ஜூன் மாதத்தையே நடிகர் விஜய்க்கு சொந்தமாக்கி அமர்க்களப்படுத்தும் ரசிகர்கள்

ஜூன் 22-ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடவுள்ள நடிகர் விஜய்க்கு அவரது ரசிகர்களும், அபிமானிகளும் தற்போதே ஒரு ஹேஷ்டேக் உருவாக்கியுள்ள சூழலில், அந்த ஹேஷ்டேக்டிவிட்டரில் வைரலாகி கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

"THALAPATHY VIJAY MONTH BEGINS" - தளபதி விஜய் மாதம் துவங்கியது என்று இந்த ஹேஷ்டேக்கின் பெயர். இந்த ஹேஷ்டேக் டிவிட்டரில் சென்னை நகர ரீதியாகவும், அனைத்து இந்திய ரீதியாகவும் டிரெண்டிங்கில் உள்ளது.

இன்று (ஜூன் 1-ஆம் தேதி) முதல் இந்த ஹேஷ்டேக் டிவிட்டரில் வலம் வருகிறது.

நாளை மறுநாள் (ஜூன் 3-ஆம் தேதி) திமுக தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதியின் பிறந்தநாள் மற்றும் அவரது சட்டமன்ற வைரவிழா கொண்டாடப்படவுள்ள சூழலில் டிவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் தீவிரமாக இயங்கும் திமுகவினர் மற்றும் விஜய் ரசிகர்கள் இடையே டிவிட்டர் டிரெண்டிங்கில் பலத்த போட்டி உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு வலைதள பிரியர்களிடையே ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாம்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்