இலங்கை ஜனாதிபதி மாளிகையில் செல்ஃபி, ஜிம், நீச்சல் - உற்சாகத்தில் மக்கள்

பட மூலாதாரம், Getty Images
இலங்கை வரலாற்றிலேயே முதல் முறையாக போராட்டக்காரர்களால் நாட்டின் ஜனாதிபதி மாளிகை முற்றுகையிடப்பட்டு அதனுள்ளே போராட்டக்குழுவினர் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை முகாமிட்டுள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
பலத்த பாதுகாப்பு நிறைந்த ஜனாதிபதி மாளிகையின் கிட்டத்தட்ட எல்லா அறைகளிலும் போராட்டக்காரர்கள் நிரம்பியுள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
ஜனாதிபதி மாளிகையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போராட்டக்காரர்கள், அங்குள்ள அறைகளில் உள்ள வசதிகளை பார்வையிட்டு வருகின்றனர். சிலர் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி சில வகை வசதிகளை பயன்படுத்தி வருகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
போராட்டக்காரர்கள் பலரும் மாளிகையின் ஒவ்வொரு அறையாக சென்றனர். அங்குள்ள சமையலறைக்கு சென்ற குழுவினர் அங்கு முன்தினம் சமைக்கப்பட்டு மீதமிருந்த உணவு வகைகளை சாப்பிட்டனர்.

பட மூலாதாரம், Getty Images
சில போராட்டக்குழுவினர் ஜனாதிபதி பயன்படுத்தியதாக நம்பப்படும் அறைக்குள் சென்று அங்கிருந்த அலமாரிகளை திறந்தனர்.

பட மூலாதாரம், Getty Images
சிலர் ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தாரால் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் கழிவறையை பார்வையிட்டனர். அந்த அறையும் குளிர்சாதன வசதியுடன் இருந்ததை அறிந்த போராட்டக்காரர்கள் அதனுள்ளே சென்று பார்வையிட்டனர்.

பட மூலாதாரம், SAJID NAZMI
ஜனாதிபதி மாளிகைக்கு பக்கவாட்டில் மிகப்பெரிய நீச்சல் குளம் உள்ளது. இந்த நீச்சல் குளத்தை பிரத்யேகமாக ஜனாதிபதியும் அவரது குடும்பத்தினர் மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
அந்த நீச்சல் குளத்தைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கானோர் வேடிக்கை பார்க்க, ஒரு சிலர் அதனுள் ஆர்வ மிகுதியில் குதித்து நீச்சலடித்துக் குளித்தனர்.

ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் உள்ள மிகப்பெரிய அறையில் உடற்பயிற்சி ஏராளமான கருவிகள் உள்ளன. அந்த அறைக்குள் சென்ற சிலர், அங்கிருந்த கருவிகளை இயக்கி உடற்பயிற்சி செய்தனர். சிலர் அங்கிருந்தபடி செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் உள்ள ஜனாதிபதி மாளிகையை சுற்றுலா தலம் போல போராட்டக்காரர்கள் பார்வையிட்டு வருகின்றனர்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












