அசோக் எல்லுசுவாமி - ஈலோன் மஸ்க்கின் டெஸ்லா ஆட்டோ பைலட் குழு தலைவராக தமிழர் - யார் இவர்?

அசோக் எல்லுசுவாமி

பட மூலாதாரம், Ashok Elluswamy/Linkedin

படக்குறிப்பு, அசோக் எல்லுசுவாமி: கோப்புப்படம்

உலக பெரும்பணக்காரர்களில் ஒருவரான ஈலோன் மஸ்க்குக்கு சொந்தமான, மின்சார வாகனங்களை தயாரிக்கும் டெஸ்லா நிறுவனத்தின் ஆட்டோ பைலட் குழுவின் தலைவராக தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்ட அசோக் எல்லுசுவாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

கார் அதன் பாதையில் ஒட்டிச் செல்வது, வேகமெடுப்பது, நிறுத்துவது ஆகியவற்றை அதுவாகவே செய்யும் தானியங்கித் தொழில்நுட்பம் 'ஆட்டோபைலட்' என்று அழைக்கப்படுகிறது.

ஆட்டோபைலட் தொழில்நுட்பம் குறித்து ஆராயும் ஆட்டோ பைலட் குழுவில் நியமிக்கப்பட்டுள்ள முதல் ஊழியர் இவர் ஆவார்.

ஈலோன் மஸ்க்

பட மூலாதாரம், POOL

படக்குறிப்பு, ஈலோன் மஸ்க்: கோப்புப்படம்

சமூக ஊடகங்கள் வாயிலாக பணியாளர்களை நியமனம் செய்துவரும் டெஸ்லா நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஈலோன் மஸ்க் இதனை அறிவித்துள்ளார்.

ட்விட்டரில் தன்னுடைய காணொலி பேட்டி ஒன்றுக்கு பதில் அளித்திருந்த ஈலோன் மஸ்க், "டெஸ்லா நிறுவனம் ஆட்டோ பைலட் குழுவை தொடங்குவதாக நான் ட்வீட் செய்திருந்தேன். அந்த ட்வீட் மூலம் முதன்முதலில் ஆட்டோ பைலட் குழுவில் தேர்வு செய்யப்பட்டது அசோக்தான்" என தெரிவித்தார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

இந்த செய்தி வெளியானதிலிருந்து, பலரும் அசோக் எல்லுசுவாமி குறித்து இணையத்தில் தேடி வருகின்றனர். அசோக் எல்லுசுவாமியின் பின்னணி என்ன?

  • விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த, எல்லுசுவாமி என்பவரின் மகன் அசோக். இவரது தந்தை எல்லுசுவாமி, மெட்ராஸ் உர நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஆவார்.
  • சென்னை, கிண்டி பொறியியல் கல்லூரியில் மின்னணு மற்றும் தொடர்பியல் பிரிவில் 2009-ம் ஆண்டு பொறியியல் பட்டம் பெற்றார்.
  • பின்னர், அமெரிக்காவில் கார்னேஜி மெல்லோன் பல்கலைக்கழகத்தில் ரோபோட்டிக் சிஸ்டம் டெவலப்மெண்ட் பிரிவில் எம்.எஸ். பட்டம் பெற்றார்.
  • டெஸ்லா நிறுவனத்தில் சேருவதற்கு முன்னர், ஃபோக்ஸ்வாகன் எலெக்ட்ரானிக் ஆய்வுக்கூடம் மற்றும் வாப்கோ (WABCO) வாகன கட்டுப்பாட்டு அமைப்பு நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார்.
  • பின்னர், 2014 முதல் தற்போது வரை 8 ஆண்டுகளுக்கும் மேலாக டெஸ்லா நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அந்நிறுவனத்தின் ஆட்டோபைலட் பிரிவில், 2014-ல் மென் பொறியாளராக பணியைத் தொடங்கிய அவர், 2016-ல் மூத்த மென் பொறியாளர்,.
  • 2017-ல் சீனியர் ஸ்டாப் (staff) மென்பொறியாளர், 2019-ல் ஆட்டோபைலட் சாப்ட்வேர் குழுவின் இயக்குநர் என பல்வேறு பொறுப்புகளை வகித்து, படிப்படியாக உயர்ந்து தற்போது, அந்நிறுவனத்தின் ஆட்டோ பைலட் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, டெஸ்லா ஆட்டோ பைலட் குழுவுக்கு ஆட்களை தேர்வு செய்யவிருப்பதாக ஈலோன் மஸ்க் தெரிவித்திருந்தார். இத்துறையில் ஆர்வமும் திறமையும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அவர் தெரிவித்திருந்த நிலையில், அக்குழுவுக்கு நியமிக்கப்படும் முதல் நபர் அசோக் எல்லுசுவாமி ஆவார்.

காணொளிக் குறிப்பு, ஈலோன் மஸ்க்கின் டெஸ்லா ஆட்டோ பைலட் குழு தலைவராக தமிழர் - யார் இவர்?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: