விஜயகாந்த் சினிமாவில் தடம் பதிக்க உதவிய மதுரை ராசி ஸ்டுடியோஸ்

காணொளிக் குறிப்பு, விஜயகாந்த் சினிமாவில் தடம் பதிக்க உதவிய மதுரை ராசி ஸ்டுடியோஸ்

நடிகர் விஜயகாந்த் சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு காரணமாக இருந்த புகைப்படங்கள் மதுரை ராசி ஸ்டுடியோவில் எடுக்கப்பட்டவை. 1976,77 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அவரை ஆக்ஷன் ஹீரோவாக களமறிக்க உதவின. இன்றும் மதுரை கரிமேடு பகுதியில் ராசி ஸ்டுடியோ என்ற பெயரிலேயே, அதன் உரிமையாளர் ஆசை தம்பி அந்த ஸ்டுடியோவை நடத்தி வருகிறார்.

1986-ல் விஜயகாந்த் பிரபல நடிகராக அறியப்பட்ட பிறகு, வார இதழ் ஒன்றுக்கு பேட்டி அளி்த்த அவர், ராசி ஸ்டுடியோவையும் அதன் உரிமையாளர் ஆசைத் தம்பியையும் நினைவு கூர்ந்து பேசியிருந்தார். அந்த பேட்டியை நகல் எடுத்து பேனர் அடித்து தனது ஸ்டுடியோ வாசலில் ஒட்டி வைத்திருக்கிறார்.

சில நாட்கள் இரவெல்லாம் நின்று கூட புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக ஆசைதம்பி கூறுகிறார். அவர் அரசியலிலும் சாதித்திருக்கலாம் என்று ஆதங்கப்படுகிறார் அவர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)