மத்திய பட்ஜெட் 2020 : மத்திய அரசு உண்மையிலேயே வருமான வரியை குறைத்துள்ளதா?

பட மூலாதாரம், Getty Images
இன்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தனி நபருக்கான புதிய வருமான வரி திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார்.
நேரடி வரிகள் குறித்து பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தனி நபர் வருமான வரி செலுத்தும் முறையை மேலும் எளிதாக்கி உள்ளோம் என்றார்.
மேலும், புதிய வருமான வரி திட்டத்தை அறிமுகம் செய்த அவர், இந்த புதிய வருமான வரி திட்டத்தை தனி நபர் வேண்டுமென்றால் பயன்படுத்தி கொள்ளலாம் என்று குறிப்பிட்டார்.
இந்த புதிய வரி திட்டம் மிகவும் எளிதாக இருக்கும் என்று உறுதியளித்த அவர், புதிய வருமான வரி திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை சம்பாதிப்பவர்களுக்கு முழு வரி விலக்கு அளிக்கப்படுவதாக கொடுத்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
புதிய வருமான வரி திட்டத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளது?
0 - 5 லட்சம் வரை - வரி இல்லை
5 லட்சத்திலிருந்து 7.5 லட்சம் வரை - 20%லிருந்து 10சதவீதமாக குறைப்பு
7.5 லட்சத்திலிருந்து 10 லட்சம் வரை - 20%லிருந்து 15சதவீதமாக குறைப்பு
10 லட்சத்திலிருந்து 12.5 லட்சம் வரை - 30%லிருந்து 20சதவீதமாக குறைப்பு
12.5 லட்சத்திலிருந்து 15 லட்சம் வரை - 30%லிருந்து 25 சதவீதமாக குறைப்பு
15 லட்சத்துக்கு மேல் - 30% (குறைக்கப்படவில்லை)
புதிய வருமான வரித்திட்டம் குறித்து எடுத்துகாட்டுடன் கூடிய நிர்மலா சீதாராமன், ஒருவர் 15 லட்சம் சம்பாதிக்கிறார் என்றால் இதுவரை அவர் ஆண்டுக்கு 2.73 லட்சம் வரி செலுத்தினார். இனி புதிய வருமானவரி அறிவிப்புகளின்படி, அவர் 1.95 லட்சம் ரூபாய் வரியாக கட்டுவார். இது முன்பை காட்டிலும் 78 ஆயிரம் ரூபாய் குறைவு. அவர், முறையான வரி விலக்குகளை பெற்றால் மேலும் அவரது வரி குறையும் என்றார்.
ஆனால், இந்த புதிய வருமான வரி திட்டத்துக்கும், பழைய வருமான வரி திட்டத்துக்கும் நிறைய மாற்றங்கள் இருக்கின்றன.
அதாவது பழைய வருமான வரி விதிப்பு திட்டத்தில் விலக்குப்பெற 100 பிரிவுகள் கொடுக்கப்பட்டு இருந்தன. ஆனால், புதிய வரி விதிப்பில் 100 பிரிவில் 70 பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளன. வெறும் 30 பிரிவுகள் மட்டுமே இடம்பெற்று இருக்கின்றன.
எளிமையாக கூற வேண்டுமென்றால், பழைய வருமான வரி விதிப்பில் இடம்பெற்றிருந்த பிரிவுகள் புதிய வருமான வரி திட்டத்தில் இடம்பெற்றிருக்காது.
40,000 கோடி ரூபாய் இழப்பு
வருமான வரிவிதிப்பில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களால் மத்திய அரசுக்கு சுமார் 40,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.
மேலும், ஜி.எஸ்.டியின் கீழ் 60 லட்சம் பேர் புதிதாக வருமான வரி செலுத்தி உள்ளனர் எனவும் நிர்மலா சீதாராமன் தனது உரையில் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
- ‘பூமி திருத்தி உண்’ - நிர்மலா சீதாராமன் மேற்கோள் காட்டிய ஆத்திசூடியின் பொருள் என்ன?
- Budget 2020 Live: 15 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமானவரி குறைப்பு - நேரலை தகவல்கள்
- நிர்பயா பாலியல் வல்லுறவு வழக்கு: குற்றவாளி வினய் சர்மாவின் கருணை மனு நிராகரிப்பு
- சார்ஸை விஞ்சிய கொரோனா - சீனா சென்றவர்களுக்கு அமெரிக்காவில் தடை - 10 தகவல்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













