மேரி கோம்: 'கடைசி நிமிடத்தில் ஆடையை மாற்றச் சொன்னார்கள்' - நரேந்திர மோதி, அமைச்சர்களை நோக்கி கேள்வி

மேரி கோம்

பட மூலாதாரம், Getty Images

ஆறுமுறை உலகச் சாம்பியனான இந்தியாவின் மேரி கோம் ஒலிம்பிக் போட்டிகளில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோற்று வெளியேறியிருப்பது விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

கடைசி நேரத்தில் ஆடையை மாற்றச் சொன்னது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பியிருப்பதும், நடுவர்களின் கணிப்பு சரியாக இல்லை என்று அவர் கூறியிருப்பதும் அதிர்வலைகளை உருவாக்கியிருக்கின்றன.

ஒலிம்பிக் காலிறுதிக்கு முந்தைய போட்டியில் மொத்தமுள்ள மூன்று சுற்றுகளில் இரண்டு சுற்றுகளை மேரி கோம் வென்றார். இருப்பினும் மொத்த புள்ளிகளின் அடிப்படையில் அவருடன் மோதிய கொலம்பியாவின் வேலன்சியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இது குறித்து போட்டிக்குப் பிறகு அதிர்ச்சியை வெளியிட்ட மேரிகோம் தாமே வெற்றி பெற்றதாக நினைத்திருந்ததாகக் குறிப்பிட்டார். அமைச்சர் கிரண் ரிஜிஜுவின் ட்விட்டரை பார்த்த பிறகுதான் தாம் தோல்வியடைந்திருப்பதே தெரிய வந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

முதல் சுற்றின்போது 5 நடுவர்களில் நான்கு நடுவர்கள் வேலன்சியாவுக்கு அதிக புள்ளிகள் கொடுத்தனர். அடுத்த இரண்டு சுற்றுகளில் மூன்று நடுவர்கள் மேரிகோமுக்கு அதிக புள்ளிகளை வழங்கினர். ஆனால் கூட்டுத் தொகையில் மூன்று நடுவர்கள் வழங்கிய புள்ளிகள் வேலன்சியாவுக்கே அதிகமாக இருந்தன.

அந்த அடிப்படையில் வேலன்சியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. "இது மோசமான மதிப்பீடு" என்று மேரிகோம் கூறியுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

இது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, "எங்களுக்கு நீங்கள்தான் வெற்றியாளர், நடுவர்களுக்கு வேறு கணக்கீடு இருந்திருக்கிறது" என்று கூறியுள்ளார்.

"கடைசி நேரத்தில் ஆடைய மாற்றச் சொன்னார்கள்"

மற்றொரு முக்கியமான நிகழ்வையும் மேரி கோம் இப்போது வெளிப்படுத்தியிருக்கிறார். வேலன்சியாவுடனான சண்டை தொடங்குவதற்கு ஒரு நிமிடத்துக்கு முன்னதாக அணிந்திருந்த ஆடையை மாற்ற வேண்டும் என்று ஏற்பாட்டாளர்கள் அறிவுறுத்தியதாக மேரி கோம் கூறியிருக்கிறார்.

"அது அதிர்ச்சியாக இருந்தது. இது ஏன் என்று யாராவது எனக்கு விளக்குகிறீர்களா" என்று கேட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் மேரி கோம் பதிவிட்டுள்ளார். பிரதமர், அமைச்சர் அனுராக் தாக்குர், கிரண் ரிஜிஜு உள்ளிட்டோரை இந்தப் பதிவில் அவர் இணைத்திருக்கிறார்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

மேரி கோமின் வழக்கமான மேலாடையில் "மேரி கோம்" என எழுதப்பட்டிருக்கும். ஆனால் முதல் பெயர் மட்டுமே இருக்க வேண்டும் என்று ஏற்பாட்டாளர்கள் கூறியதாக மேரி கோம் கூறுகிறார். புதிதாக ஏற்பாட்டாளர்கள் வழங்கிய ஆடையில் எதுவும் எழுதப்படவில்லை.

அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறுவது என்ன?

ஒலிம்பிக் குத்துச் சண்டையில் மேரி கோம் தோல்வியடைந்தது "கெடுவாய்ப்பானது" என்று கூறியிருக்கும் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார். எனினும் நடுவர்களின் முடிவை எதிர்த்து மேல்முறையிடு செய்யப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

"ஒலிம்பிக்கில் விதிமுறைகள் இருக்கின்றன. அவற்றை எதிர்த்து நாம் மேல்முறையீடு செய்ய முடியாது. இரண்டாவது மற்றும் மூன்றாவது சுற்றில் வென்ற மேரிகோம் தோல்வியடைந்தது கெடுவாய்ப்பு. ஒரேயொரு புள்ளியில் அவர் தோல்வியடைந்திருக்கிறார். இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் நரீந்தர் பத்ராவுடன் இதுகுறித்துப் பேசினேன். நாம் மேல்முறையீடு செய்வதற்கான உரிமை இல்லை. அதனால் இதற்கு மேல் எதுவும் நடக்கும் என்று நான் கருதவில்லை" என்று கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார்.

மேரி கோம்

பட மூலாதாரம், Getty Images

"நான் மேரி கோமிடம் சொல்ல விரும்புவது இதுதான். நீங்கள் ஏற்கெனவே சாம்பியன். ஆறு முறை சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறீர்கள். ஒலிம்பிக் பதக்கமும் பெற்றிருக்கிறீர்கள். மேரி கோம் எங்களுக்கு ஏற்கெனவே சூப்பர் ஸ்டார்" என்று அவர் கூறியுள்ளார்.

ஒலிம்பிக்கில் குத்துச் சண்டை விதிகள் கூறுவது என்ன?

ஒலிம்பிக் குத்துச் சண்டையில் ஒவ்வொரு சண்டையும் மூன்று சுற்றுக்களாக நடத்தப்படும். ஒவ்வொரு சுற்றும் மூன்று நிமிடத்தைக் கொண்டது. இடையே ஒரு நிமிடம் இடைவேளை வழங்கப்படும். பெண்கள் குத்துச் சண்டையின்போது தலைக் கவசம் அணிந்து கொள்வது கட்டாயம். ஆண்களுக்கு இது கட்டாயமில்லை.

இரண்டு வழிகளில் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படுகிறது. ஒன்று நாக் அவுட். எதிராளியை தரையில் அடித்து வீழ்த்திய பிறகு, அவரால் 10 எண்ணும் வரை எழுந்திருக்க முடியாவிட்டால் அவர் நாக் அவுட் முறையில் வீழ்த்தப்பட்டதாக அறிவிக்கப்படும். போட்டி உடனடியாக முடிவுக்கு வந்துவிடும்.

நாக் அவுட் முறையில் யாரும் வீழ்த்தப்படாமல், மூன்று சுற்றுகள் முடிவு வரை சண்டை நீடித்திருந்தால் புள்ளிகள் அடிப்படையில் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படும்.

புள்ளிகளை வழங்குவதற்கு 5 நடுவர்கள் இருப்பார்கள். ஒவ்வொரு நடுவரும் ஒவ்வொரு சுற்றுகளுக்கு 10 புள்ளிகள் அளவுக்கு இருவருக்கும் புள்ளிகளை அளிக்க வேண்டும். சரியான இடத்தில் குத்தப்படும் குத்துகள், உத்திகள் போன்றவற்றின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படுகின்றன. ஒரு சுற்றில் வெற்றி பெற்றவருக்கு 10 புள்ளிகளும், தோல்வியடைந்தவருக்கு 7 முதல் 9 புள்ளிகளும் வழங்கப்படுவது வழக்கம். தவறுகளுக்கு புள்ளிகள் குறைக்கப்படும்.

மேரி கோம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மேரி கோம்

மூன்று சுற்றுகளின் முடிவில் ஒவ்வொரு நடுவர் வழங்கிய புள்ளிகளின் கூட்டுத் தொகையின் அடிப்படையில், அதிக நடுவர்கள் யாரைத் தேர்வு செய்திருக்கின்றனரோ அவரே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

இந்த விதிகளின் அடிப்படையிலேயே இரண்டு சுற்றுகளில் மேரி கோம் வென்றிருந்தாலும், ஒட்டு மொத்த புள்ளிகளைக் கணக்கெடுக்கும்போது, 3 நடுவர்கள் அளித்த மொத்த புள்ளிகளின் எண்ணிக்கை வேலன்சியாவுக்கே அதிகமாக இருந்தது. மேரி கோமுக்கு 2 நடுவர்களின் புள்ளிகள் சாதகமாக இருந்தன.

"அயன் லேடி"

மேரி கோமை 'அயர்ன் லேடி' என்று அழைக்கிறார்கள். குத்துச்சண்டையில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் இவர்தான். 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் பெற்றார்.

2001ஆம் ஆண்டில் முதல் உலக சாம்பியன்ஷிப்பை வென்றார், அதன் பின்னர் 2019 வரை, உலக சாம்பியன்ஷிப்பில் மொத்தம் எட்டு பதக்கங்களை வென்றுள்ளார்.

மேரி கோம் தனது வாழ்க்கையில் மோசமான நாட்களையும் சந்தித்துள்ளார். 2014 ஆம் ஆண்டில் கிளாஸ்கோவிலும், பிறகு ரியோ ஒலிம்பிக்கிலும் தகுதி பெற முடியவில்லை. எனினும் அவர் தோல்விகளில் இருந்து மீண்டு வந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :