RCB Vs DC: அடுத்தடுத்து திருப்பம் - பெங்களூரூ, டெல்லி இரண்டும் பிளே ஆஃப்க்கு தகுதி பெற்றது எப்படி?

RCB Vs DC: அடுத்தடுத்து திருப்பம் - பெங்களூரூ, டெல்லி இரண்டும் பிளே ஆஃப்க்கு தகுதி பெற்றது எப்படி?

பட மூலாதாரம், BCCI / IPL

ஐபிஎல் 2020 சீசன் முடிவுகள் பல்வேறு தொடர் ஆச்சரியங்களை தந்திருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு கூட தகுதி பெறவில்லை.

சேஸிங்கில் கில்லியாக இருந்த ராஜஸ்தான் அவசியம் வென்றே ஆக வேண்டிய கடைசி லீக் போட்டியில் மிக மோசமான தோல்வியைத் தழுவி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது.

ஐபிஎல்லின் முதல் பாதியில் வரிசையாக தோல்வியைத் தழுவிய பஞ்சாப் பிற்பாதியில் ஐந்து போட்டிகளில் அடுத்தடுத்து வென்று மிரள வைத்தது.

ஆனால் அந்த அணியும் பிளே ஆஃபுக்கு தகுதி பெறவில்லை. ஐபிஎல்லின் லீக் சுற்று முடிவதற்கு இரண்டு போட்டிகள் மட்டுமே மீதமிருக்கும் சூழலில், ஒரு அணி மட்டுமே அதிகாரப்பூர்வமாக பிளே ஆஃபுக்கு தகுதி பெற்றிருந்தது.

இந்த நிலையில்தான் புள்ளிப்பட்டியலில் 14 புள்ளிகளோடு இருந்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதின.

சிராஜ் 19வது ஓவரின் கடைசி பந்தை ஷார்ட் பாலாக வீச, ரிஷப் பந்தின் பேட்டில் டாப் எட்ஜான பந்து விக்கெட் கீப்பர் ஏபி டிவில்லியர்ஸை தாண்டி பௌண்டரிக்குச் சென்றது.

அப்போது பெவிலியனில் இருந்த டெல்லி வீரர்கள் முகாம் குதூகலமானது, மற்றொரு பக்கம் பெங்களூரு வீரர்கள் முகாமிலும் புன்னகை ததும்பியது. 

டெல்லி கேபிட்டல்ஸ் அணி, போட்டியில் ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுவிட்டது. இதன் மூலம் பிளே ஆஃப் சுற்றில் குவாலிபியர் 1 போட்டியில் மும்பை அணியுடன் விளையாடுகிறது.

ஆனால் இன்னொரு விஷயம் என்னவெனில் இந்த போட்டியில் தோல்வியடைந்த பெங்களூரு அணியும் பிளே ஆஃபுக்குள் தகுதி பெற்றுவிட்டது. 

RCB Vs DC: அடுத்தடுத்து திருப்பம் - பெங்களூரூ, டெல்லி இரண்டும் பிளே ஆஃப்க்கு தகுதி பெற்றது எப்படி?

பட மூலாதாரம், BCCI / IPL

இப்படியொரு விநோதமான சூழல் உருவாக என்ன காரணம்? இனி கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஹைதராபாத் அணிகளின் நிலை என்ன? சற்று விரிவாக பார்க்கலாம். இந்த போட்டிக்கு நடைபெறுவதறகு முன்னதாக டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா ஆகிய மூன்று அணிகளும் 14 புள்ளிகள் பெற்றிருந்தன. ஆனால் ரன்ரேட் அடிப்படையில் பெங்களூரு அணி புள்ளிபட்டியலில் இரண்டாமிடமும், டெல்லி மூன்றாமிடமும், கொல்கத்தா நான்காமிடமும் பிடித்திருந்தன.

ஒரே ஒரு விஷயம் என்னவெனில் கொல்கத்தா 14 போட்டிகளையும் விளையாடி முடித்திருந்தது. ஐந்தாவது இடத்தில் ஹைதரபாத் அணி 12 புள்ளிகளோடு இருக்கிறது. 

இந்த போட்டியில் டெல்லி வென்றதால் புள்ளிபட்டியலில் இரண்டாமிடம் பிடித்தது. பெங்களூரு அணி தோற்றபோதிலும் டெல்லி அணியின் வெற்றியை 19வது ஓவர் வரை தாமதப்படுத்தியதன் காரணமாக புள்ளிபட்டியலில் மூன்றாமிடம் பிடித்துள்ளது. கொல்கத்தா நான்காவது இடத்தில் இருக்கிறது. 

RCB Vs DC: அடுத்தடுத்து திருப்பம் - பெங்களூரூ, டெல்லி இரண்டும் பிளே ஆஃப்க்கு தகுதி பெற்றது எப்படி?

பட மூலாதாரம், BCCI / IPL

செவ்வாய்க்கிழமை ஹைதராபாத் அணி மும்பை அணிகள் மோதும் போட்டியில் ஒருவேளை ஹைதராபாத் வென்றால், அந்த அணி புள்ளிபட்டியலில் 14 புள்ளிகளோடு மூன்றாமிடத்துக்கு தாவிவிடும். 

ஒருவேளை ஹைதராபாத் தோல்வியடைந்தால் கொல்கத்தா அணி புள்ளிபட்டியலில் 4-வது இடம் பிடிக்கும். 

தற்போது மும்பை, டெல்லி, பெங்களூரு அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன. செவ்வாய்க்கிழமை போட்டியின் முடிவை பொறுத்து பெங்களூரு அணியுடன் எலிமினேட்டர் போட்டியில் மோதப்போவது கொல்கத்தாவா அல்லது ஹைதரபாத்தா என்பது தெரியும். 

திங்கட்கிழமை போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் சேஸிங்கை தேர்ந்தெடுத்தார். பெங்களூரு அணியில் படிக்கல் 41 பந்துகளில் 50 ரன்கள் அடித்தார்.

RCB Vs DC: அடுத்தடுத்து திருப்பம் - பெங்களூரூ, டெல்லி இரண்டும் பிளே ஆஃப்க்கு தகுதி பெற்றது எப்படி?

பட மூலாதாரம், BCCI / IPL

கோலி - டிவில்லியர்ஸ் என இரு அனுபவ வாய்ந்த பேட்ஸ்மேன்களும் மிகப்பெரிய அளவில் ரன்களை குவிக்கவில்லை. டிவில்லியர்ஸ் கடைசி ஓவரில் அவுட் ஆனார், அவர் 21 பந்துகளில் 2 சிக்ஸர்கள், ஒரு பௌண்டரி விளாசி 35 ரன்கள் எடுத்தார்.

20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது பெங்களூரு. அன்ரிச் மற்றும் ரபடா கூட்டணி 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது. விராட் கோலி விக்கெட்டை அஷ்வின் வீழ்த்தியிருந்தார். 

டெல்லி அணியின் சேஸிங்கின் போது சிராஜ் பிரித்வி ஷா விக்கெட்டை வீழ்த்தி பெங்களூருக்கு நம்பிக்கை தந்தார்.

ஆனால் தவான் - ரஹானே ஜோடி டெல்லிக்கு முழு நம்பிக்கை தந்தது, இருவரும் அரை சதமடித்தனர்.

தவான் 41 பந்துகளில் 54 ரன்களும், ரஹானே 46 பந்துகளில் 60 ரன்களும் எடுத்தனர். இவ்விருவரின் பொறுப்பான ஆட்டமே டெல்லியின் வெற்றிக்கு முக்கிய காரணம். 

கடைசி இரண்டு ஓவர்களில் 15 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில், சிராஜ் வீசிய 19வது ஓவரில் 16 ரன்களை விளாசி டெல்லி வென்றது. 

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: