சீனாவிடம் இருந்து இந்தியா கைலாஷ் மானசரோவர் சிகரத்தை கைப்பற்றியதா? உண்மை என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பரணி தரன்
- பதவி, பிபிசி தமிழ்
சீன எல்லைக்குள் இந்தியப் படைகள் வருவதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் சமீபத்தில் குற்றம் சாட்டியுள்ளார். அதே வேளையில் சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் கைலாஷ் மானசரோவர் சிகரத்தை இந்தியா கைப்பற்றியதாக ஓராண்டுக்கும் மேலாக இந்திய சமூக ஊடகப் பயனர்கள் சிலர் பதிவிடுகின்றனர். உண்மை நிலவரம் என்ன?
இமய மலைத்தொடரின் மலை முடியாக அறியப்படும் கைலாய மலை ஆன்மிகம், சாகசம், மர்மங்கள் நிறைந்த இடமாக அறியப்படுகிறது. 6,638 மீட்டர் (21,778 அடி) உயரம் கொண்ட இந்த மலை, மானசரோவர் ஏரி மற்றும் ராக்ஷஸ்தல ஏரி அருகே அமைந்துள்ளது. ஆசியாவின் மிகவும் நீளமான நதிகளான சிந்து, சட்லஜ், பிரம்மபுத்ரா, கர்னாலி ஆகியவற்றின் பிறப்பிடமாக கைலாய மலை கருதப்படுகிறது.
இந்து, பெளத்தம், சமணம், திபெத்தியர்களின் ஆதி மதமான பொம்பா ஆகிய நான்கு மதங்களை பின்பற்றுவோராலும் இந்த இடம் புனிதமானதாக கருதப்படுகிறது. இந்த மலையின் அடிவாரத்தை வலம் வருவதைத்தான் இவர்கள் புனித கடமையாகக் கருதுகிறார்கள். 52 கி.மீ தூரமுள்ள இந்த பாதையை வலம் வர யாத்ரீகர்கள் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் வருகிறார்கள்.
இந்தியா, நேபாளம், திபெத், சீனா ஆகியவற்றின் அரசியல், ராஜீய உறவு, பாதுகாப்பு கட்டமைப்புடன் தொடர்புடைய கைலாயம், உண்மையில் சீனாவின் திபெத்திய பீடபூமியில் அமைந்துள்ளது. 1959இல் திபெத்தை சீனா ஆக்கிரமித்த பிறகு, வெளிநாட்டினர் எவரும் இந்த பகுதிக்கு அனுமதிக்கப்படவில்லை.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1

X பதிவின் முடிவு, 2
ஆனால், 1981இல் இந்தியா, சீனா இடையே யாத்ரீகர்களின் பயணத்துக்காக கைலாயம் சென்று வர கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்க ஒப்புக் கொள்ளப்பட்டதன் அடிப்படையில் யாத்ரீகர்கள் கைலாயம் வந்து போக சீன அரசு அனுமதி வழங்கி வருகிறது. அந்த வகையில் கைலாய சிகரத்தின் ஒட்டுமொத்த கட்டுப்பாடும் சீனாவிடமே உள்ளது. அங்கும் அதைச்சுற்றிய திபெத்திய பகுதியிலும் வர்த்தகம், வெளிநாட்டு பயணிகள் வந்து போகும் நுழைவு அனுமதியை திபெத்திய சுற்றுலா துறை வழங்கி வருகிறது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
எப்போதெல்லாம் இந்தியா, சீனா இடையே லடாக் எல்லை, அருணாசல பிரதேசம் எல்லை பகுதியில் இரு நாட்டு படையினர் இடையே மோதல் நடக்கிறதோ அப்போதெல்லாம் கைலாய மலைக்கு வரும் இந்திய யாத்ரீகர்களுக்கு தடை விதிப்பதையோ கெடுபிடி காட்டுவதையோ சீனா வழக்கமாக கொண்டிருக்கும்.
2020க்கு முன்புவரை கைலாய மலைக்கு செல்ல இரு வாய்ப்புகள் மட்டும் இருந்தன. ஒன்று நேபாள தலைநகர் காத்மாண்டூ சென்று அங்கிருந்து கைலாய மலைக்கு திபெத்திய பிராந்தியத்தில் சாலை வழியாகச் செல்வது, மற்றொன்று இந்தியாவின் சிக்கிம் மாநிலத்துக்குச் சென்று அங்கிருந்து கைலாய மலைக்கு சீன சாலை வழியாகச் செல்வது.
இதில் டெல்லியில் இருந்து காத்மாண்டூ இடையிலான 1,150 கி.மீ தூர பயணம் மேற்கொள்ள இரண்டு விமான பயணங்கள் மற்றும் ஒரு சாலை வழி பயணம் அல்லது இரண்டு விமானங்கள் அல்லது ஒரு ஹெலிகாப்டர் பயணம் மேற்கொள்ள வேண்டும். பிறகு சீன பகுதியில் 43 கி.மீ தூரத்துக்கு நடந்தே செல்ல வேண்டும்.

