நிலநடுக்கத்தை முன்கூட்டியே கணிக்க உதவும் கணிதம் - புதிய நம்பிக்கை

நிலநடுக்கம்

பட மூலாதாரம், Getty Images

நிலநடுக்கத்தை முன்கூட்டியே கணிப்பதை மேம்படுத்தும் வகையில் எடின்பரோவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய கணித சமன்பாட்டை உருவாக்கியுள்ளனர்.

பிரிட்டன் புவியியல் ஆய்வு அமைப்பு மற்றும் ஹெரியட்-வாட் பல்கலைக்கழகம் ஆகியன இணைந்து இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன.

ஆய்வகங்களில் சோதனை செய்வதைக் காட்டிலும் அவர்கள் கணித்தத்தை பயன்படுத்தி நிலநடுக்கத்தை அறிய முற்பட்டுள்ளனர்.

நிலநடுக்கம் ஏற்படும் புவியோட்டின் மையப்பகுதியில் உள்ள முக்கிய பாறையின் வலுவை கணிப்பதே இந்த ஆய்வின் நோக்கம்.

இவை ஃபிலோசிலிகேட்ஸ் எனப்படும். இது மைக்கா, க்ளோரைட் போன்ற தாதுக்களின் கலவை. இவை தட்டுகள் அல்லது தாள்களாக காணப்படும்.

ஆராய்ச்சியாளர் சபைன், ஹார்டாக் லிவர்பூல் மற்றும் உட்ரேஷெட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களுடன் சேர்ந்து பணிபுரிந்து வருகிறார்.

`நடைமுறையை கண்டறிதல்`

அவை ஒன்றோடொன்று அழுத்தத்தின் காரணமாக நழுவும்போது நிலநடுக்கம் ஏற்படுகிறது.

இதில் முக்கியமான விஷயம் பாறையின் உரசும் வலிமை. அதாவது அதிர்வை உருவாக்கக்கூடிய வலு.

தாதுக்களின் கலவையான பாறையில் ஏற்படக்கூடிய சிறிய அசைவுகளால் நிலநடுக்கம் தொடங்குகிறது.

ஆனால் இந்த சிறிய அசைவுகளால் பெரிய வலுமிகுந்த அதிர்வுகள் ஏற்படுகின்றன.

Banner image reading 'more about coronavirus'
Banner

இந்த பாறைகளின் தன்மை குறித்து ஆய்வகத்தில் சோதிக்கப்படும்.

ஆனால் பூமியின் கீழே ஆழமான பகுதியில் உள்ள தளத்தை ஆராய்வது கடினம்.

இங்குதான் கணித முறையில் கணக்கிடுதல் வருகிறது. ஃபிலோசிலிகேட்ஸின் வலுவை ஆராய்ச்சியாளர்கள் கணிக்கலாம். இதனை ஆய்வகத்தில் கண்டறிய முடியாது.

"என்ன நடந்தது என்பதை ஆராய பூமியோடுகளை பிரிக்கும் செயற்கையான பகுதிகளை மைக்ரோஸ்கோப் அளவுகோல் மூலம் ஆராய்ந்தோம்," என்கிறார் ஹர்டாக்

"அதைப் பொறுத்து, ஃபிலோசிலிகேட்ஸின் உராயும் வலிமை ஈரப்பதம் அல்லது இரு பாறைகளின் நடுவில் உள்ள பகுதி ஆகியவற்றின் வேகத்தை பொறுத்து எவ்வாறு மாறுபடுகிறது என்பதை அறிய நாங்கள் ஒரு சமன்பாடை உருவாக்கினோம்."

இந்த கண்டுபிடிப்பு சாலிட் எர்த் என்னும் சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஆராய்ச்சியாளர்கள் நிலநடுக்கத்தின்போது இரு பாறைகளுக்கு இடையே உள்ள பகுதி எவ்வாறு நகர்கிறது என்பதை கணிக்கமுடியும்.

நிலநடுக்கம் வந்தால் தப்பிப்பது எப்படி?

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: