Budget பட்ஜெட் 2020: 15 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமானவரி குறைப்பு - தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images
நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.
நேரடி வரிகள் குறித்து பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தனி நபர் வருமான வரி செலுத்தும் முறையை மேலும் எளிதாக்கி உள்ளோம் என்றார். மேலும் அவர் தனி நபர் வருமான வரிகளில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் அறிவித்தார். அதன்படி,
0 - 2.5 லட்சம் வரை வருமானம் - வரி இல்லை
2.5 லட்சத்திலிருந்து 5 லட்சம் வரை - வரி இல்லை
5 லட்சத்திலிருந்து 7.5 லட்சம் வரை - 10% (குறைக்கப்பட்டுள்ளது)
7.5 லட்சத்திலிருந்து 10 லட்சம் வரை - 15% (குறைக்கப்பட்டுள்ளது)
10 லட்சத்திலிருந்து 12.5 லட்சம் வரை - 20% (குறைக்கப்பட்டுள்ளது)
12.5 லட்சத்திலிருந்து 15 லட்சம் வரை வருமானம் - 25% (குறைக்கப்பட்டுள்ளது)
15 லட்சத்துக்கு மேல் - 30% (குறைக்கப்படவில்லை)

பட மூலாதாரம், Getty Images
ஒருவர் 15 லட்சம் சம்பாதித்தார் என்றால் இதுவரை அவர் ஆண்டுக்கு 2.73 லட்சம் வரி செலுத்தினார். இனி புதிய வருமானவரி அறிவிப்புகளின்படி அவர் 1.95 லட்சம் ரூபாய் வரியாக கட்டுவார். இது முன்பை காட்டிலும் 78 ஆயிரம் குறைவு என்பது குறைப்பிடத்தக்கது. அவர், முறையான வரி விலக்குகளை பெற்றால் மேலும் அவரது வரி குறையும்.
குறைந்த விலை வீடு வாங்குவோருக்கு கடந்தாண்டு கூடுதலாக 1,50,000 ரூபாய் வருமான வரி விலக்கு பெற அனுமதிக்கப்பட்டிருந்தது. தற்போது, அதே திட்டம் மேலும் ஒராண்டுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள் வீழ்ச்சி அடைந்துள்ளன. மும்பை பங்குச் சந்தை 01.40 மணியளவில் 40,220 புள்ளிகளில் வர்த்தகமாகி வந்தது. தேசிய பங்குச் சந்தை 11,719 புள்ளிகளில் வர்த்தகமாகி வந்தது.
வருமான வரிவிதிப்பில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களால் மத்திய அரசுக்கு சுமார் 40,000 கோடி இழப்பு ஏற்படும்.
- நடப்பாண்டில் இருந்து இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு வரி விதிக்கப்படும். 2024க்குள் நாடு முழுவதும் 100 விமான நிலையங்கள் உருவாக்கப்படும்.
- குறைந்த விலை வீடு வாங்குவோருக்கு கடந்தாண்டு கூடுதலாக 1,50,000 ரூபாய் வருமான வரி விலக்கு பெற அனுமதிக்கப்பட்டிருந்தது. தற்போது, அதே திட்டம் மேலும் ஒராண்டுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
- ஆதார் எண் அடிப்படையில் எளிதான முறையில் பான் கார்டு வழங்கப்படும் .

பட மூலாதாரம், Getty Images
- 2023க்குள் 2 மிகப்பெரிய வர்த்தக வழித்தடங்கள் நிறைவேற்றப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்.
- இந்தியாவில் படிப்பதை ஊக்குவிக்கும் வண்ணம் ஆசிய, ஆப்ரிக்க மாணவர்களுக்காக SAT தேர்வு நடத்தப்படும் என்று நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.
- 2020-21-இல் ஜிடிபி வளர்ச்சி 10 இருக்கும் என நாங்கள் கணித்திருக்கிறோம் என்று நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.
- லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷனில் அரசு வசமுள்ள பங்குகளை விற்க முடிவெடித்திருப்பதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனத்தை எழுப்பினர்.
- இந்தியாவில் உள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த 5 இடங்களில் உலக தரத்தில் அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும்.. இதில் தமிழகத்தின் ஆதிச்சநல்லூர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்ற அறிவிப்பை நிதியமைச்சர் வெளியிட்டார்.
- பெண்களுக்கான திருமண வயது 18 என்று தற்போது உள்ள நிலையில், அதனை மீண்டும் ஆய்வு செய்து அந்த வயது வரம்பை அதிகரிக்க சிறப்பு ஆய்வு குழு அமைப்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
- 2025ஆம் ஆண்டுக்குள் காசநோய் ஒழிக்கப்படும்.
- வங்கி டெபாசிட் மீதான காப்பீடு தொகை ஒரு லட்ச ரூபாயிலிருந்து ஐந்து ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
- இந்தியாவில் வரி செலுத்துபவர்களின் நலன் பாதுகாக்கப்படும் . மத்திய அரசில் Non Gazeetted பணிகளில் தேசியளவில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஆட்சேர்ப்பு முகமை அமைக்கப்படும்.
- சென்னை - பெங்களூரு இடையே மற்றும் டெல்லி - மும்பை இடையே வர்த்தக வழித்தடங்கள் நிறைவேற்றப்படும் என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
- ஜி.எஸ்.டி ரிட்டன்ஸ் தாக்கல் செய்வதற்கு புதிய எளிய வழிமுறையை ஏப்ரல் 2020 முதல் அமலாகும் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் வெளியிட்டார்.
- 2022 ஆம் ஆண்டுக்குள் இந்திய விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும் என்று குறிப்பிட்ட அவர், 2020-2021 நிதியாண்டில், விவசாயத்துறை 2.83 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதாக தெரிவித்தார்.
- சுற்றுலாவை மேம்படுத்த தனியாருடன் இணைந்து நிறைய தேஜஸ் வகை ரயில்கள் இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
- அடுத்த 3 ஆண்டுக்குள் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் ஸ்மார்ட் மின்சார மீட்டர்களை பொருத்த மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- நபார்டுக்கான மறுமுதலீடு திட்டம் விரிவாக்கப்படும் என்று தெரிவித்த அவர், மீன் உற்பத்தியை 200 லட்சம் டன் என்ற அளவுக்கு அதிகரிக்க விவசாயத்திற்கும் பாசனத்திற்கும் 2.83 லட்சம் கோடி ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தனது உரையில் இது குறித்து பேசிய நிர்மலா சீதாராமன், ''ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டதிலிருந்து ஒவ்வொரு குடும்பமும் மாதம் 4 சதவீதம் வரை சேமிக்கிறது.ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து 60 லட்சம் பேர் புதிதாக வரி செலுத்தி உள்ளனர்'' என்று கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்துவரும் நிலையில், சரிவுடன்தொடங்கிய பங்கு சந்தைகள் தற்போது ஏற்றம் கண்டு வருகின்றன.
12 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 58 புள்ளிகள் உயர்ந்து 40,780 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகின்றது.
ஆத்திசூடியை மேற்கோள்கட்டிய நிர்மலா சீதாராமன்

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்துவரும் நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது உரையில் 'பூமி திருத்தி உண்' என்னும் அவ்வை ஆத்திச்சூடியின் வரிகளை மேற்கோள் காட்டினார்.
மேலும் காஷ்மீரி மொழியில் பட்ஜெட்டின் சில குறிப்புகளை வாசித்தார் நிர்மலா சீதாராமன்.
தனது உரையின் தொடக்கத்தில் "சலிமார் பூங்காவை போன்றது இந்தியா. தால் ஏரியில் உள்ள தாமரை மலரை போன்றது நம் நாடு, உலகத்திலேயே சிறந்த நாடு இது, " என்ற காஷ்மீர் கவிதையை இந்தியில் வாசித்தார் நிர்மலா சீதாராமன்
Budget 2020 Live:
நிர்மலா சீதாராமன் உரையின் முக்கிய அம்சங்கள்
- 2020-2021 நிதியாண்டில், விவசாயத்துறை 2.83 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளர் மத்திய நிதியமைச்சர்.
- சுகாதாரத்துறைக்காக 69,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு
- 2019ஆம் ஆண்டு மத்திய அரசின் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தில் 52.2 சதவீதத்திலிருந்து 48.7 சதவீதமாக குறைந்துள்ளது.
- வறுமையிலிருந்து 10 லட்சம் மக்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
- 1950ஆம் ஆண்டு இருந்த 4 சதவீத வளர்ச்சி, 2014-19ல் 7.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.
- ஏழைகளுக்கும், பொருளாதாரத்தின் பின்தங்கியவர்களுக்குமான பல திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன.
- ஜி.எஸ்.டியின் கீழ் 60 லட்சம் பேர் புதிதாக வருமான வரி செலுத்தி உள்ளனர்.
- இரண்டு ஆண்டுகளில் இந்திய விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது.
- விவசாயிகளின் நலனுக்காக 16 அம்ச திட்டங்களை மத்திய அரசு அமல்படுத்த உள்ளது.


பட்ஜெட் தாக்கல் தொடங்கியது

பட மூலாதாரம், RSTV
"இந்தியர்களின் வாங்கும் திறனை மேம்படுத்தவும், பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையிலும் பட்ஜெட் வடிவமைக்கப்பட்டுள்ளது" - நிர்மலா சீதாராமன்

தகவல் இல்லை
மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.Facebook பதிவின் முடிவு, 4

மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பட மூலாதாரம், Getty Images
மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ள பட்ஜெட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை

பட மூலாதாரம், Getty Images
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், மும்பை பங்குச்சந்தை 279.01 புள்ளிகள் குறைந்தன. தேசிய பங்குச்சந்தை 81.45 புள்ளிகள் குறைந்து 11,880.65 அளவுக்கு வர்த்தகம் ஆகி வருகிறது.

குடும்பத்துடன் நாடாளுமன்றம் வந்தார் நிதி அமைச்சர்
மகள் பரகலா உள்ளிட்ட குடும்பத்தினருடன் நாடாளுமன்றம் வந்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
மத்திய நிதிநிலை அறிக்கையின் அச்சடிக்கப்பட்ட தாள்கள் நாடாளுமன்றம் வந்தன.

மோதியும், அமித் ஷாவும் நாடாளுமன்றம் வந்தனர்

பட மூலாதாரம், Getty Images
இந்திய பிரதமர் அமித் ஷாவும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் நாடாளுமன்றம் வந்தனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2

நிதி அமைச்சகத்திலிருந்து நாடாளுமன்றத்துக்கு புறப்பட்டார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3


இந்திய பொருளாதார ஆய்வறிக்கை 2019-2020: முக்கிய அம்சங்கள் என்னென்ன?
பொருளாதாரத்தை பொறுத்த வரை 2019ஆம் ஆண்டு உலகிற்கே கடினமான ஆண்டு என்பதால் அது இந்திய பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை அரசு ஒப்புக் கொள்கிறது.

வாங்கும் திறன் கடந்த ஏழு ஆண்டுகளில் குறைவான நிலையில் உள்ளது
தற்போதைய பொருளாதார வளர்ச்சி விகிதமான 5%, கடந்த 11 ஆண்டுகளிலேயே மிகவும் குறைவான அளவு. தனிநபர் வாங்கும் திறன் கடந்த ஏழு ஆண்டுகளில் குறைவான நிலையில் உள்ளது.
கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முதலீடுகள் குறைந்துள்ளன. உற்பத்தி துறையின் வளர்ச்சி 15 ஆண்டுகளில் இல்லாத அளவு சரிந்துள்ளது.

முதல் பட்ஜெட்
இந்தியா காலணியாதிக்கத்தில் இருந்தபோது முதன் முதலில் 1860ஆம் ஆண்டு இந்தியாவுக்கு பட்ஜெட் தாக்கல் செய்தவர் ஜேம்ஸ் வில்சன். இவர் ஸ்டாண்டர்ட் சாட்டர்ட்வங்கியை நிறுவியவர் ஆவர்.

7 லட்சம் கோடி கடன் வாங்கி அதில் 6.6 லட்சம் கோடி வட்டி கட்டும் நிலை
கடந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 6.8%. கடந்த காலாண்டின் வளர்ச்சி விகிதம் 5.8%தான். ஆனால், இந்த வளர்ச்சி விகிதம் எல்லாமே, திருத்தப்பட்ட முறையின் கீழ் காட்டப்பட்ட வளர்ச்சி விகிதம். அதாவது, 2014ல் இந்த அரசு பொறுப்பேற்ற உடனே பொருளாதார வளர்ச்சியைக் கணக்கிடும் முறையை மாற்றி அமைத்தார்கள். உடனே வளர்ச்சிவிகிதம் 2 சதவீதம் அதிகரித்தது. கணக்கிடும் முறையை மாற்றிய உடனேயே எதுவுமே நடக்காமல் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 2 சதவீதம் அதிகரித்தது.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