பட மூலாதாரம், TIBETKAILASH GROUP
சிக்கிமில் இருந்து செல்வதாக இருந்தால், மேற்கு வங்கத்தின் பாக்தோக்ராவுக்கு விமானத்தில் செல்ல வேண்டும். அங்கிருந்து சிக்கிம் மாநில சாலையில் பயணம் செய்து, பின்னர் சீன எல்லைக்குள் நுழைந்து மொத்தம் 1,490 கி.மீ தூரத்துக்கு பயணம் செய்ய வேண்டும். இதனால் கைலாய யாத்திரைக்கு செல்வோர் வயோதிகராக இருந்தால் அவர்களுக்கு இந்த பயணம் மிகவும் கடும் சவால்களைத் தரக்கூடியதாக இருக்கும்.
இந்த இரண்டு பாதைகளுக்கும் மாற்றாக இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் காட்டியாபார்க் முதல் லிபுலேக் பகுதிவரை 80 கி.மீ தூரத்துக்கான பாதையை கடந்த ஆண்டு இந்திய எல்லை சாலை நிறுவனம் அமைத்தது. இந்த லிபுலேக் கணவாய்தான் இந்தியா, திபெத், நேபாளத்தை இணைக்கும் சந்திப்பாக உள்ளது.

பட மூலாதாரம், Getty Images
உத்தராகண்ட் மாநிலத்தின் பித்தோரகர்-தாவாகாட்-காட்டியாகர் பாதையின் விரிவாக்கமே தார்ச்சுலா-லிபுலேக் பாதை. காட்டியாபார்க்கில் தொடங்கி லிபுலேக் கணவாய் சந்திப்பில் இந்த பாதை நிறைவடைகிறது. ஆரம்பத்தில் ஆறாயிரம் அடி உயரத்தில் தொடங்கும் பாதை, நிறைவு செய்யும்போது 17 ஆயிரம் அடி உயரமாக இருக்கும். மேலும், இதுவே உயரமான இமயமலையின் தாழ்வான பகுதியாக கருதப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
இந்த இடத்தை அடைந்ததும், திபெத்திய பகுதியில் 97 கி.மீ தூரம் பயணம் செய்தாலே போதும், கைலாஷ் மானசரோவர் பகுதியை யாத்ரீகர்கள் அடையலாம். இந்த லிபுலேக் பகுதி வரை இந்திய யாத்ரீகர்களை இந்திய பாதுகாப்புப் படையினர் அழைத்துச் சென்று திபெத்திய எல்லையில் சீன படையினரிடம் ஒப்படைப்பார்கள். அங்கு யாத்ரீகர்களின் போக்குவரத்து, தங்குமிட வசதிகளை கவனிக்கும் பொறுப்பு, சீன படையினருடையது. அவர்கள் மூலம் உரிமம் பெற்ற ஏஜென்டுகள் யாத்ரீகர்களை கைலாய மானசரோவர் பகுதிக்கு அழைத்துச் சென்று கிரிவலம் செய்ய வைத்து பின்னர் இரண்டு, மூன்று நாட்களில் மீண்டும் லிபுலேக் பகுதியில் இந்திய படையினரிடம் ஒப்படைப்பார்கள்.

பட மூலாதாரம், Getty Images
ஆனால், இதுவரை பிரச்னைகள் இல்லை. அந்த கைலாய மலை உச்சியின் சரகத்தில்தான் பாங்கோங் ஏரியின் தென் பகுதி வருகிறது. இது சீன துருப்புகளின் ஆதிக்கம் நிறைந்த இடம். அடிப்படையில் இது திபெத்திய பகுதி. இந்த கைலாஷ் சரகத்துக்கு ஒட்டிய மலைச்சிகரத்தில் ஒரு புறம் சீன துருப்புகளும், மறுபுறத்தில் இந்திய துருப்புகளும் உள்ளன. இரண்டும் தங்களின் நிலைகளில் இருந்து முன்னேறக்கூடாது என்பது இரு தரப்பு ராஜீய அளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட நிலைப்பாடு.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் கிழக்கு லடாக் பிராந்தியத்தின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா, சீனா படையினர் மோதிக் கொண்ட சம்பவத்தில் 20 வீரர்கள் இந்திய தரப்பில் பலியானார்கள். அந்த சம்பவத்துக்குப் பிறகு கிழக்கு லடாக்கின் மலை உச்சியில் தமது படை பலத்தை சீனா அதிகப்படுத்தியது. திபெத்திய சுயாதீன பிராந்தியமான கர் குன்சா பகுதியில் ஆளில்லா டிரோன்களை பறக்க விட்டு இந்திய படையினர் எங்கெல்லாம் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர் என்பதை அறிய சீனா முற்பட்டது.
அதே காலகட்டத்தில் வடக்குப்பகுதி ஏரியில் சீன படையினர் ஆக்கிரமிப்பு செய்திருந்ததற்கு பதிலடியாக இந்திய ராணுவமும் கைலாஷ் சிகரத்தின் சில பகுதிகளை ஆக்கிரமித்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29,30 ஆகிய தேதிகளில் தென்கரை பகுதியின் ரெசாங் லா, ரெச்சின் லா ஆகிய பகுதிகளில் இந்திய ராணுவத்தினர் முகாமிட்டனர்.
ஆனால், சில மாதங்கள் மட்டுமே அங்கு இந்திய படையினர் நீடித்திருந்தனர். இரு தரப்பும் தொடர்ச்சியாக நடத்தி வந்த ராஜீய மற்றும் பாதுகாப்பு நிலையியான பேச்சுவார்த்தை பயனாக, கடந்த பிப்ரவரி மாதம் இரு நாட்டு படையினரும், கடந்த ஆண்டு மே மாதத்துக்கு முன்பு இருந்த நிலைகளுக்கே திரும்பி விட்டனர்.
இதைத்தொடர்ந்து படை விலக்கப்பட்ட மற்றும் ராணுவ ரோந்து அல்லாத பகுதியாக கைலாஷ் மலைச்சிகர பகுதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த நிலை எப்போது வேண்டுமானாலும் மீறப்படலாம் என்ற பதற்றத்துடனேயே அங்கு நிலைமையை இரு தரப்பும் கவனித்து வருவதாக இந்திய ராணுவ தலைமையக உயரதிகாரிகள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.

பட மூலாதாரம், INDIAN ARMY
இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்த வடக்கு கட்டளை பிரிவு இந்திய ராணுவ தளபதி லெப்டிணன்ட் ஜெனரல் ஒய்.கே. ஜோஷி, வடக்குக்கரை பகுதியில் உள்ள ஃபிங்கர் ஃபோர் வரை இந்திய தரப்பு நிலைநிறுத்தப்படவிருந்த இடத்தில் சீன ராணுவத்தினர் வந்தனர். அவர்கள் பின்வாங்கிச் செல்ல பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் கிடைக்காததால், நமது பங்குக்கு இந்திய படையினரும் சீன தரப்பு நிலைகொண்டிருக்க வேண்டிய பகுதிக்கு முன்னேறினார்கள்," என்றார்.

பட மூலாதாரம், INDIAN ARMY
கைலாய மலைச்சிகரம், கிழக்கு லடாக் ஆகியவற்றில் பிரச்னைக்குரிய பகுதிகளாக கோக்ரா, ஹாட் ஸ்பிரிங், டெப்சாங் ஆகியவை கருதப்படுகின்றன. காரணம், எல்லைகள் இவைதான் என வரையறுக்கப்பட முடியாத மலை உச்சியில் உத்தேசமாகவே இரு நாட்டு படையினரும் கண்காணிப்பை இன்றுவரை மேற்கொண்டு வருகிறார்கள்.

பட மூலாதாரம், INDIAN ARMY
இந்த விவகாரம் தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் காங்கிரஸ் உறுப்பினர் அதிர் ரஞ்சன் செளத்ரி கேள்வி எழுப்பியபோது, இந்திய பகுதிக்குள் சீன படையினர் 18 கி.மீ தூரம் அளவுக்கு ஊடுருவி வந்ததாக குற்றம்சாட்டினார். ஆனால், படை விலக்கல் நடவடிக்கையில் இரு தரப்பினரும் ஈடுபாடு காட்டி வருவதாக இந்திய பாதுகாப்பு அமைச்சர் விளக்கம் அளித்தார்.
ஆனால், இந்திய படையினர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத கடைசியில் சீன படையினர் இருக்க வேண்டிய பகுதிவரை முன்னேறியிருக்காவிட்டால், இந்நேரம் அவர்கள் பல கிலோ மீட்டர் அளவுக்கு முன்னேறி இந்திய எல்லை பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்திருக்கக் கூடும் என்று இந்திய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 4
கள நிலவரம் இவ்வாறு இருக்க, சமூக ஊடகங்களிலும் சில வாட்ஸ்அப் குழுக்களிலும் இந்திய ராணுவத்தினர் கைலாய மலையை கைப்பற்றி விட்டனர் என்று கூறி தவறான தகவல்களை பகிர்ந்து வருகிறார்கள். இதுபோன்ற தகவல்களை சில ஓய்வு பெற்ற ராணுவ உயரதிகாரிகளும் கடந்த ஆண்டு பகிர்ந்தனர். அப்போதே அவை சரிபார்க்கப்படாத தவறான தகவல் என இந்திய பாதுகாப்புத்துறை தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 5
1841இல் ஜெனரல் ஸொராவர் சிங் திபெத்தை ஆக்கிரமித்து 800 கி.மீ தூரத்துக்கு முன்னேறிச் சென்று மானசரோவர் ஏரியை கைப்பற்றி விட்டார். புனிதமான ஏரிகள் அருகே நடந்த சண்டையில் சீன படையினர் ஓடி விட்டனர். இப்போது கைலாய மலை உச்சியில் நமது படைகளே உள்ளன என்கிறது அந்த வாட்ஸ்அப் தகவல். அதனுடன் பகிரப்பட்ட படத்தில் இந்திய படையினர் சிலர் மூவர்ண தேசிய கொடியை ஏந்திப்பறக்க விடுவது போன்ற காட்சி உள்ளது.
இந்த படத்தை ஓய்வு பெற்ற இந்திய ராணுவ உயரதிகாரியான மேஜர் ஜெனரல் ஜி.டி.பக்ஷி தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதை மூன்றாயிரத்துக்கும் அதிகமானோர் மறுட்வீட் செய்துள்ளனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 6
உண்மையில் அந்த படம் திருத்தப்பட்டது. அந்த படத்தில் காணப்படும் இந்திய வீரர்கள், எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் குடியரசு தினத்தையொட்டி மூவர்ண தேசிய கொடியே தாங்கிப்பிடித்து படத்துக்கு காட்சி கொடுத்துள்ளனர். இதே தகவலைத்தான் இப்போதும் சில சமூக ஊடக பயனர்கள், உண்மை என கருதி சில வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்ந்து வருகிறார்கள்.
1962இல் சீனாவுடனான போரில் இந்தியா தோல்வியைத் தழுவியவேளையில், சீன ராணுவ கட்டுப்பாட்டில் இருந்த அக்சாய் சின் பகுதிக்கு இந்தியா உரிமை கோரியது. அங்கு கட்டுமானங்களை எழுப்ப இந்தியா முயன்றபோதுதான் இரு தரப்பிலும் மோதல் தீவிரமானது. இந்த போருக்கு முன்புவரை கைலாய மலையின் பெரும்பகுதி இந்திய கட்டுப்பாட்டிலேயே இருந்தது.
கைலாய மலை கண்காணிப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த இந்திய ராணுவத்தின் ஓய்வு பெற்ற லெப்டிணன்ட் கர்னல் மனோஜ் கே. சன்னன், ராஜீய அளவிலான பேச்சுவார்த்தைகள் மூலமே இந்த எல்லை பிரச்னை தீவிரமாகாமல் தடுக்க முடியும் என்று கூறினார். கோடை காலம் முடிந்து குளிர்காலம் தொடங்கும்போது இந்த பகுதிகள் பனி போர்த்திய பிராந்தியங்களாக மாறும்போது கண்காணிப்பு என்பது இந்திய தரப்புக்கு சவாலாக மாறும். ஆனால், அதுதான் சீன தரப்புக்கு ஆதாயமாகும் என்பதால், எல்லை கண்காணிப்பில் இந்தியா சமரசம் செய்து கொள்ளக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 7
இதேவேளை, எல்லை பகுதியில் தமது துருப்புகளை இந்தியா தொடர்ந்து அதிகப்படுத்தி சீன பிராந்தியத்துக்குள் ஆக்கிரமித்து வருவதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ ஜூன் 23ஆம் தேதி குற்றம்சாட்டியிருக்கிறார். அதே சமயம் எல்லை பிரச்னைகளையும், இரு நாட்டு ராஜீய உறவுகளையும் தொடர்படுத்த தாம் விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்