வந்த ஆயிரக்கணக்கான புகைப்படங்களிலிருந்து சிறந்த படமாக பீட் ரோபாட்டம் எடுத்த மலைகளை பின்னணியாக கொண்ட, உடைந்த பனிக்கட்டி சில்லுகளின் புகைப்படத்திற்கு இந்த ஆண்டுக்கான சிறந்த புகைப்பட விருது கிடைத்துள்ளது. (அந்த புகைப்படத்தை மேலே பகிர்ந்திருக்கிறோம்)

இந்த விருது போட்டிக்கான நிறுவனர் சார்லி வைட், "மலையின் குளிர், அதன் உறைபனி என அந்த உணர்வை அப்படியே கடத்தும் வகையில் புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது" என்கிறார்.

கிளாசிக் வியூ பிரிவில் சிறந்த புகைப்படத்திற்கான விருதை ஜான் ஃபின்னி பெறுகிறார்.

இதே பிரிவில் இரண்டாம் இடத்தை மரியோ டி' ஓனோஃப்ரியோ பெறுகிறார். அவர் எடுத்த வான மண்டல புகைப்படத்திற்காக இந்த விருது வழங்கப்படுகிறது.

மற்றொரு பிரிவில், அலைகள் அடிக்கும் கடலில் ஒரு மீனவர் மீன் பிடிக்கும் புகைப்படத்திற்காக மிக் ப்ளாக்கிக்கு விருதளிக்கப்படுகிறது.

இந்த போட்டியில் விருது பெற்ற புகைப்படங்களை இங்கே பகிர்கிறோம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :