அண்ணாமலை VS செந்தில் பாலாஜி: ஊழல் தொடர்பாக ட்விட்டரில் தொடரும் மோதல்

- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு மின்சாரம் வாங்குவதில் ஊழல் நடந்திருப்பதாக ட்விட்டர் மூலம் பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் குற்றம்சாட்டியிருக்கிறார். ஆனால், இதனைக் கடுமையாக மறுத்திக்கிறார் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி.
தமிழ்நாடு மாநில பா.ஜ.கவின் தலைவரான கே. அண்ணாமலை சில நாட்களுக்கு முன்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தமிழ்நாடு மின்வாரியத்திற்கு ஒரு யூனிட் இருபது ரூபாய் என்ற அளவுக்கு மின்சாரம் வாங்கப்படுவதாகவும் அதில் ஊழல்நடப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
இதற்குப் பதிலளித்து செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அப்படி ஊழல் நடந்திருந்தால் அதற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டுமென்றும் இல்லாவிட்டால் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்றும் கூறியிருந்தார்.
இதற்குப் பிறகு, புதன்கிழமையன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஆங்கிலத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
அந்தப் பதிவில், "தமிழக மின்சாரத் துறை அமைச்சர் ஆதாரம் வேண்டுமெனக் கேட்கிறார். அவருக்கான கேள்வி இது: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் ஒப்பந்ததாரர்களுக்கு கடந்த சில மாதங்களாக பணம் ஏதும் விடுவிக்கப்படவில்லை. திடீரென கடந்த சில நாட்களில் 29.64 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டிருக்கிறது. பில் தொகையில் நான்கு சதவீத கமிஷன் எடுத்துக்கொள்ளப்பட்டு, இந்த தொகை விடுவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு பதில் சொல்லவும்" என்று கூறியிருந்தார்.
இதற்கு அடுத்ததாக அடுத்த 25 நிமிடத்தில் மற்றொரு பதிவை அண்ணாமலை வெளியிட்டார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
அதில் "நாம் என்ன பேசிக்கொண்டிருக்கிறோம் என்பது தமிழக மின்துறை அமைச்சருக்குப் புரியுமென நம்புகிறோம். அவரது சென்னை வீட்டில் உட்கார்ந்து கொண்டிருக்கும் ஐந்து ஆலோசகர்களுக்கு இந்த 4 சதவீதம் வசூலிக்கப்பட்டு எங்கே வைக்கப்பட்டிருக்கிறது என்பது தெரியும்.
இந்த வாரம் - அனல் மின் நிலையம், அடுத்த வாரம் - சூரிய சக்தி மின்சாரம், அதற்கு அடுத்த வாரம் - சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட நிறுவனம்" என்று குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன் ஒரு ஸ்க்ரீன் ஷாட் ஒன்றையும் வெளியிட்டார். அந்த ஸ்க்ரீன் ஷாட்டில், கண்காணிப்புப் பொறியாளர்களின் பட்டியல், அவர்களது இடம், அவர்களது வங்கிக் கணக்கு, அதற்கு அருகில் தொகை என வகைப்படுத்தப்பட்டிருந்தது.
இதற்குப் பிறகு இந்த விவகாரத்திற்கு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளிக்கத் துவங்கினார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
"மின்வாரிய துறையில் முறைகேடு நடந்துள்ளதென அண்ணாமலை கூறியதற்கு ஆதாரத்தை கேட்டால், வாரிய அலுவலகத்திற்கு அனுப்பிய நிதியை, யாருக்கு அனுப்பியது என்பது தெரியாமல், திருட்டுத்தனமாக எடுக்கப்பட்ட அந்த Excel கையில் இருந்தும், அந்த தொகையையும் 29.99 கோடியென சரியாக எழுத கூட தெரியாமல், All purpose அதிமேதாவியாக எண்ணி, 4% கமிஷனென மீண்டும் பொய் புகார் கூறி கழக ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தப் பார்க்கும் அண்ணாமலை இதற்கான ஆதாரத்தையும் இன்றே வெளியிடவேண்டும்.
இல்லை, அவர்களது வழக்கப்படி மன்னிப்பு கேட்க வேண்டும். 2021 மார்ச் மாதம் முதல் 06.05.2021 வரை, மின் கொள்முதல், தளவாட கொள்முதல் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு சேர வேண்டிய ரூ. 15,541 கோடி நிலுவையில் இருந்தது. அக்டோபர் ஒன்றாம் தேதி PFC & REC நிறுவனங்களிடமிருந்து நிதி வந்த பின், தலைமை நிதி கட்டுப்பாட்டு அலுவலகத்தில் நிலுவை தொகைகள் சரி பார்க்கப்பட்டு, அந்தந்த மின் பகிர்மான மற்றும் மின் உற்பத்தி வட்டத்திற்குரிய மேற்பார்வை மற்றும் தலைமை பொறியாளர்கள் அலுவலக வங்கி கணக்குகளுக்கு அனுப்பப்பட்டு, பின்னர் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. இதுவே வழக்கமான நடைமுறை" என்று குறிப்பிட்டார்.
இதையடுத்து மற்றுமொரு ஸ்க்ரீன் ஷாட்டை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் அண்ணாமலை.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 4
அதில், இந்தியன் எனர்ஜி எக்சேஞ்ச் எனப்படும் இந்திய மின்சக்தி பரிவர்த்தனை கழகத்தில் ஒரு நாளில் எந்தெந்த நேரத்தில் எந்தெந்த விலைக்கு மின்சாரம் விற்கப்பட்டது என்பது குறிக்கப்பட்டிருந்தது. இதனை வெளியிட்ட அண்ணாமலை, "கடந்த வாரம் ஒரு யூனிட் மின்சாரம் ரூ. 20.00 வரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது! உற்பத்தி செய்யும் அனல் மின்சாரத்தின் உற்பத்தி செலவைவிட 5 மடங்கு இது கூடுதலான விலை!
1 மெகா வாட் - ரூ. 20,000
1000 கிலோ வாட் என்பது 1 மெகா வாட்.
1 கிலோ வாட் (1000 வாட்ஸ்) என்பது 1 யுனிட்.
1 யுனிட் = ரூ. 20." என்று எழுதியிருந்தார்.
இதற்கு செந்தில் பாலாஜி மீண்டும் ஒரு விரிவான பதிலை அளித்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 5
அதில், "செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 19வரை பயன்படுத்திய மின்சாரம் 6,200 மில்லியன் யூனிட். அதில் இந்திய மின் சந்தையில் வாங்கியது 397 மி.யூ. அதிலும் ரூ. 20/-க்கு வாங்கிய மின்சாரம் 65 மி.யூனிட் மட்டுமே. ரூ. 20/-க்கு குஜராத் கொள்முதல் செய்த மின்சாரம் 131 மி. யூனிட்கள்.
கடந்த ஆட்சியில் புதிய மின் உற்பத்தி திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது. அக்டோபர் 18ஆம் தேதி அன்று இந்திய மின் சந்தையில் தமிழகம் வாங்கியது 7.66 மில்லியன் யூனிட். குஜராத் வாங்கியது 45 மில்லியன் யூனிட். மகாராஷ்டிரா வாங்கியது 18 மில்லியன் யூனிட்.
ஹரியாணா வாங்கியது 14 மில்லியன் யூனிட். இந்திய மின் சந்தையில் அக்டோபர் 18ஆம் தேதி அன்று ஒரு யூனிட்டின் விலை, குறைந்தபட்சம் ரூ.1.99/- யூனிட். அதிகபட்ச விலை ரூ 8.50/-. சராசரி விலை ரூ. 6.00/- யூனிட். அதிமேதாவிகளும், ஆர்வக்கோளாறுகளும், வாட்ஸப் வீரர்களும் IEX இணையதளத்தை பார்த்து அறிந்து கொள்ளவும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்குப் பதிலாக, செந்தில் பாலாஜி தி.மு.கவில் இணைவதற்கு முன்பாக அவரை விமர்சித்து மு.க. ஸ்டாலின் பேசிய பேச்சின் வீடியோவை வெளியிட்டார் அண்ணாமலை. பிறகு இன்று காலையில் மீண்டும் ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டார். https://twitter.com/annamalai_k/status/1451063872056479745
அதில், கோபாலபுரம் - பிஜிஆர் எனர்ஜி - தமிழ்நாடு மின் வாரியம் - செந்தில் பாலாஜி ஆகியோர் கைகுலுக்கிக் கொள்வதைப் போல ஒரு வரி எழுதப்பட்டிருந்தது. "இந்தப் புள்ளிகளை இணைத்து பாருங்கள்...விடை எளிதில் புரியும்!" என்று கூறியிருந்தார்.
இதற்கு மீண்டும் பதிலளித்துள்ள செந்தில் பாலாஜி, அந்த ஒப்பந்தம் பா.ஜ.க. - அ.தி.மு.க. காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தம் என தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 6
"1680ல் மறைந்த சத்திரபதி சிவாஜி, அக்டோபர் 3, 1967ல் சென்னை வந்தார் என்று சொல்லும் அளவுக்கு அண்ணாமலைக்கு வரலாற்று ஞானம் இருப்பதால், தேதி வாரியாக விளக்க வேண்டியதுள்ளது.
எண்ணூர் அனல்மின் நிலையம் (ETPS) விரிவாக்கத்துக்காக, TANGEDCOவினால் 30/3/2012 அன்று LANCO நிறுவனத்திற்கு Original proposal வழங்கி, பின்னர் 27/12/2014 அன்று LoA (Letter of Award) வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட ரூ. 1700 கோடி செலவாகி, குறைந்த பணிகளே முடிந்த நிலையில், LANCO நிறுவனம் திவால் ஆனது.
As is where is என்ற அடிப்படையில், எடப்பாடி அரசு 2/3/2019 அன்று BGR நிறுவனத்திற்கு, நின்ற பணிகளை துவங்கிட LoA வழங்கி, 1/3/2021 அன்று CTE (Content to Establish) கொடுத்தது. பேரம் படியாததால் ஏப்ரல் 2021ல் அந்த ஒப்பந்தத்தை முடித்து கொண்டது. BGR நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றம் சென்று வழக்காடி ஒப்பந்தப்படி பணியை ஆரம்பிக்க இருக்கிறது.
இது புது ஒப்பந்தமில்லை. பா.ஜ.கவும் அ.தி.மு.கவும் கூட்டணியாய் இருந்தபோது நிகழ்ந்த ஒப்பந்தம். ஒப்பந்த தொகையும் எடப்பாடி அரசு நிர்ணயம் செய்ததே. முழுக்கவும் அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த நிகழ்வுகள். தெரிந்து சொல்லுங்கள் அல்லது தெரிந்து கொள்ளுங்கள். இருவரது நேரத்தையும் வீணடிக்காதீர்கள்" எனப் பதிலளித்துள்ளார்.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மூன்று குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார். 1. ஒப்பந்ததாரர்களுக்கு 4 சதவீத கமிஷன் பிடித்துக்கொள்ளப்பட்டே வேலைக்கான பணம் தரப்படுகிறது 2. தமிழ்நாடு மின்வாரியம் ஒரு யூனிட் 20 ரூபாய் என்ற விலையின் மின்சாரத்தை வாங்குகிறது. 3. கருணாநிதியின் இல்லம், பிஜிஆர் எனர்ஜி, தமிழ்நாடு மின்வாரியம், செந்தில் பாலாஜி ஆகியோர் இடையே தொடர்பு இருக்கிறது.
ஆனால், இந்த மூன்று குற்றச்சாட்டுகள் குறித்தும் தெளிவான ஆதாரங்கள் எதையும் அளிக்காமல், கணினி திரையில் எக்ஸல்ஷீட்டில் இருந்த ஒரு பட்டியலின் படத்தை மட்டும் வெளியிட்டதால், புதன்கிழமை மாலையில் தி.மு.க. ஆதரவாளர்கள் #எக்ஸல்சீட்டு_அண்ணாமலை என்ற ஹாஷ்டாகை ட்ரெண்ட் செய்தனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்