இந்தியா: ஆப்பிரிக்கர்களை தாக்கியோருக்கு எதிராக கடும் நடவடிக்கை

அண்மை வாரங்களில் இந்தியாவின் தலைநகர் டெல்லியில் வாழும் ஆப்பிரிக்க குடிமக்களை தாக்கியோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்தியா உறுதியளித்துள்ளது.

பட மூலாதாரம், GETTY

இது தொடர்பாக சந்தேகப்படுவோரை கைது செய்ய டெல்லி காவல்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருக்கிறார்.

பட மூலாதாரம், ROSHAN JAISWAL

ஆப்பிரிக்கர்கள் மீது ஆறு தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதில் தாணி (ஆட்டோ ரிக்ஷா) வாடகையை பேரம்பேசிய போது காங்கோ குடியரசை சேர்ந்த ஒருவர் அடித்து கொல்லப்பட்டது மிக மோசமான தாக்குதல் சம்பவமாகும்.

இந்த சம்பவம் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா இடையிலான இராஜதந்திர சிக்கலை தூண்டியுள்ளது.

இறந்துபோன காங்கோ குடியரசை சேர்ந்தவரின் உடலை நாட்டிற்கு அனுப்புவதற்கு போக்குவரத்து வசதியை இந்திய அதிகாரிகள் தற்போது வழங்கியுள்ளனர்.

ஆப்பிரிக்க மாணவர்கள் கூட்டமைப்பு இனவாதத்திற்கு எதிரான பேரணி ஒன்றை திங்கள்கிழமை டெல்லியில் நடத்தவுள்ளது.