பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றிக்கு உதவிய 10 விஷயங்கள்

ஆம் ஆத்மி கட்சி

பட மூலாதாரம், Bhagwant Mann

படக்குறிப்பு, பகவந்த் மான், ஆம் ஆத்மி கட்சி

பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க, அகாலி தளம் போன்ற கட்சிகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைப்பதற்றக்கான பெரும்பான்மையை பெற்றிருக்கிறது.

இதற்கான முக்கிய காரணங்களை, பிபிசி பஞ்சாபி சேவையின் ஆசிரியர் அதுல் சங்கர் பிபிசி தமிழுடன் பகிர்ந்து கொண்டார்.

1)ஆம் ஆத்மி கட்சி, அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் பகவந்த் மான் இணைந்த ஒரு தலைமையை பஞ்சாபில் முன்னிறுத்தியது.

2)மீண்டும் மீண்டும் 'கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு' ஆகியவற்றை உள்ளடக்கிய 'டெல்லி மாடல்' ஆட்சியைப் பற்றி பேசி, அதை பஞ்சாப் வாக்காளர்களிடம் கொண்டு சேர்த்தார் கேஜ்ரிவால்.

3)மற்ற கட்சிகள் ஆம் ஆத்மி கட்சியின் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினாலும், அந்த கட்சியினர் ஆளுகை, வளர்ச்சி ஆகிய தங்கள் கொள்கைகளிலிருந்து சிறிதும் விலகாமல் களத்தை எதிர்கொண்டனர். அவர்களுடைய இந்த 'நேர்மறையான கொள்கை' அவர்களுக்கு உதவியது.

இந்த அனிமேஷனை பார்வையிட ஜாவா ஸ்கிரிப்ட் வசதியுடைய உலாவி (ப்ரெளசர்), நிலையான இன்டர்நெட் சேவை அவசியம்.

4)எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ், பெரும் குழப்பத்தில் இருந்தது. அதன் தலைவர்கள் தங்களுக்குள்ளேயே சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.

5)பஞ்சாப் காங்கிரஸ் தலைவரான சித்து கட்சியை ஒன்றிணைக்கத் தவறிவிட்டார்.

6)அமரிந்தர் சிங்கை முதல்வர் பதவியிலிருந்து விலக வைக்க நவ்ஜோத் சிங் சித்துவை காங்கிரஸ் பயன்படுத்தியது. அதன் பிறகு, சித்து முதல்வராக விரும்பினார். அது நடக்காதபோது, முதல்வரான சரண்ஜித் சிங் சன்னியையும் அவரது கொள்கைகளையும் வெளிப்படையாகத் தாக்கினார். இதுவும் காங்கிரஸ் மீதான மக்களின் நம்பிக்கையை குலைத்தது.

7)பஞ்சாப் அரசியலில் முதன்முறையாக, தலித் தலைவரான சரண்ஜித் சிங் சன்னியை முதல்வர் வேட்பாளர் ஆக காங்கிரஸ் தேர்வு செய்தது. இதனால், ஜாட் சீக்குகள் மற்றும் ஜாதி இந்துக்களின் வாக்கு வங்கியை இழந்தது.

8)ஐந்து வருடங்களாக ஆட்சியில் இல்லாத அகாலி தளத்தினால் நம்பத்தகுந்த தேர்தல் வழிமுறைகளை முன்வைக்க முடியவில்லை. இதனால் வழக்கமாக காங்கிரஸ் அல்லது அகாலி தளத்திற்கு செல்ல வேண்டிய தெற்கு பஞ்சாப் வாக்குகள், ஆம் ஆத்மி கட்சிக்குச் சென்றன.

Facebook பதிவை கடந்து செல்ல

தகவல் இல்லை

மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.

Facebook பதிவின் முடிவு

9)காங்கிரஸ், பா.ஜ.க, அகாலி தளம் போன்ற கட்சிகள் தங்களின் கடந்த கால ஆட்சி என்ற மூட்டையைச் சுமந்து வருகின்றன. அதனால் அவர்களது வாக்குறுதிகளை மக்கள் முழுமையாக நம்பவில்லை.

10)விவசாயிகள் போராட்டம் இந்தத் தேர்தலில் குறிப்பிடத்தக்க பங்காற்றவில்லை எனினும், அது 'உரிமைகள் வேண்டுமெனில் வீதிகளில் போராட்ட வேண்டுமென மக்களுக்கு உணர்த்தியது'. இது சம்பிரதாயமான கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க, அகாலி தளம் போன்றவற்றிலிருந்து தனித்து களம் கண்டுள்ள ஆம் ஆத்மி கட்சியின் மீது மக்களின் கவனத்தை திருப்பியது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: