வருமான வரி செலுத்த புதிய இணையதளம்: நீங்கள் அறிய வேண்டிய முக்கிய தகவல்கள்

வருமான வரித்துறை

பட மூலாதாரம், INCOME TAX DEPT

இந்தியாவில் வருமான வரி செலுத்துவோர் இனி புதிய இணையதள பக்கத்தில் வரி விவரங்களை சமர்ப்பிக்கும் வசதி திங்கட்கிழமை (ஜூன் 7) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய இணையதள பக்கத்தில் பயனர்களின் வசதிக்காக சில முக்கிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, http://www.incometaxindiaefiling.gov.in/ என்ற பழைய இணைய தள பக்கத்துக்கு பதிலாக புதிதாக http://www.incometaxgov.in/ என்ற இணையதள பக்கத்தை வருமான வரித்துறை உருவாக்கியிருக்கிறது.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

இது தவிர செல்பேசி வாயிலாக வருமான வரி தாக்கல் செய்யும் வசதியையும் வரும் 18ஆம் தேதி வருமான வரித்துறை அறிமுகப்படுத்தவிருக்கிறது.

மேலும், வருமான வரி தாக்கலின்போது வரி செலுத்துவோருக்கு எவ்வித பிரச்னைகள் ஏற்படுவதை தவிர்க்க வாடிக்கையாளர் சேவை மையமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

புதிய இணையத பக்கத்தில் என்ன புதுமை?

  • பயன்படுத்த எளிய வசதி: புதிய இணையதள பக்கத்தில் வருமான வரி தாக்கல் விவரங்களை செலுத்தி, விரைவாக தகுதி பெறும் பணத்தை திரும்பப்பெறும் வசதி எளிமையாக்கப்பட்டுள்ளது.
  • ஆன்லைன் வரி செலுத்தும் முறைப்படி, பயனர்கள் வங்கி ஆன்லைன் கணக்கு, யுபிஐ, கடன் அட்டை, ஆர்டிஜிஎஸ், என்இஎஃப்டி போன்றவற்றில் ஏதாவதொரு வசதியை தேர்வு செய்து தங்களுடைய வரியை தாக்கல் செய்யலாம்.
  • வருமான வரி செலுத்துவோர் அவருடைய பான் அட்டை எண் மூலம் அவரது கணக்குப் பக்கத்துக்குள் நுழைந்தவுடனேயே தனது முகப்புப்பக்கத்தில் எவ்வளவு வரி செலுத்த வேண்டும், அவர் செய்ய வேண்டிய நிலுவை நடவடிக்கைகள் போன்றவற்றை அறிந்து கொள்ள முடியும்.
  • வருமான வரி செலுத்தும் படிவம் 1,4 (ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன்) மற்றும் படிவம் 2 (ஆஃப்லைன்) ஆகியவற்றின் மூலம் விவரங்களை பதிவேற்றலாம். இதற்கு எந்த கட்டணமும் இல்லை. ஐடிஆர் 3,5,6,7 ஆகியவற்றின்கீழ் விவரங்களை பதிவு செய்வோருக்காக விரைவில் புதிய வசதி அறிமுகமாகவிருக்கிறது.
  • புதிய கால் சென்டர் மையம் மூலம் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தாலோ விவரங்கள் தேவைப்பட்டாலோ அவற்றை வரி செலுத்துவோர் பெறலாம். அவரது வசதிக்காக அடிக்கடி எழுப்பப்படும் கேள்விகளுக்கான விடைகள், விளக்க காணொளிகள் போன்றவை இணையதள பக்கத்தில் இடம்பெற்றுள்ளன.
  • கூடுதல் வசதியாக, புதிய இணையதள பக்கத்தில் புதிய வருமான வரி படிவங்கள், தொழில்முறை வரி செலுத்துவோருக்கான படிவங்கள், வருமான வரித்துறை அனுப்பும் நோட்டீஸ்களுக்கு ஆன்லைனிலேயே பதில் தரும் வசதி, மேல்முறையீட்டு வசதி போன்றவை உள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :