உத்தர பிரதேசம்: மதம் மாற்றிய குற்றச்சாட்டில் 'மொட்டை அடித்து ஊர்வலம்'

வட இந்தியாவில் உள்ள கிராமம் ஒன்றில், மூன்று இந்துக்களை கிறிஸ்தவர்களாக மதம் மாற்றியதாக குற்றம்சாட்டி, ஒருவரை கடும்போக்கு இந்துத்துவ வாதக் குழு ஒன்றின் செயற்பாட்டாளர்கள் ஊர்மத்தியில் வைத்து அரைவாசி மொட்டைத் தலையுடன் ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் கூறுகின்றன.

அரைவாசி மொட்டை போட்ட நபர் ஒருவர், கைகள் கட்டப்பட்ட நிலையில், உத்தர பிரதேசத்தின் ஓரை என்ற ஊரின் வீதிகள் வழியாக தலைகுனிந்த நிலையில் கொண்டுசெல்லப்பட்ட வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.

மதம் மாறியவர்களை மாட்டிறைச்சி உண்ணும்படி அவர் வற்புறுத்தியுள்ளதாகவும் அந்த இந்துத்துவ வாத செயற்பாட்டாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

கடும்போக்கு இந்துத்துவ வாத குழுக்களால் தனிப்பட்ட நபர்கள் மீது அண்மைக் காலங்களில் பகிரங்கமாக நடத்தப்பட்டுள்ள தாக்குதல்களின் வரிசையாக இந்த சம்பவமும் நடந்துள்ளது.