மியுகோர்மைகோசிஸ்: இந்தியாவை அச்சுறுத்தும் கருப்பு பூஞ்சை நோய் மருந்துக்கு தட்டுப்பாடு

பட மூலாதாரம், Getty Images
`கருப்பு பூஞ்சை` தொற்று என்று கூறப்படும் அரிய வகை மியுகோர்மைகோசிஸ் தொற்று சிகிச்சையில் பயன்படுத்தக்கூடிய ஆம்ஃபோடெரிசின்-பி என்னும் மருந்துக்கு இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஆம்ஃபோடெரிசின்-பி என்னும் அம்மருந்து இந்தியாவில் பல நிறுவனங்களால் தயாரிக்கப்படுகிறது. கள்ளச் சந்தையிலும் விற்கப்படுகிறது.
இந்தியாவில் மியுகோர்மைகோசிஸ் தொற்று அதிகரித்து வருவதால் இந்த மருந்து தேவை என உதவி கேட்டு பலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
கொரோனா தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்பட்ட ஸ்டீராய்டுகளால் இந்த தொற்று தூண்டப்படுகிறது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நோய் ம்யூகர் என்னும் பூஞ்சையால் ஏற்படுகிறது. இந்த பூஞ்சை மண், தாவரம், உரம் மற்றும் அழுகும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் தென்படும்.
இது சைனஸ்களையும், மூளை மற்றும் நுரையீரல்களையும் பாதிக்கும். மேலும் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும், புற்றுநோய் மற்றும் ஹெச்ஐவி அல்லது ஏய்ட்ஸ் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு நோயெதிர்ப்புக் குறைபாடுள்ள நபர்களுக்கும் இது ஆபத்தாக உள்ளது.
பலர் கண் பார்வையை இழக்க தொடங்கியபின் தாமதமாக சிகிச்சைக்கு வருவதால் இந்த தொற்று மூளைக்கு செல்வதை தடுக்க கண்களை அறுவை சிகிச்சை மேற்கொண்டு நீக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
கடந்த வாரம் இந்தியாவின் கொரோனா இரண்டாம் அலையால் மோசமாக பாதிக்கப்பட்ட மகாராஷ்டிர மாநிலத்தின் சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோபே, அம்மாநிலத்தில் இதுவரை கருப்பு பூஞ்சை தொற்றால் 1,500 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கடந்த வருடம் கொரோனா தொற்றின் முதல் அலை தொடங்கியபோதிலிருந்து இப்போதுவரை 52 பேர் இந்த நோயால் உயிரிழந்துள்ளனர் என மாநிலத்தின் மூத்த சுகாதார அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் கடந்த மாதம் மட்டும் 900 பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மருந்துக்கு தட்டுப்பாடு

பட மூலாதாரம், TWITTER
உத்தர பிரதேசத்தில் உள்ள காசியாபாத் நகரில் உள்ள பெரிய மருந்தகத்தின் உரிமையாளர் ஒருவர், இதற்கு முன்னர் இந்த ஊசி எளிமையாக கிடைத்து வந்தது என்றும், இரண்டு மூன்று வாரங்களுக்கு முன் இதன் தேவை அதிகரித்த பின் இந்த மருந்து கிடைப்பது கடினமாகிவிட்டது என்றும் தெரிவித்தார்.
எனவே அந்நகர் முழுவதும் இந்த மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், சமூக வலைதளம் முழுவதும் அதற்கான கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
அம்ஃபோடெரிசின் - பி அல்லது `அம்ஃபோ-பி` என்பது பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு எட்டு வாரம் வரை தினமும் நரம்பில் செலுத்தப்பட வேண்டிய ஊசி ஆகும்.
இதில் ஸ்டாண்டர்ட் ஆம்ஃபோடெரிசின் டிஆக்சிகோலேட் மற்றும் லிப்சோமல் ஆம்ஃபோடெரிசின் என இரு வகை மருந்துகள் உள்ளன.
"லிபோசோமல் மருந்து பாதுகாப்பானது, அதிக திறன் மற்றும் குறைந்த பக்க விளைவுகளை கொண்டுள்ளதால் அதை அதிகமாக பயன்படுத்துகிறோம், இருப்பினும் அது விலை அதிகமானதாக உள்ளது" என மும்பையை சேர்ந்த மருத்துவர் அக்ஷய் நாயர் பிபிசியிடம் தெரிவித்தார்.
இந்த மியுகார்மைகோஸிஸ் நோய் குடும்பங்களின் மீது மேலும் அதிக நிதிச் சுமையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான சிகிச்சைக்கு ஆயிரக்கணக்கில் செலவழிக்க வேண்டும். மேலும் கள்ளச் சந்தையில் மருந்து வாங்க வேண்டும் என்றால் அது மேலும் கடினம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












