இந்தியா Vs பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: 'உணர்ச்சி வேகத்தில் கூறிவிட்டேன்' - கருத்துக்கு மன்னிப்பு கேட்டார் வக்கார் யூனிஸ்

வக்கார்

பட மூலாதாரம், Getty Images

"இந்துக்கள் எதிரில் முகமது ரிஸ்வான் தொழுகை செய்தது எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது", என்ற கருத்து தெரிவித்ததற்கு மன்னிப்பு கோரியுள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் பயிற்சியாளருமான வக்கார் யூனிஸ்.

இதுகுறித்து வக்கார் யூனிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவையும் வெளியிட்டுள்ளார்.

"எனக்கு அத்தகைய எண்ணம் முற்றிலும் இல்லை. நான் மதம் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் குறித்து எப்போதும் கருத்து கூறியதில்லை. அதைக்கொண்டு நான் சண்டையிடவும் இல்லை. நான் மிகவும் உற்சாகமாக இருந்தேன். போட்டியில் பாகிஸ்தான் வென்றது. நான் மிகவும் உற்சாகமாக இருந்தேன். நான் ரிஸ்வானைப் பார்த்தேன். அதைக்கொண்டு சில வார்த்தைகளைப் பயன்படுத்தினேன். இந்த செயல் சிலரை புண்படுத்தியுள்ளது. இதனால், நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எனக்கு அத்தகைய எண்ணம் இல்லை." என்று வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார்.

தான் தவறு செய்திருப்பதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். "பாகிஸ்தான் போட்டியை வென்றதால் அதிக உற்சாகமாக இருந்தேன். ஆனால், நான் அத்தகைய கருத்தை கூறியிருக்கக்கூடாது என்பதையும் ஒப்புக்கொள்கிறேன்." என்று கூறியுள்ளார். இந்த வீடியோ பதிவை தவிர அவர் தனது ட்விட்டர் பக்கத்திலும் ட்வீட் செய்து மன்னிப்பு கோரியுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

ஐசிசி டி20 உலக கோப்பையில், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் பெரும் வெற்றியடைந்ததையடுத்து, அந்நாட்டு உள்துறை அமைச்சர் ஷேக் ரஷித், இது இஸ்லாம் மதத்தின் வெற்றி என்று குறிப்பிட்டிருந்தார். அதன் பிறகு, வக்கார் இந்தியாவுடன் நடந்த போட்டியின் இடைவேளையின்போது முகமது ரிஸ்வான் தொழுகை செய்தது மிகவும் சிறப்பாக இருந்தது என்று கூறியிருந்தார்.

ஏ.ஆர்.ஒய் செய்தித் தொலைக்காட்சியில், தொகுப்பாளர் காஷிஃப் அப்பாசியின் `ஆஃப் தி ரிக்கார்ட்` நிகழ்ச்சியில், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது குறித்த விவாதத்தில் வக்கார் யூனிஸ் கலந்துக்கொண்டார்.

அப்போது பேசிய அவர், "பாகிஸ்தான் வீரர்கள் மிகவும் உத்வேகமாக இருந்தனர். ஸ்ட்ரைக் ரோடேஷனும் (strike rotation) செய்தனர். அவர்களின் முகங்களின் தன்னம்பிக்கை தெரிந்தது. ரிஸ்வான் மிகவும் நல்ல விஷயத்தை செய்தார். அவர் இந்துக்கள் எதிரில் தொழுகை செய்தார். அது எனக்கு மிகவும் சிறப்பு மிக்கதாக இருந்தது", என்று கருத்து தெரிவித்தார்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

இவ்வாறு வக்கார் யூனிஸ் பேசிக்கொண்டு இருக்கும்போது, காஷிப் அப்பாசி சிரித்துக்கொண்டிருந்தார். அந்த விவாதத்தில் முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் ஷோயப் அக்தரும் இருந்தார்.

ரிஸ்வான் தொழுகையில் ஈடுபடும் வீடியோ பதிவை, ஷோயப் அக்தர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, "அல்லாஹ் தன் முன் தலைகுனிந்த எவரையும் பிறர் முன் தலைகுனிய வைக்கமாட்டார். அல்லாஹ்வின் மகிமை" என்று பதிவிட்டிருந்தார்.

X பதிவை கடந்து செல்ல, 3
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 3

வக்கார் யூனிஸ் பாகிஸ்தானின் சிறந்த கிரிக்கெட் வீரர். பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர், கேப்டன் மற்றும் வேகப்பந்து வீச்சாளராக இருந்துள்ளார். கிரிக்கெட் `பண்பட்டோரின் விளையாட்டு` என்பதற்கு எதிராக வக்கார் யூனிசின் இந்த கருத்து இருப்பதாக பலரும் விமர்சித்துள்ளனர்.

கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்லே தனது ட்விட்டர் பக்கத்தில், "வக்கார் யூனிஸ் போன்ற மதிக்கத்தக்க ஒருவர், இத்தகைய கருத்து தெரிவித்திருப்பது, எனக்கு மிகவும் ஏமாற்றத்தை அளிக்கிறது", என்று பதிவிட்டுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 4
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 4

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத், அவரது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து விமர்சித்து, "இந்துக்களுக்கு எதிரில் முகமது ரிஸ்வான் தொழுகை செய்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது-வக்கார்; விளையாட்டில் எத்தகைய மதம் சார்ந்த மனப்பான்மை இது. வெட்ககரமான மனிதர் இவர்", என்று பதிவிட்டுள்ளார்.

பா.ஜ.கவின் தேசிய பொது செயலாளர் பி.எல்.சந்தோஷ் கூறுகையில், "அன்பு, கலை மற்றும் விளையாட்டு ஆகியவற்றுக்கு எந்த எல்லைகளும் இல்லை என்று நமக்கு தினமும் உபதேசக்கப்படுகிறது. ஷேக் ரஷீத் மற்றும் வக்கார் யூனிஸ் கருத்துகளுக்கு பிறகு, அத்தகைய நபர்கள் வாயை மூடிக்கொண்டு இருக்கின்றனர். நாட்டு மக்கள் நம்முடன் இருக்கும் இத்தகையவர்களிடம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.", என்று பதிவிட்டுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 5
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 5

பாகிஸ்தானின் மூத்த பத்திரிகையாளர் ரஸா அகமது ரூமி, "வக்கார் யூனிஸின் கருத்து வெட்ககரமானது. இந்தியாவில் ஏராளமான இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள். பாகிஸ்தானில் லட்சக்கணக்கான இந்துக்கள் இருக்கிறார்கள். விளையாட்டு என்பது விளையாட்டுதான். மதங்களுக்கு இடையேயான சண்டை இல்லை" என்று கூறியிருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :