ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக திறக்க அனுமதித்ததற்கு எதிராக கோலம்

ஸ்டெர்லைட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் கோலம்

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி வழங்கிய மத்திய மாநில அரசுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பண்டாரம்பட்டி கிராமத்தில் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி, வீட்டு வாசல்களில் BAN STERLITE என கோலமிட்டு அப்பகுதி கிராம மக்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி அளிப்பதை கண்டித்து இன்று கருப்பு தினமாக அனுசரிக்க ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு அழைப்பு விடுத்தது.

ஸ்டெர்லைட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் கோலம்

இதனால் வீடுகள் முன்பு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோலமிடவும், தெருக்களில் கருப்பு கொடி கட்டவும், சட்டைகளில் கருப்பு பேட்ஜ் அணிந்து வேலைக்கு செல்லவும், வாட்சாப் உள்ளிட்ட தளங்களில் மாலை மூன்று மணி நேரம் மட்டும் கருப்பு நிறத்தில் புரொஃபைல் படம் வைக்கவும் கேட்டு கொள்ளப்பட்டது.

இதைத்தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி வழங்கிய மத்திய மாநில அரசுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பண்டாரம்பட்டி கிராமத்தில் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி, வாசல்களில் BAN STERLITE என கோலமிட்டு தங்கள் எதிர்ப்புகளை அப்பகுதி கிராம மக்கள் பதிவு செய்து வருகின்றனர்.

ஸ்டெர்லைட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் கோலம்

தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி அளித்ததை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: