தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அரசியல் வரலாறு: அதிரடித் திருப்பங்கள், சுவாரசிய சம்பவங்கள்

தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடக மாநிலத்தின் சில பகுதிகள், கேரளாவின் மலபார் பகுதிகளை உள்ளடக்கியிருந்த சென்னை மாகாணம்.

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டின் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் ஒரு தனித்துவமான அரசியல் பின்னணியும், வரலாறும் உண்டு.

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல்கள் நடந்த வரலாறு, அவற்றுக்கு முன்பும், பின்பும் நடந்த முக்கிய அரசியல் நிகழ்வுகள் ஆகியவற்றை இன்றைய இளைஞர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் தொடர் கட்டுரைகளாக வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழ்.

அந்த வகையில் 1952 முதல் 2001 வரை நடந்த தேர்தல்களின் சூழல், முடிவுகள், முக்கியத்துவம் ஆகியவற்றை பிபிசி தமிழின் இந்தப் பக்கத்தில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

1952 - சென்னை மாகாணத்துக்கு சுதந்திரத்தின் பின் முதல் தேர்தல்

இந்தியா விடுதலை அடைந்த பிறகு தமிழ்நாட்டை உள்ளடக்கிய சென்னை மாகாணத்தில் நடந்த முதல் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருந்தபோதும் காங்கிரஸ் ஆட்சியை அமைத்தது எப்படி?

1957 - தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசும் பகுதிகள் பிரிந்த பின்

காமராஜர் அறிஞர் அண்ணா

தேர்தல் நெருங்கியபோது சென்னை மாகாணத்தின் நிலப்பரப்பு பலவகைகளில் மாறியிருந்தது. 1953ல் ஆந்திரப்பிரதேசம் தனி மாநிலமாக உருவானபோது, சென்னை மாகாணத்தின் தெலுங்கு பேசும் மாவட்டங்கள் அதனுடன் சென்றன. பிறகு, கன்னடம் பேசும் பகுதிகள் மைசூருடன் இணைந்தன. திமுக முதல் முறையாகத் தேர்தலை சந்தித்தது.

1962 - மாற்றங்களுக்கான முன்னோட்டம்

காமராஜர் தலைமையில் காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றிபெற்றாலும், தமிழ்நாடு எதிர்கொள்ளவிருந்த மாற்றங்களை முன்னறிவிக்கும் தேர்தலாக அந்தத் தேர்தல் அமைந்தது.

1967 - திராவிட அரசியல் வெற்றியின் தொடக்கம்

அண்ணாவும் பெரியாரும்

1967 நெருங்கியபோது தமிழக அரசியல் களம் ஒரு மாற்றத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தது. 1967ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த சட்டமன்ற தேர்தல், தமிழக வரலாற்றில் ஒரு திருப்புமுனைத் தேர்தலாக மாறியது எப்படி? சுதந்திரத்திற்குப் போராடிய காங்கிரஸை விட்டு, தி.மு.கவை தமிழ்நாடு மக்கள் தேர்ந்தெடுத்தது ஏன்?

1971 - கருணாநிதி, எம்.ஜி.ஆர் திமுகவில் ஒன்றாக

இதுவரை நடந்த தேர்தல்களில் தி.மு.க. அதிக இடங்களைப் பிடித்தது இந்தத் தேர்தலில்தான். ஆனால், தி.மு.க. உடைவதற்கான வித்தும் இந்த வெற்றியில் இருந்தது.

1977 - தமிழ்நாடு முதல்வரானார் எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர்.

1977ஆம் ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் எம்.ஜி.ஆர். துவங்கிய அ.தி.மு.க, சந்தித்த முதல் தேர்தலிலேயே அபார வெற்றி பெற்றது. புதிதாக ஆரம்பித்த ஒரு கட்சி இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றது இந்தியா முழுவதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

1980 - மீண்டும் வென்ற எம்.ஜி.ஆர்

1979ல் தி.மு.க - அ.தி.மு.க. ஆகிய கட்சிகளை இணைப்பதற்கான முயற்சிகள் ஜனதா கட்சித் தலைவரான பிஜு பட்நாயக் தலைமையில் நடைபெற்றன. ஆனால், அதில் வெற்றி கிடைக்கவில்லை.

1984 - அதிமுக வெல்ல அனுதாப அலை காரணமா?

1980ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்றிருந்த எம்.ஜி.ஆர். இந்த இரண்டாவது ஆட்சிக் காலத்தில் சில வரவேற்கத் தக்க நடவடிக்கைகளை செய்தார் என்றாலும், கடுமையான விமர்சிக்கத்தக்க நிகழ்வுகளும் இந்த ஆட்சிக் காலத்தில் நடந்தேறின.

1989 - எம்.ஜி.ஆர். இறந்த பிறகு

இத்தனை தேர்தல்களில் அ.தி.மு.கவுக்கு வெற்றிதேடித் தந்த இரட்டை இலை சின்னம் இந்தத் தேர்தலில் முடக்கப்பட்டிருந்தது. அ.தி.மு.கவின் ஜானகி அணியும் ஜெயலலிதா அணியும் தங்களுக்குத்தான் அந்தச் சின்னம் வேண்டுமெனக் கோரியதால் இந்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுத்திருந்தது.

1991 - ஜெயலலிதா முதலில் ஆட்சிக்கு வந்தது எப்படி?

13 ஆண்டுகளுக்குப் பிறகு உருவான தி.மு.க. ஆட்சி இரண்டே ஆண்டுகளில் கலைக்கப்பட்டு, மீண்டும் நடந்த தேர்தலில் ஜெயலலிதா முதல் அமைச்சரானார். 1991ஆம் ஆண்டு தேர்தலில் நடந்த திருப்பு முனை சம்பவங்கள் என்ன?

ஜெயலலிதா

பட மூலாதாரம், Getty Images

1996 - காங்கிரசில் அதிரடிப் பிளவு:திமுகவின் அமோக வெற்றி

ஜெயலலிதாவின் முதலாவது ஆட்சிக்காலத்தில் பத்திரிகைகள் கடும் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டன. நக்கீரன், தினகரன், "இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி", "முரசொலி", "மாலை முரசு" ஆகிய பத்திரிகைகள் மீது வழக்குகள் தொடரப்பட்டன.

2001 - வீழ்ச்சியிலிருந்து மீண்ட ஜெயலலிதா

1996லிருந்து ஐந்தாண்டுகள் பெரிய புகார்கள் இல்லாமல் ஆட்சி நடத்திய தி.மு.க, 2001ஆம் ஆண்டுத் தேர்தலில் ஆட்சியை இழந்தது. ஊழல் புகார்கள், கைது நடவடிக்கைகளுக்கு உள்ளாகியிருந்த ஜெயலலிதா எல்லாவற்றிலிருந்தும் மீண்டுவந்து ஆட்சியைப் பிடித்தார். இது நடந்தது எப்படி?

2006 - முதல் 'மைனாரிட்டி' அரசு

2006ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. அரசு, ஐந்தாவது முறையாக ஆட்சியில் அமர்ந்தது. ஜெயலலிதா ஏன் ஆட்சியை இழந்தார்? தி.மு.கவுக்கு ஏன் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை? ஒரு பரபரப்பான ஐந்தாண்டுகளின் கதை இது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: