இந்தியா - சீனா எல்லை: கல்வானில் இந்திய கொடி குறித்து நரேந்திர மோதி அமைச்சர்கள் பெருமிதம், கேள்வி எழுப்பும் ராகுல் காந்தி

பட மூலாதாரம், Ani
இந்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் செவ்வாய்கிழமை (ஜனவரி 4), 'இந்தியாவின் கொடி கல்வானில் உள்ளது' என்று குறிப்பிட்டு அதில் வீரர்கள் கல்வானில் இந்திய கொடியை காண்பிக்கும் இரு படங்களை பகிர்ந்திருந்தார்.
இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி. முரளீதரனும் அந்த படங்களை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, புத்தாண்டையொட்டி, கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவ வீரர்கள்," என்று கூறியிருந்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
இந்த விவகாரத்தில் ராகுல் பதிவிட்ட இடுகை தொடர்பாக கருத்து வெளியிட்ட தர்மேந்திர பிரதான், "ராகுல் காந்தி எந்த நிர்ப்பந்தத்தின் பேரில் சீன பிரசாரத்தை ஆதரிக்கிறார்" என்று கேள்வி எழுப்பினார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
பாஜக தலைவர்கள் பலரும் இந்திய அமைச்சர்களைப் பின்தொடர்ந்து கல்வானில் இந்திய வீரர்கள் மூவர்ண கொடியுடன் இருக்கும் படங்களை பகிர்ந்திருந்தனர்.

பட மூலாதாரம், Getty Images
ராகுலின் கேள்வி என்ன?
ஆனால், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, "கல்வானில் நமது கொடி பார்க்க நன்றாக உள்ளது. சீனா தான் பதில் கூற வேண்டும். மோதி மெளனம் கலைய வேண்டும்," என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான மோதல் சம்பவங்கள் இரு நாடுகளிலும் ஊடகங்களில் தலைப்புச்செய்திகளில் இடம்பிடித்து எல்லை பதற்றத்தை கண் முன்னே கொண்டு வந்தன.
இந்திய எல்லைக்குள் சீனா நுழைவது தொடர்பாக கல்வான் சம்பவத்தை மேற்கோள்காட்டி இந்திய எதிர் கட்சிகள் மோதி அரசை நோக்கி பல்வேறு காலகட்டங்களில் கேள்விகளை எழுப்பி வந்தன.
இந்த நிலையில், ராகுல் காந்தி செவ்வாய்கிழமை பதிவிட்ட ஒரு ட்வீட்டில், பிரதமரின் 'மௌனம்' குறித்து கேள்வி எழுப்பினார். மேலும் தனது ட்வீட்டுடன் செய்தியொன்றின் பகுதியையும் அவர் வெளியிட்டார்.
அந்த செய்தியில், மெய்யான எல்லை கோடு (எல்ஏசி) அருகே பாங்கோங் ஏரியில் சீனா பாலம் கட்டியதாக கூறப்படும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியும் இந்திய அரசிடம் செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பியுள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 4

பட மூலாதாரம், Twitter/@SHEN_SHIWEI
சீன நாளிதழில் என்ன இருந்தது?
ஜனவரி 3ஆம் தேதி மற்ற காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் பிற அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்கள் தேசிய மூவர்ண கொடியை ஏற்றியது குறித்து மத்தியில் ஆளும் நரேந்திர மோதி அரசாங்கத்திடம் சில கேள்விகளை கேட்டனர்.
உண்மையில், ஜனவரி 1ஆம் தேதி, சீன நாளிதழான அரசு ஆதரவு குளோபல் டைம்ஸில் ஒரு செய்தி வெளிவந்தது.
அதில், புத்தாண்டையொட்டி கல்வான் பள்ளத்தாக்கில் சீன கொடி ஏற்றப்பட்டதாக கூறப்பட்டிருந்தது.
2022ஆம் ஆண்டின் முதல் நாளில், சீனாவின் ஐந்து நட்சத்திர சிவப்புக் கொடி நாடு முழுவதும் ஏற்றப்பட்டதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதில் 'ஹாங்காங் சிறப்பு நிர்வாக பகுதி மற்றும் கல்வான் பள்ளத்தாக்கு' ஆகிய இடங்களில் ஏற்றப்பட்ட கொடி பற்றிய தகவலும் அடங்கும்.
இந்த குளோபல் டைம்ஸ் நாளிதழ், சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊதுகுழலாகக் கருதப்படுகிறது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 5
இதைத் தொடர்ந்தே, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிற கட்சித் தலைவர்கள் நரேந்திர மோதி அரசிடம் கல்வான் எல்லை தொடர்பாக கேள்விகளை எழுப்பியிருந்தனர்.
காங்கிரஸ் தலைவர் ரந்தீப் சிங் சூர்ஜேவாலா, "கல்வான் பள்ளத்தாக்கில் சீன கொடியை அசைத்து பறக்கச் செய்வோம் என்ற சீனாவின் அடாவடித்தனத்துக்கு பதில் தெரிவிக்காமல் பிரதமர் மோதி மற்றும் அவரது அரசு அமைதியாக இருக்கிறது. இதற்கு பதில் கூறாமல் இந்திய பாதுகாப்பு அமைச்சர் எங்கே போனார்? பிரதமர் எங்கே? நாடு தெரிந்துகொள்ள விரும்புகிறது," என்று கூறியிருந்தார்.

பட மூலாதாரம், Ani
'சீனாவுக்கு ஏன் திரைச்சீலை?'
இது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பினர். ராஷ்ட்ரிய ஜனதா தளம் எம்.பி மனோஜ் ஜா, "சீனா குறித்து பல விஷயங்களை மோதி அரசு வெளியில் கூறாமல் மறைத்து வருகிறது," என்று கூறினார்.
"சீனாவுக்கு எதிரான இந்தியாவின் கொள்கை தளர்ந்து வருகிறது. 1962ஆம் ஆண்டு போரின் மத்தியிலும் கூட எல்லை பதற்றம் பற்றி நாடாளுமன்றத்தில் வெளிப்படையாக விவாதித்தது நமது நாடு. இதை சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. அருணாச்சலத்தில் பல பகுதிகள் உள்ளன. இங்கே பல இடங்களுக்கு நாம் வரலாற்றுபூர்வமாக இருந்த பெயர்களை மாற்றி வருகிறோம். பைசாபாதை அயோத்தி ஆக்கினோம். முகல்சராய் ரயில் நிலையத்தை தீன்தயாள் உபாத்யாய் ரயில் நிலையம் ஆக்கினோம். சாலைகளின் பெயர்களை கூட மாற்றி வருகிறோம். ஆனால், அங்கே எல்லையில் நம்முன் உள்ள சவாலை பாருங்கள், நமது அங்கமான அருணாசல பிரதேசத்தின் சில பகுதிகளுக்கு சீனா அலுவல்பூர்வமாக பெயர்களை சூட்டி வருகிறது," என்றார் மனோஜ் ஜா.
குளோபல் டைம்ஸ் நாளிதழில் டிசம்பரில் வெளியான ஒரு தகவலின்படி, சீன சிவில் விவகார அமைச்சகம் ஜாங்னானில் (அருணாச்சல பிரதேசத்தின் சீனப் பெயர்) 15 இடங்களின் பெயர்களை சீன மொழி, திபெத்திய மொழி மற்றும் ரோமன் மொழிகளில் வெளியிட்டுள்ளது.
இதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், அருணாச்சல பிரதேசம் எப்போதுமே இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும். அது தொடரும் என்று கூறியது.
இது தொடர்பான செய்திகளுக்கு பதிலளித்துள்ள வெளிவிவகார அமைச்சகம், சீனா கடந்த காலங்களிலும் இவ்வாறு செய்துள்ளதாகவும், ஆனால் அது உண்மைகளை மாற்றாது எனவும் தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Ani
பாஜக தலைவர் என்ன சொன்னார்?
கல்வான் பள்ளத்தாக்கில் கொடியை ஏற்றுவது குறித்து குளோபல் டைம்ஸ் சமீபத்தில் செய்தி வெளியிட்ட பிறகு, இந்திய ராணுவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி 'சீனா தனது அதிகார எல்லைக்குள் கொடியை ஏற்றியது' என்று சில இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. அதே நேரத்தில், செவ்வாயன்று நரேந்திர மோதி அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்கள் மூவர்ண கொடியை அசைக்கும் படங்களை வெளியிட்ட செயலை, சில பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் தங்களுக்கு சாதகமான நடவடிக்கை போல பெருமிதம் கொள்ள முற்பட்டனர். பாஜக தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா, இந்திய ராணுவ வீரர்களின் படத்தை ட்விட்டரில் பதிவிட்டு, நடிகர் அமிதாப் பச்சனின் 'மெயின் ஆசாத் ஹூன்' படத்தின் பாடலின் இரண்டு வரிகளை குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 6
"எத்தனை தலைகள் எத்தனை தலைகள் எண்ணுங்கள், நம் உயிரோடு விளையாடினால் எதிரிகள் ஒவ்வொரு ஆட்டத்திலும் தோற்பார்கள். நமது மூவர்ண கொடி கல்வான் பள்ளத்தாக்கில் மட்டுமல்ல, முழு நாட்டிலும் பெருமையுடன் அசைகிறது," என்று அவர் கூறியிருந்தார்.
மறுபுறம், பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை விமர்சித்து இடுகையை பகிர்ந்திருந்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 7
"கல்வானில் நமது மூவர்ண கொடி உள்ளது, ஆனால், அது ராகுலை காயப்படுத்துகிறது. ராகுல் மற்று சகாக்கள் பதற வேண்டாம்! மோடி ஜி தலைமையில், இந்திய ராணுவத்தின் துணிச்சலான வீரர்களால் மூவர்ண கொடிகள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் பெருமையுடன் ஏற்றப்படுகின்றன," என்று சம்பித் பத்ரா கூறியிருந்தார்.

பட மூலாதாரம், Ani
காங்கிரஸ் கேள்விக்கு விடை இல்லை
அதே நேரத்தில், லடாக்கில் உள்ள பங்கோங் த்சோ ஏரியில் சீனா பாலம் கட்டியதாக கூறப்படும் விவகாரத்தை ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும் எழுப்பியபோதும் அதற்கு அரசோ பாரதிய ஜனதா கட்சி தரப்போ பதில் அளிக்கவில்லை.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 8
காங்கிரஸ் கட்சி அதன் அலுவல்பூர்வ ட்விட்டரில், "பங்கோங் த்சோ ஏரி உட்பட அக்சாய் சின் முழுவதிலும் சாலைகள் மற்றும் பாலங்களை சீனா கட்டியெழுப்பி வருவதாக செயற்கைக்கோள் படங்கள் வெளிப்படுத்தியுள்ளன. சீனா கட்டியுள்ள பாலம் பாங்காங் ஏரியின் இருபுறமும் இணைக்கிறது. சீன வீரர்கள் மற்றும் தளவாடங்கள் அங்கு செல்வதற்கு பல வழிகள் திறக்கப்படும். இப்போதும் மோதி அரசு ஏன் இப்படி எதுவும் செய்யாமல் இருக்கிறது?" என்று கேள்வி எழுப்பியது.
சீனாவுக்கு பதிலடி கொடுக்க ராணுவத்துக்கு சுதந்திரம் அளிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் மிலிந்த் தியோரா வலியுறுத்தினார்.
சீனாவின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பிய அவர், "நமது (இந்திய) ஜவான்கள் 140 கோடி இந்தியர்களின் முழு நம்பிக்கையை பெற்றுள்ளனர். சீனாவின் ஆக்கிரமிப்புக்கு பதிலடி கொடுக்க இந்திய வீரர்களுக்கு தடையற்ற அதிகாரம் வழங்கப்பட வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 9
அதே ட்வீட்டில், தியோரா சீனாவின் கூற்று குறித்து கேள்வி எழுப்பினார்,
"சீனாவின் நம்பகத்தன்மை சர்வதேச மட்டத்தில் கீழே உள்ளது. காரணம், கோவிட் -19 தொடங்கிய பிரச்னையில் உண்மையை வெளிப்படுத்தாமல் அந்த நாடு இப்போதும் மறுத்து வருகிறது," என்று மிலிந்த் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், TAUSEEF MUSTAFA/GETTYIMAGES
இந்தியா-சீனா பதற்றம்
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லையில் 2020ஆம் ஆண்டில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
2020ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி, கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் த்சோ ஏரியின் வடக்குக் கரையில் இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பையும் சேர்ந்த டஜன் கணக்கான வீரர்கள் காயமடைந்தனர்.
இதையடுத்து, ஜூன் 15ஆம் தேதி, கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பிலும் ஏராளமான ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, இரு நாட்டுப் பிரதிநிதிகளுக்கும் இடையே பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்தன.
எல்லாவற்றிற்கும் மேலாக, இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தில் எட்டப்பட்ட ஒப்பந்தத்திற்குப் பிறகு 2021ஆம் ஆண்டு பிப்ரவரியில் இரு தரப்பும் பரஸ்பரம் படைகளை சர்ச்சைக்குரிய பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து விலக்கிக் கொண்டு அவரவர் இருந்த முந்தைய நிலைக்கே திரும்ப ஒப்புக் கொண்டு பின்வாங்கினர். இந்த விவகாரத்தில் இந்தியா, சீனா இடையே இதுவரை 13 சுற்று ராணுவப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் பெரிய முடிவுகள் எதுவும் வெளியாகவில்லை.
லடாக்கின் கிழக்குப் பகுதியில் உள்ள அக்சாய் சின் ஏற்கெனவே சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. லடாக் தொடர்பான இந்திய அரசின் ஆக்கிரமிப்புக் கொள்கையே தற்போதைய சூழ்நிலைக்குக் காரணம் என்று சீனா தொடர்ந்து கூறி வருகிறது.
அதே நேரத்தில் எல்ஏசி மீது ஒருதலைபட்ச நடவடிக்கை எடுத்து சீனா தற்போதைய நிலையை மாற்றிவிட்டதாக இந்தியா கூறுகிறது. ஆண்டுகள் பல கடந்தாலும் இந்த விவகாரத்தில் பதற்றம் மட்டும் ஓய்ந்ததாகத் தெரியவில்லை.
பிற செய்திகள்:
- டாஸ்மாக் பார் டெண்டர் சர்ச்சையில் செந்தில்பாலாஜி: ``எனக்கு எதிராக தி.மு.கவினரே போராட்டமா?''
- குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி: கியூபாவில் 2 வயது முதல் தொடங்கிய திட்டம் - மற்ற நாடுகளில் என்ன நிலவரம்?
- வங்கதேசம் மீதான அமெரிக்காவின் கோபம் தொடர்ந்து அதிகரிக்க என்ன காரணம்?
- டெஸ்லா ஆட்டோ பைலட் குழு தலைவராக தமிழ்நாட்டின் அசோக் எல்லுசுவாமி - யார் இவர்?
- ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பூமியிலிருந்து 15 லட்சம் கி.மீ தொலைவில் என்ன செய்கிறது?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்