காந்தியின் கடைசி உயிலுக்கு £ 55,000 : இரத்தம் விலைபோகவில்லை

மகாத்மா காந்தியின் கடைசி உயில் 55,000 ஸ்டெர்லிங் பவுண்டுகளுக்கு ஏலத்தில் விற்கப்பட்டது.
காந்தியின் இரத்த மாதிரி உட்பட அவரது நினைவுப் பொருட்களாக இருக்கும் சுமார் 50 பொருட்களில் இந்த இரு பக்க ஆவணமும் அடங்குகிறது.
காந்தியால் குஜராத் மொழியில் கையெழுத்திடப்பட்ட அந்த உயிலின் ஆரம்ப விலையாக 30,000 முதல் 40, 000 ஸ்டெர்லிங் பவுண்டுகள் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

அவரது மிதியடி ஒன்று 19,000 பவுண்டுகளுக்கு விற்கப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அது £9,000 அதிகமாகும்.
அவருக்கு 1920களில் செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஒரு குடல்வால் அறுவைச் சிகிச்சையின்போது கிடைத்த ஒரு அவரது இரத்த மாதிரி விற்பனையாகவில்லை என்று அவற்றை ஏலத்தில் விட்ட முல்லொக் ஏல விற்பனையாளர்கள் கூறியுள்ளனர்.
1932இல் காந்தியை பயங்கரவாதியாக அறிவித்த அபூர்வமான பிரிட்டிஷ் நாடாளுமன்ற அறிக்கை ஒன்று £260க்கு விற்பனையானது.








