You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"அ.தி.மு.க.வில் நடைபெறும் உட்கட்சி பிரச்னைகளுக்கு தி.மு.க.தான் காரணம்" - வி.கே சசிகலா
அ.தி.மு.க.வில் நடைபெறும் உட்கட்சி பிரச்னைகளுக்கு தி.மு.க.தான் காரணம் என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.
திருத்தணியில் அரசியல் பயணம் மேற்கொண்டுள்ள வி.கே சசிகலா, செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். அவர் பேசியதிலிருந்து சில முக்கிய தகவல்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
- அ.தி.மு.க.வில் நடைபெறும் உட்கட்சி பிரச்னைகளுக்கு தி.மு.க தான் காரணம் என சசிகலா குற்றம்சாட்டினார்.
- தொண்டர்கள் விருப்பத்தின் பேரில் விரைவாக அடுத்த அரசியல் பயணம் நடைபெறும் என்றார்.
- பொதுச் செயலாளர் பதவி குறித்து பேசிய அவர், "தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் உருவாக்கிய இந்த கட்சி சட்ட விதிகளின்படியும் தொண்டர்கள் விருப்பத்தின் பேரிலும் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்" என்று தெரிவித்தார்.
- அ.தி.மு.க.வில் பிளவு ஏற்படுத்தி பாஜக வளர்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "இல்லை தற்போது இந்த பிரச்னையில் ஆதாயம் தேடுவது திராவிட முன்னேற்ற கழகம்தான்," என்றார்.
- அ.தி.மு.க.வில் இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ்- யாருக்கு உங்கள் ஆதரவு என்ற கேள்விக்கு, பொதுச் செயலாளர் என்ற முறையில் எனது முழு ஆதரவும் கட்சியிலுள்ள தொண்டர்களுக்கு மட்டுமே கட்சிதான் வளரவேண்டும் கட்சி தான் முக்கியம் என்றார்.
- தற்பொழுது நடைபெற்று வரும் தி.மு.க ஆட்சியில் மக்கள் வேதனையை உணர்ந்து உள்ளனர். அ.தி.மு.க ஆட்சி மீண்டும் வரவேண்டும் என்று பொதுமக்கள் நினைக்கின்றனர், இதனை கண்டிப்பாக நிறைவேற்றுவதற்கு அ.தி.மு.க.வி.ல் என் பங்கு உண்டு என்று சசிகலா தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்