டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட தருணத்தின் பிரத்யேக புகைப்படங்கள்

பட மூலாதாரம், AP
நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பாகp போட்டியிடுகிறார் டொனால்ட் டிரம்ப்.
அதற்காக பென்சில்வேனியாவின் பட்லரில் அவர் கலந்துகொண்ட தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில், அருகிலுள்ள கட்டடத்தில் இருந்து ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
உடனடியாக டொனால்ட் டிரம்ப் மேடையில் இருந்து அமெரிக்க ரகசிய சேவை ஏஜென்டுகளால் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார்.

பட மூலாதாரம், AP

பட மூலாதாரம், Getty Images
குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டிரம்ப் மேடையில் விழுந்த காட்சி.
"உச்ச ஸ்துதியில் விசில் போன்ற சத்தமும் துப்பாக்கி சுடும் சத்தமும் கேட்டது. இதைத் தொடர்ந்து உடனடியாக தோட்டா ஒன்று என் வலது காதைக் கிழித்துச் சென்றதை உணர்ந்தேன்,” என்று பின்னர் கூறினார் டிரம்ப்.

பட மூலாதாரம், AP

பட மூலாதாரம், Reuters

பட மூலாதாரம், Getty Images
டிரம்பை பாதுகாக்க அமெரிக்க ரகசிய சேவை ஏஜென்டுகள் மேடையில் அவரைச் சூழ்ந்தபோது, கையை மேலே உயர்த்தியவாறு அவர் காணப்பட்டார்.

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், AP

பட மூலாதாரம், AP
துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டவுடன், பிரசாரப் பொதுக்கூட்டத்தில் இருந்தவர்கள் தரையில் படுத்துக்கொண்டனர். சிலர் அந்தப் பகுதியை விட்டு உடனடியாக வெளியேறினர்.
டிரம்ப் மீது துப்பாக்கிச் டு நடத்தப்படுவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு கட்டடத்தின் கூரையில் துப்பாக்கியுடன் ஒரு நபரைப் பார்த்ததாக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட நபர் ஒருவர் பிபிசியிடம் கூறினார்.

பட மூலாதாரம், AP

பட மூலாதாரம், AP

பட மூலாதாரம், AP
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












