இலங்கை நெருக்கடி: கொளுத்தப்பட்ட வாகனங்கள், தொடரும் பதற்றம் - தற்போதைய நிலையை விளக்கும் படங்கள்

பட மூலாதாரம், Getty Images
இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஒரு மாத காலத்திற்கும் மேலாக போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்கள் என்று கூறப்படுவோர் இந்த போராட்டம் நடந்து வந்த இடத்துக்கு சென்று தாக்கத் தொடங்கியதை அடுத்து இரண்டு தரப்புக்கும் மோதல் மூண்டது.
இந்நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விலகல் கடிதம் அளித்தார். ஆனாலும் வன் செயல்கள் தொடர்ந்தன.
மஹிந்த ராஜபக்ஷ பூர்வீக இல்லம் உள்பட பல ஆளும் கட்சித் தலைவர்களின் வீடுகள் கொளுத்தப்பட்டன. இன்று மே 10ம் தேதி காலை மஹிந்தவின் பதவி விலகல் ஏற்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. இதையடுத்து நாட்டில் பதற்றம் தொடர்ந்து வருகிறது.
மே 9, திங்கள்கிழமை தொடங்கிய வன்செயல்களின் தாக்கத்தையும், நாட்டின் தற்போதைய நிலையையும் காட்டும் புகைப்படங்கள் இதோ:

பட மூலாதாரம், Getty Images



பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Getty Images


இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








