சென்னையின் இளம் கவுன்சிலர் ஆகும் பிரியதர்ஷினி - "எங்களுக்கு அரசியல் ஆர்வம் அதிகம்"

பிரியதர்ஷினி
    • எழுதியவர், ஆ. விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இளம் வயது வேட்பாளர்கள் அதிகம் வெற்றி பெற்றிருப்பது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

`இந்தமுறை கவுன்சிலர்களாக நிறைய இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. எங்களால் முடிந்த மாற்றத்தைக் கொண்டு வருவோம்' என்கிறார், சென்னையைச் சேர்ந்த 21 வயதில் மாநகராட்சி உறுப்பினர் ஆகும் பிரியதர்ஷினி.

தமிழ்நாட்டில் கடந்த 22ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், பல்வேறு மாநகராட்சிகளில் இளம் வயது வேட்பாளர்கள் கணிசமான எண்ணிக்கையில் வெற்றி பெற்றுள்ளனர்.

குறிப்பாக, கோவை மாநகராட்சியின் 97 ஆவது வார்டில் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளரான 22 வயதான நிவேதா சேனாதிபதி, அ.தி.மு.க வேட்பாளரை விட 7,786 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இதேபோல், சென்னை மாநகராட்சி 136 ஆவது வார்டில் போட்டியிட்ட 22 வயதான நிலவரசி துரைராஜ், 98 ஆவது வார்டில் போட்டிட்ட 21 வயதான பிரியதர்ஷினி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

``சென்னை மாநகராட்சியின் 98 ஆவது வார்டில் சி.பி.எம் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளீர்கள். அதிலும், 5.000 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க வேட்பாளரை தோற்கடித்ததை எப்படிப் பார்க்கிறீர்கள்?'' என பிபிசி தமிழ் சார்பில் பிரியதர்ஷினியிடம் பேசினோம்.

மிகுந்த மகிழ்ச்சியான தருணமாகப் பார்க்கிறேன். இது நாங்கள் எதிர்பார்த்த வெற்றிதான். தி.மு.க தலைமையிலான கூட்டணியில் 98 ஆவது வார்டு வேட்பாளராக அறிவித்தனர். மனுத்தாக்கல் செய்யும்போதே, `வெற்றி பெறுவேன்' என உறுதியாகக் கூறினேன். அதன்பிறகு பிரசாரம் செல்லும்போதும், மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாக இருந்தது. பல இடங்களில் மக்கள் ஆர்வத்துடன் வந்து பேசினர். இதில் எதிர்பார்த்ததைப் போல அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன்''.

அ.தி.மு.க வேட்பாளரைவிட ஐந்தாயிரம் வாக்குகள் அதிகமாக பெற்றுள்ளீர்கள். சி.பி.எம் கட்சியின் வேட்பாளருக்கு இவ்வளவு வாக்குகள் கிடைக்கும் என எதிர்பார்த்தீர்களா?'

நிச்சயமாக. மக்களோடு இருப்பவர்கள் பலரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். இது எங்கள் கட்சிக்கான வெற்றியைவிட மக்களுக்குக் கிடைத்த வெற்றியாகத்தான் பார்க்கிறேன்.

இந்தத் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்படுவோம் என நினைத்தீர்களா?

இல்லை. இது ஒரு சர்ப்ரைஸ்தான். இந்த வாய்ப்பை நான் எதிர்பார்க்கவில்லை. `நீங்கள்தான் வேட்பாளர்' எனக் கட்சியில் இருந்து கூறும்போது, மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டேன். இது ஒரு நல்ல வாய்ப்பு. ஏற்கெனவே களப்பணி செய்து கொண்டிருந்ததால் இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைத்தேன்.

உங்களின் தந்தை ஆட்டோ ஓட்டுநராக இருக்கிறார். உங்கள் தாயார் ஜனநாயக மாதர் சங்கத்தில் மாவட்டத் தலைவியாக இருக்கிறார். அரசியல் பின்னணி உள்ள குடும்பமாக இருந்ததும் போட்டியிடுவதற்குக் காரணமாக இருந்ததா?

ஆமாம். உண்மையில் இவை அனைத்துமே காரணம்தான். சிறு வயதில் இருந்தே கட்சியில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளேன். அதுவே அரசியலில் ஈடுபடுவதற்குக் காரணமாக இருந்தது. படிக்கும்போது இந்திய மாணவர் சங்கம், ஜனநாயக வாலிபர் சங்கம் போன்றவற்றில் இருந்தேன். என்னுடைய பகுதியில் கள வேலைகளைச் செய்து வந்தேன். மாமன்ற உறுப்பினர் பதவி கிடைத்தால் இந்தப் பகுதியில் மக்கள் நலப் பணிகளை சிறப்பாக மேற்கொள்வேன் என்ற அடிப்படையில் எனக்கு இந்த வாய்ப்பைக் கட்சி கொடுத்தது. என் மீது வைத்துள்ள நம்பிக்கையை நூறு சதவீதம் காப்பாற்றுவேன்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரையில் நீண்டகாலம் பணியாற்றியவர்களுக்குத்தான் சீட் கொடுப்பார்கள். இந்தத் தேர்தலில் பரவலாகவே இளம் வேட்பாளர்கள் களத்தில் நின்றனர். இதை எப்படி பார்க்கிறீர்கள்?

தற்போதுள்ள இளைஞர்கள் பலரும், `மாற்றம் வர வேண்டும் என விரும்புகின்றனர். ஆனால், இதனை மற்றவர்களைப் பார்த்துக் கூறுகின்றனர். அவர்கள் யாரும் இறங்கி வேலை பார்ப்பதில்லை. இந்தமுறை நிறைய இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. எங்களால் முடிந்த மாற்றத்தைக் கொண்டு வருவோம்.

நீங்கள் 2k கிட்ஸ் ஆக பார்க்கப்படுகிறீர்கள். புத்தாயிரத்தில் பிறந்த பலரும் சமூக வலைதளங்களில்தான் லயித்திருப்பார்கள். அரசியல் ஆர்வம் பெரிதாக இருக்காது என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறதே?

2k கிட்ஸ் எல்லாம் அரசியல் பார்வை இல்லாதவர்கள் என்பதில் உண்மையில்லை. இன்றைக்கு நடப்பதை முழுமையாக பார்ப்பது 2k கிட்ஸ்தான். அனைத்து விஷயங்களும் அறிந்தவர்களாக உள்ளனர். அவர்கள் தேர்தலில் நின்று கவுன்சிலராக இருந்து செயல்பட்டால் நன்றாக இருக்கும்.

தற்போது எம்.ஏ சமூகவியல் படித்து வருகிறீர்கள். மாநகராட்சி மாமன்ற உறுப்பினராக நுழைந்தாலும் படிப்பில் கவனம் செலுத்துவீர்களா?

படிப்புக்கு எந்தக் கட்டுப்பாடும் இருக்கப் போவதில்லை. அது ஒருபுறம் இருக்கும். என்னுடைய பணிகள் மறுபுறம் நடந்து கொண்டிருக்கும். இரண்டையும் சரிசமமாக மேற்கொள்வேன்.

தேர்தல் பிரசாரத்தில் சவாலாக இருந்தது எது?

எனக்கு சவாலாக எதுவும் இல்லை. அனைத்து இடத்திலும் வரவேற்பு இருந்தது. யாரை எதிர்க்கிறீர்கள் எனக் கேட்டபோது, `நான் யாரையும் எதிர்ப்பதற்காக வரவில்லை. அனைவரும் மக்களுக்கு நல்லது செய்வதற்காகத்தான் போட்டியிடுகின்றனர். இதில் யார் வெற்றி பெறுகிறார்களோ, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்' என்றேன். மக்களுக்கு நிறைய திட்டங்களைக் கொண்டுபோய் சேர்க்க வேண்டும். மக்களுக்காகத்தான் கம்யூனிஸ்ட் கட்சியினர் செயல்படுகிறார்கள் என்பது மக்களுக்கும் தெரிகிறது. அதனால்தான் இவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெல்ல முடிந்தது.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

98ஆவது வார்டு என்பது அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்கள் அதிகம் வசிக்கக் கூடிய பகுதியாக உள்ளது. இந்தப் பகுதியை மேம்படுத்துவதற்கு எதிர்காலத் திட்டங்கள் எதேனும் உள்ளதா?

இங்கு பலதரப்பட்ட மக்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு குடிநீர் சரிவர கிடைப்பதில்லை. பத்து வருடங்களாக கேட்டு ஓய்ந்துவிட்டார்கள். மழை வந்தால் தண்ணீர் தேங்கிவிடுகிறது. கால்வாய் பிரச்னை உள்ளது. தண்ணீர் பிரச்னையை சரிசெய்தால் போதும் என்பது மக்களின் வேண்டுகோளாக இருக்கிறது. ஓர் இடத்தில் மட்டும் அல்ல, அனைத்து இடங்களிலும் குடிநீர், கழிவுநீர் பிரச்னை உள்ளது. மருத்துவம், பூங்காக்கள் சரிசெய்வது எனப் பலவற்றை சரிசெய்ய வேண்டிய சூழல் உள்ளது.

Facebook பதிவை கடந்து செல்ல

தகவல் இல்லை

மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.

Facebook பதிவின் முடிவு

உங்களின் குடும்பமும் எளிய சூழலில்தான் உள்ளது. படித்து முடித்துவிட்டு வேலைக்குச் செல்ல வேண்டிய நிலையில் மாமன்ற உறுப்பினராக பதவியேற்கப் போகிறீர்கள். அதில் கிடைக்கும் ஊதியம் என்னவோ குறைவுதானே?

மக்களுக்கு சேவை செய்வதைக் கடமையாக நினைத்து வந்துவிட்டேன். வேலைக்குப் போய் கிடைக்கும் வருமானத்தைவிட மக்களுக்கு சேவை செய்வதில் கிடைக்கும் மகிழ்ச்சி பெரிது.

உள்ளாட்சி அமைப்புகளில் ஒரு பெண் வெற்றி பெற்றாலும் ஆண் இயக்குவதாக தகவல்கள் உள்ளன. சென்னை மாநகராட்சியில் எந்தளவுக்கு சாதிக்க முடியும் என நினைக்கிறீர்கள்?'

என்னுடைய பணிகளை போகப் போக பார்க்கத்தான் போகிறீர்கள். என் பெற்றோர் கொடுத்த ஊக்கம்தான் தேர்தலில் போட்டியிடக் காரணம். உன்னால் முடியும் என அவர்கள் ஆதரவளித்தனர். அதனால்தான் தைரியமாக நின்று வெற்றி பெற்றேன்.

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: