நிர்மலா சீதாராமன்: ‘கொரோனாவால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு 1.1 லட்சம் கோடி வரை கடன் உத்தரவு’

பட மூலாதாரம், ANI
கொரோனா வைரஸ் பரவலால் பாதிப்படைந்த இந்திய பொருளாதாரத்தை சீரமைக்க உதவும் வகையில் பல அறிவுப்புகளை இன்று வெளியிட்டுள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அவரின் அறிவிப்பு:
- எட்டு பொருளாதார மீட்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் நான்கு முற்றிலும் புதியது. ஒன்று சுகாதார கட்டமைப்பிற்கானது. கொரோனா பாதிக்கப்பட்ட துறைகளுக்கு 1.1 லட்சம் கோடி கடன் உத்தரவு வழங்கப்படும். சுகாதார துறைக்கு 50,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
- இந்த வருடம் ஏழை மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்குவதற்கான செலவு 93,869 கோடி ரூபாய். பிரதான் மந்திரி கரிப் கல்யான் யோஜனா திட்டத்திற்கு 2 லட்சத்து 27,841 கோடி ரூபாய் செலவிடப்படும்.
- சர்வதேச சுற்றுலா துறையை புதுப்பிக்க, முதலில் வரும் 5 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா நபர்களுக்கு விசா கட்டணம் கிடையாது. இந்த திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை செயல்பாட்டில் இருக்கும். அல்லது ஐந்து லட்சம் விசாக்கள் வழங்கப்படும் வரை இருக்கும். இந்த சுற்றுலா விசாவின் அனுமதி காலம் ஒரு மாதம்.
- மேலும் 11 ஆயிரம் பதிவு செய்யப்பட்ட சுற்றுலா வழிகாட்டிகளுக்கும் சுற்றலா சார்ந்த நிறுவனங்களுக்கும் நிதி உதவி அளிக்கப்படும்.
- அவசரநிலை கடனளிப்பு உத்தரவாத திட்டத்திற்கு மேலும் 1.5 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- குழந்தைகள் மற்றும் அவர்களின் நலத்தை வலியுறுத்தி அவசர கால தயாரிப்புகளுக்காக பொது சுகாதார துறைக்கு 23, 220 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
- புதிய கடன் உத்தரவு திட்டத்தின் மூலம், சிறுநிதி நிறுவனங்கள் வழியாக தனி நபர் ஒருவருக்கு 1.25 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும். இதற்கான வட்டி ரிசர்வ் வங்கியின் பரிந்துரையின்படி 2 சதவீதத்துக்கு குறைவாக இருக்கும்.
- பிரதமரின் ஆத்ம நிர்பார் பாரத் ரோஸ்கார் திட்ம் 2022ஆம் ஆண்டு மார்ச் 31வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- கொரோனா புதிய திரிபு: ஆஸ்திரேலியாவில் அதிகரிக்கும் பாதிப்பு
- மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை முன்னாள் எம்.பி-க்கு பொதுமன்னிப்பு – சர்ச்சையாவது ஏன்?
- ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலை வழக்கு: காவல்துறை அதிகாரிக்கு 22 வருட சிறை
- 'பயிர்க்கடன் தள்ளுபடியில் பலநூறு கோடி மோசடி': அமைச்சர் அறிவிப்பால் அதிமுகவில் அதிர்வலை
- சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த விரும்பும் அரசுகள்: உங்களுக்கு என்ன பாதிப்பு?
- அஜித் 'வலிமை' அப்டேட்: முதல் பார்வை வெளியீடு எப்போது?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்








