மலேசியாவில் சாலையில் மோதிய விமானம் - 10 பேர் உயிரிழப்பு; வாகனங்கள் சேதம்

மலேசியாவில் தனியார் ஜெட் விமானம் ஒன்று நெடுஞ் சாலையில் மோதியதில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் குறைந்தது 10 பேர் பலியாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இரண்டு வாகன ஓட்டிகளுடன் விமானத்தில் இருந்த 8 பேரும் தரையில் உயிரிழந்தனர்.

சாலையில் மோதியபோது விமானம் ஒரு தீப்பந்தம் போல வெடித்தது. தரையில் இருந்து அடர்ந்த கருப்பு புகை எழும்பியது போன்ற காட்சிகள் அடங்கிய காணொளிகள் பரவி வருகின்றன.

லங்காவி தீவில் இருந்து தலைநகர் கோலாலம்பூருக்கு மேற்கே உள்ள சிலாங்கூருக்கு அந்த விமானம் சென்று கொண்டிருந்தது.

பீச்கிராஃப்ட் 390 ரகத்தைச் சேர்ந்த இந்த விமானம் விபத்துக்குள்ளாகும் முன் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக் கோபுரத்துடனான தொடர்பை இழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விமானத்தில் இருந்து "அவசர அழைப்பு எதுவும் இல்லை; விமானம் தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டது," அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தச் சிறிய விமானம் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த 10 பேரில் விமானத்தில் இருந்த உள்ளூர் அரசியல்வாதியும் ஒருவர் என விமான நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது.

இருப்பினும், உள்ளூர் மருத்துவமனையில் தடயவியல் சோதனை முடிவுகள் இன்னும் வராததால், இறந்தவர்கள் அடையாளம் காண இயலாது என போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் கூறிவிட்டார்.

விபத்தில் உயிரிழந்தவர்களில் விமானி ஷாருல் கமல் ரோஸ்லானும் ஒருவர். , அவருக்கு மனைவியும் நான்கு மகன்களும் உள்ளனர்.

கடைசியாகப் பேசியபோது, “லவ் யூ அம்மா” என்று ஷாருல் கூறியதாக மருத்துவமனைக்கு வெளியே காத்திருந்த அவரது தாய் உள்ளூர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இரண்டு விமானிகளும் அனுபவம் வாய்ந்தவர்கள் என்று மலேசியாவின் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

விமானத்தின் கருப்புப் பெட்டி அல்லது விமானத் தரவுப் பதிவைக் கண்டுபிடிக்கும் பணியில் விசாரணை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

"விபத்துக்கான காரணம் என்ன என்பதை இப்போதைக்கு எங்களால் கூற முடியாது, ஏனெனில் விசாரணை நடந்து வருகிறது" லோக் கூறினார்.

ஒரு பொறியாளராகப் பணிபுரிந்து கொண்டிருந்தபோது பெரும் வெடிப்புச் சத்தத்தைக் கேட்டதாக நேரில் கண்ட ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

விமான் தாறுமாறாகப் பறந்ததைக் கண்டதாக மலேசிய விமானப்படையின் முன்னாள் வீரரான முகமது சியாமி முகமது ஹாஷிம் ஏஃஎப்பி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

" சிறிது நேரத்திற்குப் பிறகு நான் ஒரு பெரிய சத்தத்தைக் கேட்டேன்," என்று அவர் கூறினார்.

"நான் அந்த இடத்தை நோக்கி வேகமாகச் சென்று பார்த்தபோது ஒரு விமானத்தின் பாகங்களைக் கண்டேன். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை."

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: