You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு இரண்டரை கோடி ரூபாய் பகிர்ந்தளித்த இலங்கையர்
இலங்கையில் கோவிட் தொற்றின் தாக்கம் தற்போது வெகுவாக அதிகரித்துள்ள நிலையில், கடந்த 20ம் தேதி முதல் எதிர்வரும் 30ம் தேதி வரை நாட்டில் முடக்க நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால், பெருமளவிலான மக்கள் பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வருமானத்தை இழந்து, வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு அரசாங்கம் தற்போது 2,000 ரூபா வழங்கி வருகிறது.
இந்த நிலையில், தனியொரு நபர், தனது சொந்த நிதியில் ஒருவருக்கு தலா 1,000 ரூபா வழங்கும் திட்டமொன்றை ஆரம்பித்துள்ளார்.
இதன்படி, இந்த திட்டத்தின் முதற்கட்டமாக, இரண்டரை கோடி ரூபாவை இதற்காக ஒதுக்கீடு செய்துள்ளதாக கூறுகிறார் அவர்.
கொழும்பு புறநகர் பகுதியான களனி பகுதியைச் சேர்ந்த மஞ்சுள பெரேரா இந்த நிதிக் கொடையை வழங்குகிறார்.
வருமானத்தை இழந்து, வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்கள் பலருக்கு தலா 1,000 ரூபா வீதம் மஞ்சுள பெரேரா வழங்கியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் பிபிசி தமிழ், மஞ்சுள பெரேராவை தொடர்புக் கொண்டு வினவியது.
கொரோனா பரவல் ஆரம்பித்த காலம் முதல் தான் மக்களுக்கு சேவையாற்றி வருவதாக அவர் கூறினார்.
ஆரம்ப கட்டத்தில் மூன்று கொள்கலன்களின் அரிசி மூடைகளை கொண்டு வந்து, மக்களுக்கு பகிர்ந்தளித்ததாக அவர் குறிப்பிட்டார்.
அதுமாத்திரமன்றி, லீசிங் அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்ட வாகனங்களுக்கு லீசிங் பணத்தை செலுத்தியுள்ளதாகவும், உலர் உணவுப் பொருட்களை மக்களுக்கு விநியோகித்துள்ளதாகவும் மஞ்சுள பெரேரா தெரிவிக்கின்றார்.
எதிர்வரும் காலங்களிலும் தான் இவ்வாறான உதவிகளை செய்ய எதிர்பார்த்துள்ளதாக அவர் கூறுகிறார்.
மஞ்சுள பெரேரா இலங்கையிலுள்ள ஒரு தொழிலதிபர் என்பதுடன், அவர் அரசியல் செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகிறார்.
பிற செய்திகள்:
- இறுதி நொடி வரை மக்கள் வெளியேற்றப் பணிகள் தொடரும் - அமெரிக்கா
- நான்கு கால்கள் கொண்ட திமிங்கலம் - புதிய உயிரினம் கண்டுபிடிப்பு
- காபூல் தாக்குதல் - இதுவரை நடந்தவை: முக்கிய தகவல்கள்
- கொரோனா தடுப்பூசி பக்கவிளைவுகள் கண்டுபிடிப்பு: ’நோயின் ஆபத்தை ஒப்பிடுகையில் குறைவு’
- பூச்சி இனங்களின் அழிவுக்கு காரணமான தெரு விளக்குகள் – ஆய்வாளர்கள் சொல்லும் மாற்று வழி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்