"ஆயிரம் விளக்கு திமுகவின் கோட்டை அல்ல" - பாஜக வேட்பாளர் குஷ்பு பேட்டி

குஷ்பூ

பட மூலாதாரம், @kushsundar

படக்குறிப்பு, குஷ்பூ

சிறுவயது முதல் சவால்களை மட்டுமே சந்தித்து பழகிய தனக்கு, முதல் முறையாக தேர்தலில் போட்டியிடுவதில், அதிலும் திமுகவின் பலம் பொருந்திய ஆயிரம் விளக்கு தொகுதியில் களமிறங்குவதில் எந்த ஆச்சரிமும் இல்லை என்கிறார் பாஜகவின் நட்சத்திர வேட்பாளர் குஷ்பு.

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் அரசியல் பணிகளை செய்துவந்தாலும், அவருக்கு இறுதியில் ஆயிரம் விளக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. திமுக இளைஞரணி தலைவரான உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட தயார் என சவால் விட்டிருந்தார்.

ஆனால் ஆயிரம் விளக்கு தொகுதியில் மருத்துவர் எழிலனை எதிர்த்துப் போட்டியிடுகிறார் குஷ்பு.

அரசியல்வாதியாக தன்னை வளர்த்தெடுக்க அவர் சந்தித்த சவால்கள், பாஜகவில் கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பு, முதல்முறை தேர்தலில் களத்தை எதிர்கொள்வது என பிபிசி தமிழ் செய்தியாளர் பிரமிளா கிருஷ்ணனின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார் குஷ்பு. அவரது பேட்டியில் இருந்து...

கே. முதல்முறையாக தேர்தலில் போட்டியிடுகிறீர்கள். அதுவும் திமுகவின் பலம்வாய்ந்த ஆயிரம் விளக்கு பகுதி உங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜகவில் சேர்ந்த சில நாட்களில் உங்களுக்கு தேர்தலில் பங்கெடுக்க வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள். கடினமான பணியை கொடுத்துவிட்டதாக நினைக்கிறீர்களா?

சிறுவயதில் இருந்து சவாலான காரியங்களை வென்று காட்டியிருக்கிறேன். நான் முதன்முதலில் சினிமாவில் நுழைந்தபோது, நான் வெற்றி பெற மாட்டேன் என பலரும் ஆருடம் சொன்னார்கள். தடைகளை தகர்த்தேன். திறமையால் முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ்பெற்றேன். வெற்றிபெற்ற நடிகை மற்றும் தயாரிப்பாளராகினேன். எனக்கு ரசிகர்கள் கோயில் கட்டினார்கள். தனிப்பட்ட வாழக்கையில், எனக்கு திருமண வாழ்க்கை அமையாது என பலரும் விமர்சித்தார்கள். அந்த வசைச்சொற்களையும் வீழ்த்தினேன்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

சுந்தர் சி யுடன் அமைதியான வாழக்கையை நடத்துகிறேன். என் இரண்டு பெண் குழந்தைகளுக்கும் நல்ல அம்மாவாக இருக்கிறேன். திமுக, காங்கிரஸ் என இரண்டு கட்சிகளுக்கும் பல சவால்களை கடந்து பணியாற்றினேன். எனக்கான வேலைகளை நான் செய்தாலும், அங்கீகாரம் கிடைக்கவில்லை.

மாறாக பாரபட்சம் மற்றும் அச்சுறுத்தல்கள் அதிகரித்தன. அதனால், பாஜகவில் இணைந்தேன். தற்போது ஆயிரம் விளக்கு தொகுதி மீதே என் முழு சிந்தனையும் உள்ளது. இதிலும் வென்று காட்டுவேன். இந்த தொகுதி திமுகவின் கோட்டை என்றிருந்தால் ஏன் திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த இரண்டு தேர்தல்களிலும் கொளத்தூரில் போட்டியிட்டார்? இந்த முறை நடக்கும் போட்டி யாருக்கு ஆயிரம் விளக்கு தொகுதியில் செல்வாக்கு உள்ளது என்பதைக் காட்டும்.

கே. திமுக. காங்கிரஸ் கட்சிகளில் பாரபட்சம், அச்சுறுத்தல்களை சந்தித்ததாக கூறுகிறீர்கள். என்னவிதமான சிக்கல்கள் என சொல்லமுடியுமா?

பெண் தலைவர்கள் தலையெடுக்கிறார்கள் என்பது ஆண்களுக்கு ஒருவித பாதுகாப்பற்ற தன்மையை ஏற்படுத்துகிறது. திமுக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளிலும் பாரபட்சம், அச்சுறுத்தல் ஆகியவற்றை நான் சந்தித்திருக்கிறேன். என்னை பற்றிய செய்திகள் வெளியாவதை அவர்கள் அதிகம் விரும்பியதில்லை. பத்திரிகைகளில் என் புகைப்படம் வருவது, என்னை சந்திக்க தொண்டர்கள் வருவது அல்லது பொது கூட்டங்களில் எனக்காக மக்கள் கூடுவது ஆகியவற்றை பல நேரங்களில் ஆண் உறுப்பினர்கள் விரும்பியதில்லை. நான் ஏற்கனவே சினிமா துறையில் வெற்றி பெற்ற பெண். நான் பெயரும், புகழும் சம்பாதித்துள்ளேன். எனக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை திறமையாக செய்தாலும், சில உறுப்பினர்களால் அதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. என் வெற்றியை பார்த்து ஆண் உறுப்பினர்கள் அச்சம் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஒருவித பாதுகாப்பற்ற தன்மையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். எனக்கான பயணம் நீண்டது. பாஜகவில் வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள். என் திறமையை இங்கு நிரூபிப்பேன்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

ஆயிரம் விளக்கு தொகுதியில் உங்கள் பிரச்சாரம் என்ன வகையில் இருக்கும்? உங்கள் வியூகம் என்ன?

ஆயிரம் விளக்கு தொகுதி திமுகவின் கோட்டை என்பது வரலாறு ஆகிவிட்டது. நான் ஆயிரம் விளக்கு தொகுதியின் முக்கிய பிரச்னைகளை கண்டறிந்துள்ளேன். அங்கு பல காலமாக திமுக கோலோச்சியிருந்தாலும், வறுமை குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு முறையான கல்வி என்பது எட்டாக்கனியாக இருக்கிறது.

இந்த பிரச்னையை நான் சரிசெய்வேன். நான் ஒரு பெண், ஒரு குடும்பத்தின் பிரச்னைகள் என்ன என ஒரு இல்லத்தரசியாக, ஒரு தாயாக எனக்கு நன்றாக தெரியும். நான் தற்போது வசதியான வாழக்கையை வாழ்கிறேன். ஆனால் என் சிறு வயது முதல் ஏழ்மை, வறுமையை அறிந்திருக்கிறேன். அதனால் கல்வி மூலம் குழந்தைகளின் எதிர்காலம் எவ்வாறு மேம்படும் என்பதை அவர்களுக்கு உணர்த்துவேன். கல்வி தேவைகளை பூர்த்திசெய்வேன் என்ற உறுதியுடன் வாக்காளர்களை சந்திப்பேன்.

நீங்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்த சமயத்தில் பாஜக தொண்டர்கள் பலர் உங்களை சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்திருக்கிறார்கள். இப்போது உங்களை பற்றிய பிம்பம் பாஜகவினரிடையே மாறியுள்ளதா?

அரசியலில் நிரந்தர நண்பர்கள், எதிரிகள் என யாரும் இல்லை. பாஜகவை திமுக தங்களுடைய எதிரி என்கிறார்கள் . ஒரு காலத்தில் பாஜகவோடு கூட்டணியில் அவர்கள் இருந்தார்கள். அதேபோல கேரளாவில் இடதுசாரி கட்சிகளை காங்கிரஸ் எதிர்க்கிறது. ஆனால், கொல்கொத்தாவில் காங்கிரஸ், இடதுசாரியுடன் சேர்ந்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியை எதிர்க்கிறது. இதில் யார், யாருக்கு எதிரி? அரசியலில் எதிரி என யாரும் இல்லை. எதிர்க்கட்சியாக இருக்கலாம். யாரும் யாருக்கும் எதிரி இல்லை.

ஒரு நடிகையாக தேர்தல் காணும் உங்களுக்கு சக நடிகர்களின் ஆதரவு கிடைக்குமா? குறிப்பாக ரஜினிகாந்த் அல்லது மநீம கட்சித் தலைவர் கமல் ஹாசன் போன்றோர் ஆதரவு தருவார்களா?

அரசியலில் யாருடைய ஆதரவையும் எதிர்பார்த்து நாம் இருக்கக்கூடாது. எல்லோரிடமும் நன்மதிப்பு கிடைத்தால் போதும். எனக்கு நேரடியாக ஆதரவு தரவேண்டியதில்லை. ஆனால் அவர்கள் மனதின் ஓரத்தில் நான் ஜெயித்தால் நல்லது என்று அவர்கள் நினைத்தால் போதும். கமல் ஹாசன் எனக்கு 30 ஆண்டு கால நண்பர். தற்போது அவர் பாஜகவை எதிர்த்துப் போட்டியிடுகிறார். ஆனால், நண்பர் என்ற முறையில் நான் அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன், அவரும் எனக்கு வாழ்த்து தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :