பாரத ஸ்டேட் வங்கி '3 மாதத்துக்கு மேல் கர்ப்பிணிப் பெண்கள் பணி செய்யத் தகுதியற்றவர்கள்' என்ற விதிமுறையை திரும்பப்பெற்றது

பட மூலாதாரம், Getty Images
மூன்று மாதங்களுக்கும் மேலாக கர்ப்பிணியாக இருக்கும் பெண்களை, பணிக்குத் தகுதியற்றவர்கள் என்று கூறி பணியில் சேரவிடாமல் தடுக்கும் வழிகாட்டுதல்களை பாரத ஸ்டேட் வங்கி திரும்பப் பெற்றுக்கொண்டது.
பாரத ஸ்டேட் வங்கி டிசம்பர் 31-ஆம் தேதியன்று வெளியிட்ட சுற்றறிக்கை ஒன்றில், மூன்று மாதங்களுக்கு மேல் கர்ப்பமாக இருக்கும் பெண்களை பணியில் சேர கட்டுப்பாடு விதித்திருந்தது.
இத்தகைய வழிகாட்டுதல்களை வெளியிட்டமைக்காக, டெல்லி மகளிர் ஆணையம் பாரத ஸ்டேட் வங்கி மூன்று மாதத்திற்கும் மேலாக கர்ப்பிணியாக இருக்கும் பெண்களை, "தற்காலிகமாக தகுதியற்றவர்கள்," என்று அழைத்தது குறித்து மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால் ட்வீட் செய்திருந்தார்.
அதில், "வங்கியின் நடவடிக்கை பாரபட்சமானது, சட்டவிரோதமானது. ஏனெனில் சட்டப்படி வழங்கப்படும் மகப்பேறு சலுகைகளை இது பாதிக்கும். இதைத் திரும்பப் பெறுமாறு அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்," என்று அவர் கூறியிருந்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
அந்த சுற்றறிக்கையில், "அவர் தற்காலிகமாக தகுதியற்றவராகக் கருதப்படுவார். குழந்தை பிறந்த நான்கு மாதங்களு பின் அவர் பணியில் சேர அனுமதிக்கப்படலாம்," என்று அந்தச் சுற்றறிக்கை கூறுவதாக டெல்லி மகளிர் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், "இது மிகவும் தீவிரமான ஒன்று. இந்த நடவடிக்கை சமூகப் பாதுகாப்புச் சட்டம் 2020-ன் கீழ் வழங்கப்பட்ட மகப்பேறு சலுகைகளுக்கு முரணாக இருப்பதால், வங்கி பாரபட்சமாகவும் சட்டவிரோதமாகவும் இருப்பதாகத் தோன்றுகிறது," என்றும் டெல்லி மகளிர் ஆணையத்தின் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவற்றோடு, இந்த வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டதன் பின்னணி மற்றும் அவற்றை அங்கீகரித்த அதிகாரிகளின் பெயர்களை வழங்குமாறும் பாரத ஸ்டேட் வங்கியிடம் டெல்லி மகளிர் ஆணையம் கேட்டுக்கொண்டது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
இதைத் தொடர்ந்து, கர்ப்பிணிப் பெண்களுக்கான இந்த வழிகாட்டுதல்களை திரும்பப் பெற்றுவிட்டதாக பாரத் ஸ்டேட் வங்கி இன்று மாலை அறிவித்துள்ளது.
அதில், "கர்ப்பிணிப் பெண்களுக்கான ஆள் சேர்ப்பு பற்றிய திருத்தப்பட்ட வழிமுறைகள் திரும்பப் பெற்றுக்கொள்ளப்படுகின்றன," என்று தெரிவித்துள்ளது.
பொது உணர்வுகளைக் கருத்தில் கொண்டு, கர்ப்பிணி பெண்களை வேலைக்கு எடுப்பது தொடர்பான திருத்தப்பட்ட விதிமுறைகளை நிறுத்தி வைக்கவும், ஏற்கனவே அமலில் இருந்த விதிகளைத் தொடரவும் தாங்கள் முடிவு செய்துள்ளதாக எஸ்.பி.ஐ தெரிவித்துள்ளது.
கொரோனா காரணமாக கர்ப்பமாக இருக்கும் பெண் ஊழியர்கள் வங்கிக்கு வராமல் வீட்டில் இருந்தே பணி செய்ய அனுமதிக்கப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கள் பெண் ஊழியர்களின் நலம் மற்றும் மேம்பாட்டுக்காக எஸ்.பி.ஐ எப்போதுமே தீவிரம் காட்டி வருவதாகவும், தங்கள் ஊழியர்களில் 25% பேர் பெண்கள் என்றும் அந்த வங்கி தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்:
- பதற்றத்தை உருவாக்காதீர்கள்: மேற்கு நாடுகளை கேட்கும் யுக்ரேன் அதிபர்
- அவதூறுகள் மூலம் பாலிவுட் மீது வெறுப்பை கக்கும் யூ-டியூபர்கள்: பிபிசி ஆய்வு செய்தி
- பறக்கும் கணினியான F35C போர் விமானத்தை மீட்க அமெரிக்கா, சீனா மல்லுக்கட்டுவது ஏன்?
- கனடா எல்லையில் குஜராத்திகள் இறந்தது எப்படி? போலீஸ் வெளியிட்ட முக்கிய தகவல்
- கடல் சுமந்த சிறுமியின் கடிதம்: 8 வயதில் மிதக்க விட்டு 25இல் கண்டுபிடித்த அதிசயம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












