லயோனல் மெஸ்ஸி: பீலேவின் சாதனையைச் சமன் செய்த அர்ஜென்டினா, பார்சிலோனா வீரர்

பட மூலாதாரம், Eric Alonso / getty images
ஒரே கால்பந்து க்ளப் அணிக்கு, 643 கோல்கள் அடித்து, உலக காலபந்து ஆட்டத்தின் ஜாம்பவானாக விளங்கிய பீலேவின் சாதனையைச் சமன் செய்திருக்கிறார் லயோனால் மெஸ்ஸி.
நேற்று வேலன்சியா மற்றும் பார்சிலோனாவுக்கு இடையே நடந்த லா லிகா போட்டியில், மெஸ்ஸி தன் 643-வது கோலைப் பதிவு செய்தார்.
இரு கால்பந்தாட்ட ஜாம்பவான்களும் தத்தமது க்ளப்புகளுக்காக 643 கோல்கள் அடித்து இருக்கிறார்கள். லயோனல் மெஸ்ஸி பார்சிலோனா க்ளப்புக்கு 643 கோல்களை அடித்திருக்கிறார்.
மெஸ்ஸியின் சாதனைக்கும், பார்சிலோனா அணியுடனான அவரது பயணத்துக்கும் வாழ்த்து தெரிவித்துள்ள பீலே, ஒரே அணியை ஒரு வீரர் நீண்ட காலம் நேசித்து விளையாடுவது துரதிர்ஷ்டவசமாக அருகி வருகிறது என்று கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
33 வயதாகும் மெஸ்ஸி கடந்த 2005-ம் ஆண்டு முதல் முறையாக பார்கா (பார்சிலோனாவை செல்லமாக இப்படித்தான் சுருக்கி அழைப்பார்கள்) க்ளப்புக்காக, அல்பசிடே க்ளப்புக்கு எதிராக விளையாடி தன் முதல் கோலைப் பதிவு செய்தார்.
பீலே, பிரேசிலியன் சைட் சான்டோஸ் என்கிற க்ளப்புக்காக, 1956 - 1974-ம் ஆண்டு வரை, 19 சீசன்களில் விளையாடி, தன் 643 கோல்களைப் பதிவு செய்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
மெஸ்ஸி இப்படி ஒரு சாதனை படைத்தும், பார்சிலோனா க்ளப் அணி, லா லிகா புள்ளிகள் பட்டியலில் பின் தங்கிவிட்டது.
26 முறை கோப்பையை வென்ற பார்சிலோனா க்ளப் அணி, இந்த ஆண்டின் லா லிகா போட்டியின் புள்ளிகள் பட்டியலில், 21 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. முதலிடத்தில் இருக்கும் அட்லெடிகோ மேட்ரிட்டை விட எட்டு புள்ளிகள் பின் தங்கி இருக்கிறது.
அவ்வளவு ஏன்? பார்சிலோனா அணிக்கு எப்போதும் போட்டியாக வரும் ரியல் மேட்ரிட் அணி கூட, லா லிகா புள்ளிகள் பட்டியலில் பார்சிலோனாவை விட ஐந்து புள்ளிகள் அதிகம் பெற்று 26 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. அடுத்து ரியல் மேட்ரிட் அணி, எய்பருடன் விளையாட இருக்கிறது.
நேற்று வேலன்சியா உடன் மோதிய ஆட்டத்தை, 2 -1 என்கிற கோல் கணக்கில், பார்சிலோனா எளிதில் வென்றிருக்கலாம். இருப்பினும் பார்சிலோனா வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டது.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












