what if... உங்கள் அறிவுக்கு தீனிபோடும் அறிவியல் கட்டுரைகள்

காணொளிக் குறிப்பு, இப்படி நடந்தால் எப்படி இருக்கும்?

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பயன்பாடும் தலையீடும் இல்லாமல் நம் அன்றாட வாழ்க்கை சாத்தியமே இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. ஆனால், அவற்றின் மூலம் கிடைக்கப்பெறும் வரம்புகளற்ற வாய்ப்புகள் குறித்து நாம் முழுமையாக அறிந்திருக்கிறோம் என்று சொல்ல முடியாது.

உங்களுக்கு அந்தக் குறையைப் போக்கத்தான் பிபிசி தமிழ் உள்ளது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்த மிக எளிமையான கேள்விகளுக்கு விரிவான பதில்களை பிபிசி தமிழின் கட்டுரைகள் வழங்குகின்றன.

அவற்றில் உங்களுக்கு படிக்க சுவாரசியமாகவும், படித்த பின்னர் உதவியாகவும் இருக்கும் சில கட்டுரைகள் பிபிசி தமிழால் தொகுக்கப்பட்டுள்ளன.

நவீன அறிவியல் மற்றும் தற்கால தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஏதாவது ஒரு குறிப்பிட்ட நாட்டினர் அல்லது மொழியினர் மட்டுமே நிபுணர்களாக இருப்பார்கள் என்ற நிலையம் சமீபத்திய ஆண்டுகளில் மாறிவிட்டது.

உலகெங்கிலும் உள்ள வெவ்வேறு நாடுகளில் பணியாற்றி கொண்டிருக்கும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்ற தமிழர்கள் எழுதிய சில கட்டுரைகளும் பிபிசி தமிழால் தொகுக்கப்பட்டவற்றுள் அடக்கம்.

உதாரணமாக இணையம் குறித்த பெரு கட்டுரை. அறிவியலும் தொழில்நுட்பமும் இணைந்து பெற்ற குழந்தையான இணையம் இன்று மனித வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் இன்றியமையாதது ஆகிவிட்டது.

உணவு, உடை, உறைவிடம் போல இணையமும் ஓர் அடிப்படைத் தேவை ஆகிவிட்டது என்று சொன்னால் அது மிகையாகாது.

அப்படிப்பட்ட இணையம் மூலம் உங்களுக்குக் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் பணம் ஈட்டும் வழிகள் என்ன என்று ஒரு கட்டுரை விளக்குகிறது.

அதே போல விடை கிடைக்காது என்று கருதப்படும் மறுபிறவி, மரணத்தை வெல்வது போன்ற கேள்விகளுக்கு அறிவியல் கண்ணோட்டத்துடன் விளக்கம் அளிக்கும் கட்டுரைகளும் பிபிசி தமிழால் வெளியிடப்பட்டுள்ளன.

பிபிசி தமிழின் இந்தக் கட்டுரைகள் உங்கள் ஆர்வத்தைத் தூண்டும் அதே வேளையில் உங்கள் அறிவுக்கும் தீனியாக அமையும்.

அறிவியல் கட்டுரைகள் என்றதும் ஏதோ எளிதில் புரியாத சொற்களைப் பயன்படுத்தி எழுதப்பட்டவை என்று நீங்கள் நினைக்க வேண்டாம். ஆழத்தில் சமரசம் செய்துகொள்ளாத எளிமையுடன் படைக்கப்பட்டவை இவை.

இந்தக் கட்டுரைகளின் தொகுப்புகள் உள்ள பக்கத்துக்குச் சென்று அவற்றைப் படித்து மகிழுங்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :