நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: கோவையை கைப்பற்ற திமுகவுக்கு கைகொடுத்த உத்திகள்

கோவை திமுக வெற்றி
படக்குறிப்பு, நிவேதா சேனாதிபதி
    • எழுதியவர், மோகன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

தமிழகம் முழுவதும் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 21 மாநகராட்சிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. கோவை மாநகராட்சி தேர்தலில் திமுக கூட்டணி 96 இடங்களில் வென்றுள்ளது. இதில் திமுக 73, காங்கிரஸ் 9, சிபிஐ 4, சிபிஐ(எம்) 4, மதிமுக 3, கொமதேக 2, மமக 1 இடங்களில் வென்றுள்ளன.

மேயர் பதவிக்கான தனிப் பெரும்பான்மையை திமுக பெற்றுள்ளது. இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் தொடர்பாக கோவை திமுகவினரிடம் பேசினோம்.

"திமுக கூட்டணிக்கு இத்தகைய வெற்றி கிடைக்கும் என்று நாங்களே எதிர்பார்க்கவில்லை. 70 இடங்கள் வரை வெல்வோம் என்றே நினைத்தோம். ஆனால் திமுக மட்டுமே 73 இடங்களில் வெல்லும் என்பது நாங்களே எதிர்பார்த்திராத வெற்றி," என்கின்றனர் திமுக நிர்வாகிகள்.

கைகொடுத்த வாட்ஸ்ஆப் குழுக்கள்

உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய திமுக இணைய அணியைச் சேர்ந்த தமிழ்மரை, "கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாதது எங்களுக்கு பெரிய ஏமாற்றம் தான். அதே சமயம் அதிமுகவினர் அதிக நம்பிக்கையில் இருந்துவிட்டனர். ஒன்பது சட்டமன்ற உறுப்பினர்களை வைத்திருந்தாலும் களத்தில் அதிமுக எந்த வேலையும் பார்க்கவில்லை. பல்வேறு வார்டுகளில் உள்ளூர் திமுகவினர் தான் மக்களின் அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்றினர். கோவையில் திமுகவினர் தான் மக்கள் பிரதிநிதிகளாக செயல்பட்டோம்," என்றார்.

'ஒன்றிணைவோம் வாருங்கள்' என வாட்சாப் குழுக்களை உருவாக்கி அதில் பொதுமக்களையும் இணைத்தோம். அவர்கள் தெரிவிக்கும் கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்றி தந்தோம். அதனால் தான் உள்ளாட்சித் தேர்தலில் கோவை மக்கள் திமுகவுக்கு ஆதரவு அளித்துள்ளனர். வெறும் ஆளுங்கட்சி என்பதால் மட்டுமே வாக்களித்துவிடவில்லை.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் கிணத்துக்கடவு தொகுதியில் 1,100 வாக்குகள் வித்தியாசத்தில் தான் தோற்றோம். ஆனால் தற்போது பல மாநகராட்சி வார்டுகளிலே பல ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளோம்.

தேர்தல் முடிந்துவிட்டது, வெற்றி பெற்றுவிட்டோம் என்பதால் அந்தக் குழுக்களை எல்லாம் களைத்துவிடப் போவதில்லை. உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இணைந்து தொடர்ந்து செயல்படும்" என்றார்.

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் இயல்பாகவே ஆளுங்கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். அதில் தற்போதைய முடிவுகள் எவ்வாறு வேறுபடுகிறது என்கிற கேள்வியை திமுகவைச் சேர்ந்த கார்த்திகேய சிவசேனாபதியிடம் முன்வைத்தோம்.

"உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியை மக்கள் தேர்வு செய்வார்கள் என்பது உண்மை தான். 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்பு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக 78 இடங்களில் வென்றது," என்று அவர் கூறினார்.

ஆனால் திமுக தற்போது 96 இடங்களில் வென்றுள்ளது. அதிமுகவுக்கு வலுவான இடமாக அறியப்பட்ட கோவையில் கனிசமான இடங்களிலாவது அவர்கள் வென்றிருக்க வேண்டும். ஆனால் 3 இடங்களில் மட்டுமே வென்று எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட இழந்துவிட்டார்கள். திமுகவின் ஆட்சிக்கு மக்கள் அளித்துள்ள மதிப்பெண் சான்று தான் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் என்கிறார் கார்த்திகேய சிவசேனாபதி.

கோவை திமுக வெற்றி

பட மூலாதாரம், Bharani Dharan

தெளிவான பிரசார உத்தி

உங்களுடைய தேர்தல் பிரசாரம் எந்த அளவுக்கு கொடுத்தது? கோவையில் வாக்காளர்களின் நம்பிக்கையை பெற என்ன செய்தீர்கள் என கேடோடம்.

"உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் கோவைக்கு நாங்கள் என்ன செய்து வருகிறோம், என்ன செய்யப்போகிறாராம் என்பதை தெரிவித்து வாக்கு சேகரித்தோம். ஆனால் பத்து ஆண்டுகள் மாநிலத்தில் ஆட்சி, ஐந்து ஆண்டுகள் உள்ளாட்சியை கையில் வைத்திருந்த அதிமுக கோவைக்கு தாங்கள் செய்ததைக் கூறி வாக்கு கேட்காமல் எட்டு மாதம் ஆட்சியில் உள்ள திமுக கோவையை புறக்கணித்துவிட்டதாக கூறி வந்தார்கள் மக்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதிமுக ஆட்சியில் தொடங்கி முடங்கிப் போன திட்டங்களை நிறைவேற்ற திமுக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது"

"சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக மக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு உங்கள் தொகுதியில் முதல்வர் என்கிற துறையின் கீழ் நிறைவேற்றப்பட்டது. அதே போல் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்பு மட்டுமே கடந்த எட்டு மாவட்டங்களில் கோவை முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் 1,40,000க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு அதில் தகுதியான மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டன. இவை பெரும்பாலும் மக்களின் அடிப்படை தேவைகளுக்கானதாக தான் இருந்தன. சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லையென்றாலும் திமுக களத்தில் செயல்பட்டதும் வெற்றிக்கு முக்கியமான ஒரு காரணம்," என்கிறார் கார்த்திகேய சிவசேனாபதி.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

செந்தில் பாலாஜியின் பங்கு

சட்டமன்ற தேர்தல் முடிவுகளைப் போலவே உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளும் தங்களுக்கு சாதகமாக அமைந்துவிடும் என அதிமுகவினர் பகல் கனவு கண்டு வந்தனர். ஆனால் திமுகவினர் அனைத்து வார்டுகளுக்கும் நேரில் சென்றோம். அமைச்சர் செந்தில் பாலாஜி கரூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோதும் கோவையில் தொடர்ந்து தங்கி அரசின் நலத்திட்டங்கள் மட்டுமில்லாது கட்சிப்பணிகளையும் கவனித்து வந்தார். கிட்டத்தட்ட அனைத்து தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்தார். மக்கள் திமுகவுக்கு பெருவாரியான ஆதரவு வழங்க அதுவும் ஒரு காரணம்" என்கிறார் அவர்.

Facebook பதிவை கடந்து செல்ல

தகவல் இல்லை

மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.

Facebook பதிவின் முடிவு

ISOWTY

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: