கதிரியக்க நெக்லஸ் 5ஜி தாக்கத்தில் இருந்து காக்கும் என கூறி விற்பனை: தடை செய்த அதிகாரிகள்

பட மூலாதாரம், RIVM
5ஜி இணைய சேவையால் ஏற்படும் கதிரியக்கத்திலிருந்து காக்கும் எனக்கூறி, விற்பனை செய்யப்படும் கழுத்தில் அணியக்கூடிய நெக்லஸ் உள்ளிட்ட பிரத்யேக பொருட்கள் கதிரியக்கத்தன்மை கொண்டவையாக உள்ளன என கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, டச்சு அணு மற்றும் கதிரியக்க பாதுகாப்பு ஆணையம் (ஏஎன்விஎஸ்), தீங்கு விளைவிக்கும் கதிரியக்கத்தை வெளிப்படுத்தும் 10 பொருட்கள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதில், "எனர்ஜி ஆர்மோர்" எனப்படும் ஸ்லீப்பிங் மாஸ்க், கைச்சங்கிலி, கழுத்தில் அணியும் பதக்கம் உள்ளிட்டவையும் அடக்கம். அப்பொருட்களின் முழு பட்டியலை ஏஎன்விஎஸ் தன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
குழந்தைகளுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட மேக்னெட்டிக் வெல்னெஸ் நிறுவன கைச்சங்கிலியும், கதிர்வீச்சு அலைகளை வெளிப்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.
அதனை நீண்ட காலமாக அணிந்திருப்பது ஆபத்துக்களை ஏற்படுத்தும் என்பதால், அவற்றைப் பயன்படுத்த வேண்டாம் என, அவ்வாணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
"அவற்றை இனியும் பயன்படுத்தாதீர்கள். அதனை பாதுகாப்பாக வைத்துவிட்டு, அடுத்த அறிவிப்புக்காக காத்திருங்கள். ஏஎன்விஎஸ்க்கு தெரிந்த நிறுவனங்கள், அதன் விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், அவற்றுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும், அவர்களின் வாடிக்கையாளர்களுக்கு இதுகுறித்துத் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது" என, ஏஎன்விஎஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5ஜி இணையம் உடல்நலத்திற்கு கேடானது என்பதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை.
5ஜி மொபைல் இணைய சேவை பாதுகாப்பானது எனவும், ஏற்கெனவே உள்ள 3ஜி மற்றும் 4ஜி சேவைகளுடன் ஒப்பிடுகையில், இது அடிப்படையில் வித்தியாசமானது அல்ல எனவும், உலக சுகாதார மையம் தெரிவித்திருக்கிறது.
டிஎன்ஏவை பாதிக்காத வகையில், அயனியாக்க கதிர்வீச்சு அலைகளை மொபைல் இணைய சேவைகள் பயன்படுத்துகின்றன.
எனினும், இவை ஆபத்தானவை என பெரும்பாலானோர் நம்புகின்றனர்.
5ஜி இணைய கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்கும் என்ற கோட்பாட்டால், அப்பொருட்களுக்கான சந்தை வளர்ந்தது.
கடந்த மே 2020-ல், 5ஜி கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்கும் என கூறப்பட்ட, 339 பவுண்ட் மதிப்புள்ள யுஎஸ்பி ஸ்டிக்கின் விற்பனையை, பிரிட்டனின் வர்த்தக தரநிர்ணய அமைப்பு நிறுத்த முயன்றது.
கதிர்வீச்சு அலைகளுக்கு எதிரானது என கூறப்படும் "ஸ்டிக்கர்கள்" அமேசானிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
பிற செய்திகள்:
- நெல்லை பள்ளி விபத்து: 'எழுந்து வா விஷ்வா வீட்டுக்குப் போவோம்' - இடுகாட்டில் கதறி அழுத தாய்
- சீனத் தூதுவர் யாழ்ப்பாணம் பயணம்: ''தமிழர் மனங்களில் இடம்பிடிக்க வேண்டும் என்பதே நோக்கம்"
- சிறுபான்மையினர் உரிமை தினம் சுட்டிக்காட்டுவது என்ன?
- 225 கிலோமீட்டருக்கு அப்பால் கிடைத்த கென்டக்கி சூறாவளியால் தொலைந்து போது திருமணப் புகைப்படங்கள்
- கொரோனா இருப்பது தெரியவந்தால் அடுத்து என்ன செய்ய வேண்டும்?
- 1.7 கோடி உயிரினங்களை பலிவாங்கிய பிரேசிலின் காட்டுத்தீ சம்பவங்கள் - மனித குலத்துக்கு எச்சரிக்கை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












