ப்ரோஸ்டேட் புற்றுநோய்: தவிர்க்க முன்கூட்டியே பரிசோதனை தேவை

ப்ராஸ்டேட் சுரப்பி புற்றுநோயால் ஏற்படும் மரணங்களில் பாதி எண்ணிக்கையிலான மரணங்களை, 40 வயதுகளின் பிற்பகுதியில் இருக்கும் ஆண்களுக்கு புற்று நோய் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறதா என்பதை முன்கூட்டியே பரிசோதிப்பதன் மூலம், தவிர்த்து விட முடியும் என்று அமெரிக்காவிலும் ஸ்வீடனிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
இந்த யோசனை சர்ச்சைக்குரிய ஒன்று, ஏனென்றால், இத்தகைய பரிசோதனை முறை, அதாவது ரத்தத்தில் இருக்கும் புரதச்சத்தின் அளவைக் கணிப்பது, என்பது நம்பக்கூடியதாக இருக்கலாம்.
ஆனால் நாற்பதுகளின் இறுதிப்பகுதிதான் ஆண்களின் வயதில், இந்த ப்ரோஸ்டேட் புற்று நோய் இருக்கிறதா என்பதைப் பரிசோதிக்க மிகவும் பொருத்தமான வயது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
இந்தப் பரிசோதனையைச் செய்வதை, ஆண்கள் 50வயதைத் தொடும் வரை காலம் கடத்துவது என்பது , இந்தப் புற்று நோய், சிகிச்சையால் குணமாக்கக்கூடிய கட்டத்திலேயே கண்டுபிடிக்கும் வாய்ப்பைக் குறைத்துவிடுகிறது என்றும், இந்த 40களை விட வயது குறைந்த ஆண்களைப் பரிசோதிப்பது என்பது துல்லியமான முடிவுகளைத் தராது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.








