மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக நரேந்திர மோதி அறிவிப்பு

நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நரேந்திர மோதி

இந்திய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களும் திரும்பப் பெறப்படுவதாக பிரதமர் நரேந்திர மோதி அறிவிப்பு.

இந்த சட்டத்தைத் திரும்பப்பெறவேண்டும் என்று கோரிதான் டெல்லியில் விவசாயிகள் ஓராண்டுக்கும் மேலாக போராடிவருகின்றனர்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

இம்மாதம் தொடங்கப்பட உள்ள நாடாளுமன்றக் கூட்டத்தில், மூன்று வேளாண் சட்ட மசோதாக்களையும் ரத்து செய்ய நாங்கள் தீர்மானித்திருக்கிறோம்.

விவசாயிகள் வீடு திரும்புமாறு நான் கேட்டுக் கொள்கிறேன். நாம் மீண்டும் புதிதாகத் தொடங்குவோம் என இந்திய பிரதமர் நரேந்திர மோதி கூறியதாக ஏ என் ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

நான் என்ன செய்தேனோ அது விவசாயிகளுக்காகத் தான் செய்தேன். நான் செய்வது நாட்டுக்காகத் தான். உங்கள் ஆசிகளில், நான் என் கடின உஅழைப்பில் எதையும் விடவில்லை.

உங்கள் கனவு மற்றும் தேசத்தின் கனவை நனவாக்க, நான் இன்னும் கடினமாக உழைப்பேன் என உறுதி கூறுகிறேன் என நரேந்திர மோதி கூறியதாக ஏ.என்.ஐ முகமையில் கூறப்பட்டுள்ளது.

என்ன பேசினார் மோதி?

கடந்த ஐந்து தசாப்த கால வாழ்க்கையில் விவசாயிகளின் சவால்களை மிக நெருக்கமாக நாம் பார்த்தோம், 2014ல் பிரதம ஊழியனாக பணியாற்றுவதற்கான வாய்ப்பை நாடு எனக்கு வழங்கியபோது, ​​​​விவசாய மேம்பாடு, விவசாயிகள் நலன் ஆகியவற்றுக்கு நாங்கள் முதன்மையான முன்னுரிமை அளித்தோம்.

நாட்டின் சிறு விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்கவும், விதைகள், காப்பீடு, சந்தைகள், சேமிப்புகள் என அனைத்துத் துறைகளிலும் கவனம் செலுத்திப் பணியாற்றினோம். நல்ல தரமான விதைகளுடன், வேம்பு பூசப்பட்ட யூரியா, மண் சுகாதார அட்டை, நுண்ணீர் பாசனம் போன்ற வசதிகளை விவசாயிகளுக்கு அரசாங்கம் வழங்கியது.

விவசாயிகளின் கடின உழைப்புக்கு ஈடாக விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க பல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. நாடு அதன் கிராமப்புற சந்தை உள்கட்டமைப்பை பலப்படுத்தியது

குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தியது மட்டுமின்றி, எங்களுடைய சாதனை அரசு கொள்முதல் மையங்களையும் உருவாக்கியது. இதன் மூலம் கடந்த பல தசாப்தங்களின் வரலாற்றை எங்களுடைய அரசு முறியடித்துள்ளது. நமது அரசால் செய்யப்பட்ட உற்பத்தி கொள்முதல் நடவடிக்கைகள் விவசாயிகளின் நிலையை மேம்படுத்தும்.

இந்த மாபெரும் பிரசாரத்தில், நாட்டில் மூன்று விவசாயச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. நாட்டின் விவசாயிகள், குறிப்பாக சிறு விவசாயிகள், அதிக பலம் பெற வேண்டும், அவர்கள் தங்கள் விளைபொருட்களுக்கு சரியான விலையைப் பெற வேண்டும், மேலும் விளைபொருட்களை விற்பனை செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் அமையும் என நம்பினோம்.

பல ஆண்டுகளாக, நாட்டின் விவசாயிகள், நாட்டின் விவசாய வல்லுநர்கள், நாட்டின் விவசாய அமைப்புகள் இந்தக் கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இதற்கு முன்பும் பல அரசுகள் இது குறித்து மூளைச்சலவை செய்தன. இம்முறையும் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்று, குழப்பம் ஏற்பட்டு, அதற்கு மத்தியிலும் இந்தச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன.

நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும், பல விவசாயிகள் அமைப்புகள் இதை வரவேற்று ஆதரவளித்தன. அவர்கள் அனைவருக்கும் இன்று நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்

நமது அரசு, விவசாயிகளின் நலனுக்காக, குறிப்பாக சிறு விவசாயிகளின் நலனுக்காக, நாட்டின் விவசாய உலகின் நலனுக்காக, நாட்டின் நலனுக்காக, கிராம ஏழைகளின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக, முழு நேர்மையுடன், பக்தியுடன் விவசாயிகளுக்கு, நல்ல நோக்கத்துடன் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது

ஆனால் அத்தகைய புனிதமான, முற்றிலும் தூய்மையான, விவசாயிகளின் நலனுக்காக, நாங்கள் முயற்சி செய்த போதிலும் சில விவசாயிகளுக்கு அதன் பயனை விளக்க முடியவில்லை.

விவசாயப் பொருளாதார நிபுணர்கள், விஞ்ஞானிகள், முற்போக்கு விவசாயிகள் ஆகியோரும் விவசாயச் சட்டங்களின் முக்கியத்துவத்தை அவர்களுக்குப் புரியவைக்க தங்களால் இயன்றவரை முயன்றனர்.

இத்தகைய சூழலில் மூன்று விவசாயச் சட்டங்களையும் திரும்பப் பெற முடிவு செய்துள்ளோம் என்பதை இன்று முழு நாட்டிற்கும் சொல்ல வந்துள்ளேன். இம்மாத இறுதியில் தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில், இந்த மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்வதற்கான அரசியலமைப்பு செயல்முறையை நிறைவேற்றுவோம் என கூறினார் மோதி.

வரவேற்ற எதிர்கட்சியினர்:

X பதிவை கடந்து செல்ல, 3
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 3

"இந்தியாவுக்கு உணவளிக்கும் விவசாயிகள் தங்களின் சத்தியாகிரக போராட்டத்தின் மூலம் ஆணவத்தை தலைவணங்கச் செய்துள்ளனர். அநியாயத்துக்கு எதிரான இப்போராட்டத்துக்கு கிடைத்த வெற்றிக்கு வாழ்த்துக்கள்!" என பதிவிட்டுள்ளார் காங்கிரஸின் முக்கிய தலைவர் ராகுல் காந்தி.

X பதிவை கடந்து செல்ல, 4
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 4

"ஜனநாயக ரீதியிலான போராட்டத்தால் சாதிக்க முடியாததை, எதிர்வரவிருக்கும் தேர்தல் குறித்த பயத்தால் சாதிக்க முடியும்.

மூன்று வேளாண் சட்ட மசோதாக்களை பிரதமர் திரும்பப்பெற்றுள்ளது அவரது கொள்கை முடிவு மாற்றத்தாலோ, மனமாற்றத்தாலோ அல்ல. எதிர்வரவிருக்கும் தேர்தல் பயத்தால்தான்.

எப்படி இருந்தாலும், புதிய விவசாய சட்டங்களை உறுதியாக எதிர்த்து வந்த விவசாயிகள் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இது ஒரு மாபெரும் வெற்றி" என முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :